என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • கடந்த 25-ந் தேதி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • காணாமல் போன இளம்பெண்ணை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நானக் ராம்குடாவை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்தினருடன் கோவில் தொட்டி என்ற பகுதியில் வசித்து வந்தார்.

    இளம்பெண் கட்டுமான வேலை செய்து வந்தார். மேலும் அவ்வப்போது பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து கடைகளில் விற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    காணாமல் போன இளம்பெண்ணை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கட்டிடத்தில் உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது கட்டிடத்தில் கீழ் பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் மாயமான இளம்பெண் நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் இளம்பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண்ணை மர்ம நபர்கள் கடத்தி வந்து பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து குடிநீர் தொட்டியில் வீசி உள்ளனர். குற்றவாளிகளை தேடி வருகிறோம்.

    பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என கூறினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்.
    • பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழா நடைபெற உள்ளன.

    வருகிற செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

    பிரமோற்சவ விழா போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி கூறியதாவது:-

    செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின் முதல் நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கை வழங்குகிறார்.

    வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.

    மேலும் வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. அறைகள் முன்பதிவு அன்னபிரசாதம் லட்டுகள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்.

    பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மகாமுனி ஜெயந்தியை ஒட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,132 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 963 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ஒற்றை யானை கணவன், மனைவியை மிதித்து கொன்றது.
    • விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர்.

    சித்தூர்:

    சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). விவசாயி. இவரது மனைவி செல்வி.

    இவர்களுக்கு வனப்பகுதியொட்டி சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இன்று காலை வெங்கடேசும், செல்வியும் விவசாய பணியில் ஈடுபட நிலத்திற்கு சென்றனர்.

    அப்போது விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை வந்தது. இதனைக் கண்டவுடன் கணவன், மனைவி கூச்சலிட்டபடி அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

    அவர்களை விடாமல் துரத்தி சென்று ஒற்றை யானை கணவன், மனைவியை மிதித்து கொன்றது.

    இது குறித்து சித்தூர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷ், செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    யானை மிதித்து கணவன், மனைவி இறந்த தகவல் அறிந்து அமைச்சர் ரோஜா சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளதால் அடிக்கடி விவசாய நிலத்திற்கு யானைகள் வந்து நிலங்களை சேதப்படுத்துகிறது.

    விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நோட்டுப் புத்தகத்தில் எதற்காக செல்போன் பயன்படுத்துகிறோம். அத்தியாவசிய காரணம் என்ன என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும்.
    • மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆன்லைனில் ஒரு சில பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    ஆந்திராவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பணி செய்யும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது.

    காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை செல்போன்களை வகுப்பறைக்குள் கொண்டு வர க்கூடாது.

    பணிக்கு வரும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் அங்குள்ள ஒரு அறையில் செல்போன்களை வைத்து விட்டு வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.

    செல்போன் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தால் கல்லூரி முதல்வர் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும்.

    அங்குள்ள நோட்டுப் புத்தகத்தில் எதற்காக செல்போன் பயன்படுத்துகிறோம். அத்தியாவசிய காரணம் என்ன என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும்.

    அவ்வாறு முன் அனுமதிபெறாமல் முதல் முறையாக செல்போன் பயன்படுத்தினால் எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

    செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆன்லைனில் ஒரு சில பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரசின் இந்த முடிவால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாப்ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கதிரி நகரை சேர்ந்தவர் பாப் ஜான். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பாப்ஜான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகளை 3 மாதமாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    சிறுமியின் தாய் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனைக் கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.

    டி.எஸ்.பி. லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாப் ஜான் தனது மகளை பலாத்காரம் செய்தது உறுதியானது.

    போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாப்ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை அனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த பாப் ஜானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆந்திர அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

    • எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
    • தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆனது.

    வங்கிக் கணக்கில் பணம் வந்தது குறித்து அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.

    இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

    ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர்.

    இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரி பார்த்தனர்.

    இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

    • ஒரு பெரிய பாறைக்கு அடியில் பித்தளை சொம்பு ஒன்று கிடைத்தது.
    • புதையல் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கு பங்கு கிடைக்காததால் வருண் ஆத்திரம் அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சித்தே பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித், அமரன், வருண் இவர்கள் கடந்த மே மாதம் அதே கிராமத்தில் உள்ள மலை பகுதியில் தேன் எடுக்க சென்றனர்.

    அவர்களுடன் அதே ஊரை சேர்ந்த சுப்பிர மணியம், வெங்கடேஸ்வரன் ஆகியோரும் சென்றனர்.

    அங்குள்ள கம்மா கோவில் அருகே பாறைகளில் தேன்கூடு உள்ளதா என தேடி பார்த்தனர். அப்போது ஒரு பெரிய பாறைக்கு அடியில் பித்தளை சொம்பு ஒன்று கிடைத்தது.

    அதை உடைத்த போது அதில் மண் கலந்த தங்க காசுகள் இருந்தன. அதனை கண்டதும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சொம்பில் இருந்தது தங்கப் புதையல் என்பதை அவர்கள் ஊர்ஜிதம் செய்தனர். உறவினர்களான அஜித், அமரன், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்க நாணயங்களை எடுத்துக்கொண்டு காலி சொம்பை ஏரியில் வீசினர்.

    மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என வருணையும், சுப்பிரமணியத்தையும் மிரட்டினர். இதற்கிடையில் வருண் தங்க காசுகளை தெரியாமல் செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டார்.

    இதையடுத்து அஜித், அமரன் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தங்க நாணயங்களை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பல லட்சம் ரூபாய்க்கு தங்க காசுகளை விற்பனை செய்து பணத்தை பெற்றனர் அதில் சுமார் 770 கிராம் தங்கத்தை உருக்கி நகைகள் செய்து கொண்டனர்.

    தங்கத்தை விற்பனை செய்த ரூ.4 லட்சம் பணத்தில் பழைய சொகுசு கார் மற்றும் ஆட்டோ வாங்கினர். மேலும் தனது சகோதரி மகளிர் குழு மூலம் வாங்கிய ஒரு லட்சம் கடனை அடைத்தனர்.

    தொடர்ந்து 3 பேரும் உல்லாசமாக வாழ தொடங்கினர். புதையல் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கு பங்கு கிடைக்காததால் வருண் ஆத்திரம் அடைந்தார்.

    மேலும் அவர்களை காட்டி கொடுக்க முடிவு செய்தார். தனது செல்போனில் வைத்திருந்த தங்கக் காசுகள் படத்தை அவரது சகோதரியிடம் காண்பித்தார்.

    மேலும் இது குறித்து நெல்லூர் மாவட்ட கலெக்டரிடம் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து புதையலாக கிடைத்த பொருட்களை மீட்க உத்தரவிடப்பட்டது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித், அமரன், வெங்கடேஸ்வரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதையலில் இருந்த தங்க காசுகளை விற்பனை செய்ததும் நகைகளாக மாற்றி வைத்திருப்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்து சென்னையில் விற்கப்பட்ட தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 14 லட்சம் பணம், 21 பவுன் தங்கம் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 436 சிறிய தங்க நாணயங்கள் 63 பெரிய தங்க நாணயங்கள், ஒரு சொகுசுகார் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-வது நாளான இன்று காலை பவித்திர மாலைகளுக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு வரும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவ யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 2-வது நாளான இன்று காலை பவித்திர மாலைகளுக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து அந்த பவித்திர மாலைகள் மூலவர் மற்றும் உற்சவருக்கு சமர்ப்பிக்கப்பட்டன. நாளை யாகசாலை பூஜையுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.

    இதனையொட்டி கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை இன்று ஏழுமலையான் கோவிலில் ரத்து செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    நேற்று 79 ஆயிரத்து 152 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,329 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.02 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • அலிபிரி நடைபாதையில் பல்வேறு இடங்களில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன.
    • திருப்பதியில் கடந்த 60 நாட்களில் 4-வது சிறுத்தை பிடிபட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் தந்தையுடன் சென்ற சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி தூக்கி சென்றது.

