என் மலர்
ஆந்திர பிரதேசம்
- ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
- சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
- சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ககன்யான் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா பரமேஸ்வரியம்மன் கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆதித்யா எல்-1 மாதிரியை வைத்து சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-
ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முன் அம்மனின் அருள் பெறுவது வழக்கம். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டபோது அனைவரது ஆசீர்வாதமும் இருந்தது. சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
சுமார் 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்ய உள்ளது.
பூமியில் இருந்து சூரியனை நோக்கி 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாங்ரேஜியன் பாயின்ட்-1(எல்-1) சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்படும்.
சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ககன்யான் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது.
அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில், இன்சாட்-3டிஎஸ் ஜி.எஸ்.எல்.வி-மார்க்-2 மூலம் ஏவப்படும். எஸ்.எஸ்.எல்-வி ராக்கெட் அடுத்த மாதம் ஏவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
- நெல்லூரை சேர்ந்த ரசிகர்கள் பவன் கல்யாணுக்கு அவரது உருவ சிலையை பரிசாக வழங்க முடிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினர்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லூரை சேர்ந்த அவரது ரசிகர்கள் பவன் கல்யாணுக்கு அவரது உருவ சிலையை பரிசாக வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி கேரளாவை சேர்ந்த 4 சிலை வடிவமைப்பு கலைஞர்கள் மூலம் சேலத்தில் 470 கிலோ எடையுள்ள வெள்ளி பவன் கல்யாண் சிலையை வடிவமைத்தனர். 40 அடி நீளம், 25 அடி அகலத்தில் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வெள்ளி சிலையை நெல்லூர் நகர தலைவர் சுஜய் பாபு, ஜனசேனா தலைவர்கள் சென்னா ரெட்டி, மனு கிராந்தி ரெட்டி ஆகியோர் நடிகர் பவன் கல்யாணிடம் வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.
- பிசாசு மீன்கள் அதிகரித்து வருவதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நீர் நிலைகளில் வாழக்கூடிய 152 வகையான நல்ல மீன்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பிசாசு மீன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
திருப்பதி:
பிசாசு மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதனை டெவில் மீன் என அழைக்கின்றனர். பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்தது.
வலைகளில் சிக்கும் போது அதன் எலும்புகளால் வலைகளை கிழித்து விடும். மேலும் பெரிய வலைகளில் சிக்கும் பிசாசு மீன்களை அகற்றும் போது அது மீனவர்களை எளிதில் காயப்படுத்தும்.
பிசாசு வகை மீன்களை சாப்பிட முடியாததால் அதற்கு வணிக மதிப்பு இல்லை. இதனை விற்பனை செய்வதும் கிடையாது. பிசாசு மீன்கள் மற்ற நல்ல மீன் இனங்களை தின்று அழிக்கும்.
மற்ற மீன்களை கண்டால் உடனே அப்படியே விழுங்கி விடும். பிசாசு மீன்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் முதன் முதலில் இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து கிருஷ்ணா நதியில் இருந்து அதன் கிளை நதிகளுக்கும் பிசாசு வகை மீன்கள் பரவியது. தற்போது பிசாசு மீன்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 65 சதவீத நீர்நிலைகளில் பிசாசு மீன்கள் உள்ளன.
இதுகுறித்து ஆய்வு நடத்திய குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிசாசு மீன்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநில நீர் நிலைகளில் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.
பிசாசு மீன்கள் அதிகரித்து வருவதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நீர் நிலைகளில் வாழக்கூடிய 152 வகையான நல்ல மீன்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழலை கவலை அடைய செய்வதாக உள்ளது. பிசாசு மீன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதுகுறித்து லாகோன்ஸ் என்ற குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பிசாசு மீன் குறித்து எச்சரிக்கையும் அவர்கள் விடுத்துள்ளனர்.
- ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார்.
- சந்திரயான்-3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், நாளை காலை 11:50 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.
இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளதை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், "ஆதித்யா எல்1-க்கு பிறகு, எங்களின் அடுத்த இலக்கு ககன்யான் திட்டம். இதன் பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்படும்."
சந்திரயான்-3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.
- நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
- பல்வேறு இடங்களில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் தந்தையுடன் சென்ற சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி தூக்கி சென்றது.
அதனை சிறுவனின் தந்தை மற்றும் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவரும் விடாமல் விரட்டி சென்றதால் சிறுத்தை சிறுவனை வனப்பகுதியில் போட்டுவிட்டு சென்று விட்டது.
கடந்த மாதம் அலிபிரி நடைபாதையில் பெற்றோரை விட்டு முன்னால் வேகமாக ஓடிய 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது.
நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனை தொடர்ந்து அலிபிரி நடைபாதையில் பல்வேறு இடங்களில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன.
இதுவரை 4 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்தி வன உயிரின பூங்காவில் பராமரித்து வருகின்றனர்.
மலைப்பாதையில் சுற்றித்திரிந்த சிறுத்தைகள் அனைத்தும் பிடிக்கப்பட்டு விட்டன. பக்தர்கள் அச்சமின்றி கோவிலுக்கு வரலாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நடைபாதையில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிறுமி சிறுத்தையால் தாக்கி கொல்லப்பட்ட பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடியது.
இந்த சிறுத்தை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.
இதனை கண்டு தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தையை பிடிக்க மேலும் அந்த பகுதியில் கூடுதலாக கூண்டு வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. இதில் 10 சிறுத்தைகள் நடைபாதை பகுதியில் நடமாடிவருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.