    அதனை சிறுவனின் தந்தை மற்றும் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவரும் விடாமல் விரட்டி சென்றதால் சிறுத்தை சிறுவனை வனப்பகுதியில் போட்டுவிட்டு சென்று விட்டது.

    சிறுவன் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தான். இதனையடுத்து கூண்டு அமைக்கப்பட்டது.

    அதில் சிறுத்தை ஒன்று சிக்கியது. கடந்த மாதம் அலிபிரி நடைபாதையில் பெற்றோரை விட்டு முன்னாள் வேகமாக ஓடிய 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி தூக்கி சென்று கொன்றது.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அலிபிரி நடைபாதையில் பல்வேறு இடங்களில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன.

    இதில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் பிடிபட்டன. நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    தினமும் 100 பேர் கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுவரை 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இதில் 7-வது மைல் கல் அருகே ஒரு சிறுத்தை கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடமாடி வந்தது. இந்த சிறுத்தை அந்த பகுதியில் உள்ள 50 கண்காணிப்பு கேமராக்களில் மாறி மாறி பதிவாகி இருந்தது. இதனைப் பிடிக்க 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுகள் வைத்திருந்தனர்.

    10 நாட்களாக தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிறுத்தை கூண்டுக்கு அருகில் வந்துவிட்டு உள்ளே செல்லாமல் பல நேரங்களில் தப்பி சென்றது.

    இந்த நிலையில் அலிபிரி 7-வது மைல்கல் அருகே வைக்கப்பட்ட கூண்டில் இன்று அதிகாலை சிறுத்தை சிக்கியது. இதனை வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பதி வன உயிரின பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    திருப்பதியில் கடந்த 60 நாட்களில் 4-வது சிறுத்தை பிடிபட்டுள்ளது. பிடிப்பட்ட 4 சிறுத்தைகளும் அங்குள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் வனப்பகுதியில் விடக்கூடாது என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அலிப்பரி நடைபாதை அருகே சுற்றித்திரிந்த 4 சிறுத்தைகளும் பிடிபட்டுவிட்டன. இங்கு மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் இல்லை. பக்தர்கள் அச்சமின்றி நடை பாதை வழியாக தரிசனத்திற்கு வரலாம் ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவஸ்தானம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தின் ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில், பாப்பையா என்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சாலைப் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த உமா என்கிற மின் ஊழியரை காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், போக்குவரத்து விதியை மீறியதால் மின் ஊழியருக்கு ரூ.135 அபராதம் விதித்துள்ளார்.

    இதனால், மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அபராதம் விதித்த ஆத்திரத்தில் நேராக அருகில் இருந்த காவல் உதவி மையத்தின் மின்கம்பத்தில் ஏறிய மின் ஊழியர் உமா மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் ஊழியரின் இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதைதொடரந்து, போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.
    • கடத்தல்காரர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடா சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து விஜயவாடா நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4.3 கிலோ எடையுள்ள தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கடத்தல் காரர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    மேலும் கடத்தலை மறைக்க தங்க கட்டிகள் மீது இருந்த அடையாளங்களை அழித்து உள்ளனர்.

    சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 6.8 கிலோ எடையுள்ள தங்க நகைகள், குவைத், கத்தார் ரியால், ஓமன் ரியாஸ் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் ரூ.1.5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தல்காரர்களை கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பதியில் நேற்று 71,0 73 பேர் தரிசனம் செய்தனர். 37,215 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
    • இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. வார விடுமுறையான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    நேற்று மாலை 7 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    இதனால் குளிர் காற்று வீசியது. தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் குளிரில் அவதி அடைந்தனர்.

    இன்று அதிகாலை மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,0 73 பேர் தரிசனம் செய்தனர். 37,215 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.67 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×