சிறுத்தைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.
- பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், செப்டம்பர் 2-ந் தேதி (நாளை) காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.
- போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கடபராஜி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 21). கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானார்.
அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி. தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீனு சிறுமியிடம் நைசாக பேசி ஊருக்கு வெளியே உள்ள ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
மறைவான இடத்தில் வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை அருகில் இருந்த குளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி உயிர்த் தப்பி குளத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.
சிறுமியின் பாட்டி இதுகுறித்து போர்னாலா போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- காதலன் வாங்கி வந்த மதுவை தனது சகோதரி தீப்தியுடன் சேர்ந்து 3 பேரும் மது அருந்தினர்.
- சீனிவாஸ் ரெட்டி தனது 2 மகள்களுக்கும் போன் செய்தார். இருவரும் போனை எடுத்து பதில் அளிக்கவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கொருட்லாவை சேர்ந்தவர் சீனிவாஸ் ரெட்டி. அவரது மகள்கள் தீப்தி (வயது 24) சந்தனா. சாப்ட்வேர் என்ஜினியரான இருவரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தனர்.
கடந்த திங்கட்கிழமை ஐதராபாத்தில் உள்ள சீனிவாஸ் ரெட்டியின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன், மனைவி இருவரும் சென்றனர்.
வீட்டில் பெற்றோர் இல்லாததால் சந்தனா தனது காதலனுக்கு போன் செய்து வர வழைத்தார். அப்போது காதலன் வாங்கி வந்த மதுவை தனது சகோதரி தீப்தியுடன் சேர்ந்து 3 பேரும் மது அருந்தினர்.
மது போதை அதிகமானதால் தீப்தி வீட்டில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டார். இதன் பின்னர் சந்தனா தனது காதலனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். அன்று இரவு சீனிவாஸ் ரெட்டி தனது 2 மகள்களுக்கும் போன் செய்தார். இருவரும் போனை எடுத்து பதில் அளிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது சோபாவில் தீப்தி இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ் ரெட்டி இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது தீப்தியின் உடலில் காயங்கள் இல்லை.
சமையல் அறையில் மது பாட்டில்கள் இருந்தன. தீப்தியுடன் இருந்த சந்தனா காணாமல் போனதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. சந்தனாவின் போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது.
இந்நிலையில் சந்தனா தனது சகோதரர் சாய் என்பவருக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பினார். அதில் தீப்தி மரணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது காதலன் அவருக்கு மது ஊற்றி கொடுத்தார்.
கீர்த்திக்கு போதை அதிகமானதால் சோபாவில் படுத்துக்கொண்டார். அதன் பின்னர் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தோம். தீப்தியை நாங்கள் கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பதிவு செய்து இருந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து சந்தனாவையும் அவரது காதலனையும் தேடி வருகின்றனர்.
திட்டமிட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்ததால் தீப்தி இறந்தாரா? அல்லது வேறு யாராவது வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தனா போலீசில் சிக்கினால் தான் தீப்தியின் மரணம் குறித்த மர்மம் விலகும் என போலீசார் தெரிவித்தனர்.
- பிரம்மோற்சவத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்களின் வசதிக்காக மாட வீதிகளில் ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூரை அமைக்கப்படும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்நிலையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் உள்ள அன்னமைய்யா பவனில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு தர்மா ரெட்டி கூறியதாவது:-
பிரம்மோற்சவத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிகமானோர் சாமியை தரிசிக்கவும் வழி வகுக்கப்பட்டுள்ளது.
அதனால், பிரம்மோற்சவ நாட்களில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கான சிறப்பு தரிசனங்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, பி.சி. மற்றும் மீனவ பக்தர்கள் 1,000 பேருக்கு தினமும் இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.
செப்டம்பர் 22-ந் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடக்கிறது. அன்று திருப்பதியிலிருந்து திருமலைக்கு மோட்டார் பைக்குகள் வர தடை விதிக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக மாட வீதிகளில் ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூரை அமைக்கப்படும்.
பிரம்மோற்சவ வாகன சேவையின்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநில கலைஞர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மலைப்பாதையில் இப்போதைய நிபந்தனைகளே பிரம்மோற்சவத்திலும் பின்பற்றப்படும்.
ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 59,808 பேர் தரிசனம் செய்தனர். 25,618 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரமானது.
- மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், எம்.வி. பி காலனியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண்.
இவர் கொம்மாடியில் உள்ள குருகுல கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்து 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு பெற்றோருடன் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
பின்னர் மாணவி மீண்டும் கல்லூரிக்கு செல்ல தயாரானார். அப்போது தனது தாயிடம் தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி தருமாறு கூறினார்.
மாணவியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்று மாணவிக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வந்தார்.
தாய் வாங்கி வந்த தின்பண்டங்களை பார்த்த மாணவி தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை ஏன் வாங்கி வரவில்லை என வாக்குவாதம் செய்தார். பின்னர் வேகமாக மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர் கதறி துடித்தனர். மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திரா-ஒரிசா எல்லை பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன.
அதிகாலை வணிக வளாகம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென ஷாப்பிங் மால் முழுவதும் பற்றி எரிந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதற்குள் வணிக வளாகத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. தீயில் எரியக்கூடிய பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது யாராவது கடைகளுக்கு தீ வைத்து எரித்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






