என் மலர்
ஆந்திர பிரதேசம்
- வலையில் 2 கிலோ எடையுள்ள அரிய வகை மீனான புலாசா வகை மீன் சிக்கியது.
- மீனை நாகலட்சுமி என்ற பெண் ரூ.19 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலாமை சேர்ந்தவர் வானுமதி ஆதிநாராயணா. மீனவரான இவர் நேற்று மாலை அங்குள்ள ஆற்றில் மீன் பிடிக்க சென்றார்.
அப்போது அவரது வலையில் 2 கிலோ எடையுள்ள அரிய வகை மீனான புலாசா வகை மீன் சிக்கியது. அதனை மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏலம் விட்டார்.
அந்த மீனை நாகலட்சுமி என்ற பெண் ரூ.19 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். பின்னர் அந்த மீனை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் ரூ.26 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றார்.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- எல்.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் வருகிறது.
திருப்பதி:
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடந்தது.
சனாதன தர்மத்தை இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஊக்குவிக்கும் விதமாக தேவஸ்தானம் சில முக்கிய தீர்மானங்களை இந்த கூட்டத்தில் எடுத்துள்ளது. எல்.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதுவது போன்று "கோவிந்தா" நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால் அவர்கள் குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதே போல 10 லட்சத்து 1,116 முறை கோவிந்தா நாமத்தை எழுதி வருபவர்களுக்கு ஒருவருக்கு மட்டும் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் வருகிறது.
கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் அதிகநேரம் காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரமோற்சவ விழாவில் வாகன சேவைகள் மிக சிறப்பாக நடத்தப்படும்.
திருப்பதியில் 1952-ம் ஆண்டு பக்தர்களுக்காக கட்டப்பட்ட பழமையான சத்திரங்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் ரூ.600 கோடியில் அதிநவீன வசதியுடன் 20,000 பக்தர்கள் தங்கும் வசதியுடன் அச்சுதம் ஸ்ரீபாதம் என இரண்டு ஓய்வறைகள் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உசேனின் மாமனார், மாமியார் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சத்திய சாய் மாவட்டம், ஊது குருவை சேர்ந்தவர் உசேன். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
உசேன் கிழக்கு நகரில் உள்ள வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். இதனை அறிந்த அவரது மனைவி கள்ளக்காதலை கைவிட வேண்டும் என கணவரை எச்சரிக்கை செய்து வந்தார்.
மனைவியின் எச்சரிக்கையை மீறி உசேன் காதலியுடன் நெருக்கமாக பழகி வந்தார். உசேனின் மாமனார், மாமியார் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நேற்று காலை உசேன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு திலக் நகரில் உள்ள தனது காதலி வீட்டுக்கு சென்றார். இதனை கண்ட உசேனின் மாமனார், மாமியார் இதுகுறித்து தனது மகளுக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோருடன் உசேனின் கள்ளக்காதலி வீட்டிற்கு வந்த அவரது மனைவி இருவரையும் கையும் களவுமாக பிடித்தார்.
பின்னர் இருவரின் கைகளையும் பின்புறமாக கட்டி தலை முடியை பிடித்து தர தரவென இழுத்து சென்றார்.
இதனைக் காண அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடி நின்று ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்படுத்தியது.
- அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
- மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமும், 6 பேர் லேசான காயமும் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குருபம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
இதனால் மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர். பின்னர் தங்களது செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தனர். இதனால் 2 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இதனை அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- கத்தரி சீனிவாசராவ் இறால் பண்ணை குட்டையின் கரையில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார்.
- அதிசயமாக ஒரு சில இடங்களில் 2 கிளைகளுடன் தென்னை மரங்களை காணலாம்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், உன்ராயுடு பேட்டையை சேர்ந்தவர் கத்தரி சீனிவாசராவ். இவர் அதே பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருகிறார்.
இறால் பண்ணை குட்டையின் கரையில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு தென்னை மரம் மற்ற மரங்களைப் போல் வளர்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரத்தில் மற்றொரு கிளை உருவானது. நாளாக நாளாக மேலும் 4 கிளைகள் வந்தன. சாதாரணமாக தென்னை மரங்கள் ஒரே கிளையுடன் வளர்வது வழக்கம்.
அதிசயமாக ஒரு சில இடங்களில் 2 கிளைகளுடன் தென்னை மரங்களை காணலாம். ஆனால் அதிசயமாக இந்த மரத்தில் 6 கிளைகள் ஏற்பட்டது.
இதேபோல் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள குளக்கரையில் பனை மரம் ஒன்று 5 கிளைகளுடன் உள்ளது.
ஒரே ஊரில் 6 கிளைகளுடன் தென்னை மரமும், 5 கிளைகளுடன் பனை மரமும் உள்ளது.
இதனை அக்கம்பக்கம் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
- ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் கிடைத்த வருவாய் வங்கிகளில் டெபாசிட் செய்ததன் மூலம் ரூ.36 கோடி வட்டி கிடைத்து உள்ளது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 2,273 புதிய கோவில்கள் கட்டப்பட்டு உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பழமையான கோவில்களை புதுப்பிக்கவும் புதிய கோவில்களை கட்டவும் தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன்படி ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஸ்ரீ வாணி அறக்கட்டளையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் தரிசனம் மூலம் அந்த ஆண்டு 26.25 கோடி வருவாய் கிடைத்தது. 2020-ம் ஆண்டு ரூ 20.21 கோடியும், 20 21-ம் ஆண்டு ரூ 176 கோடியும், 2022-ம் ஆண்டு ரூ 282.64 கோடியும், 2023-ம் ஆண்டு 268. 35 கோடி என கடந்த 4 ஆண்டுகளில் ரூ.970 கோடி வருவாய் கிடைத்தது.
ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் கிடைத்த வருவாய் வங்கிகளில் டெபாசிட் செய்ததன் மூலம் ரூ.36 கோடி வட்டி கிடைத்து உள்ளது. இதனால் வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது.
ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் கிடைத்த வருவாயில் 176 பழமையான கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 2,273 புதிய கோவில்கள் கட்டப்பட்டு உள்ளது.
51 கோவில்களில் தினமும் பூஜை செய்ய மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீபாவை வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல் மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.
- மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா. அடிலாபாத் புறநகர் பகுதியான பங்கர் குடவை சேர்ந்தவர் அருண். தீபாவுக்கும், அருணுக்கும் கடந்த மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அருண் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தீபா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். திருமணமான புதிதில் இப்படித்தான் இருக்கும் சிறிது நாள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென அவரது பெற்றோர் தீபாவுக்கு அறிவுரை வழங்கினர்.
ஆனால் அருணின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் விரத்தி அடைந்த தீபா தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு செல்போனில் தெரிவித்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மகள் வீட்டிற்கு வந்த பெற்றோர் தீபாவை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 28-ந் தேதி மாமியார் வீட்டிற்கு வந்த அருண் மனைவியை இனிமேல் கொடுமை படுத்தாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தார்.
இதனை உண்மை என நம்பிய அவரது பெற்றோர் தீபாவை கணவருடன் அனுப்பி வைத்தனர். தீபாவை வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல் மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.
நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண் தீபாவின் தலையை சுவற்றில் மோதினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அருண் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தீபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் சரணடைய சென்றார். வீட்டில் பைக் இல்லாததை கண்ட அருணின் தந்தை ஜெயவந்த் ராவ் அருணுக்கு போன் செய்தார். அப்போது அருண் மனைவியை கொலை செய்து விட்டதாகவும் போலீசில் சரணடைய வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது ஜெயவந்த் ராவ் மகனை வீட்டிற்கு வருமாறு கூறினார்.
இதையடுத்து அருண் தனது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் அருண் ஓட்டிச் சென்ற பைக் மோதியது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருண் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கணவன் மனைவி 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்ய உதவியதாக அருணின் பெற்றோர் ஜெயவந்த் ராவ், லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
இதையடுத்து சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நடைபாதையில் செல்வதை தவிர்த்தனர். இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்தது.
கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை கண்டுபிடிக்க அவைகளின் நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரபணு பரிசோதனை வர தாமதம் ஆகி வருகிறது.
மரபணு பரிசோதனை அறிக்கையில் கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் சிறுத்தைகளை வனப்பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் அலிபிரி நடைபாதை அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி 15 ஆயிரம் கம்புகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. கம்புகள் வந்த பிறகு பக்தர்களுக்கு அலிபிரி நடைபாதையில் கம்புகள் வழங்கப்படும்.
முழங்கால் மெட்டு என்ற பகுதியில் பக்தர்களிடம் இருந்து கம்பு மீண்டும் பெறப்பட்டு அலிபிரி நடைபாதைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 81,655 பேர் தரிசனம் செய்தனர். 38,882 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3. 84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- முகமூடி கொள்ளையன் வங்கி முழுவதும் நகை பணம் ஏதாவது உள்ளதா என தேடி பார்த்தார்.
- முகமூடி கொள்ளையன் எழுதி வைத்த கடிதத்தை வங்கி அதிகாரிகள் படித்து பார்த்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. தனியாக வீடு வாடகை எடுத்து அதில் வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். லாக்கர் அறைக்கு சென்ற முகமூடி கொள்ளையன் அங்குள்ள லாக்கரை திறக்க முயன்றார். அவரால் லாக்கரை திறக்க முடியவில்லை. பின்னர் லாக்கரை உடைக்க முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை.
இதையடுத்து முகமூடி கொள்ளையன் வங்கி முழுவதும் நகை பணம் ஏதாவது உள்ளதா என தேடி பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த முகமூடி கொள்ளையன் சிரமப்பட்டு கதவை உடைத்து வந்தும் எதுவுமே கிடைக்கவில்லையே என வருத்தம் அடைந்தார்.
பின்னர் வங்கியில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து ஸ்கெட்ச் பேனா மூலம் இந்த வங்கியில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என்னை தேட வேண்டாம் என்னுடைய கைரேகை எதுவும் இங்கு பதிவு ஆகி இருக்காது.
இது ஒரு நல்ல வங்கி என அதிகாரிகளுக்கு தெலுங்கில் பாராட்டு கடிதம் எழுதிவிட்டு சென்றார். நேற்று காலை வங்கி திறக்க வந்த அதிகாரிகள் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் திறக்கப்படாமல் இருந்ததை கண்ட அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பின்னர் முகமூடி கொள்ளையன் எழுதி வைத்த கடிதத்தை வங்கி அதிகாரிகள் படித்து பார்த்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.
- ஆதித்யா எல் 1 புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
- ஆதித்யா விண்கலத்தின் நீண்ட பயணத்திற்கும் எல் 1 இன் ஒளிவட்ட சுற்றுப்பாதையைச் சுற்றி வருவதற்கும் வாழ்த்துகள்.
இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதைதொடர்ந்து, ஆதித்யா எல் 1 புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இது மிகவும் துல்லியமாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் 235 க்கு 19,500 கிமீ நீள்வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. இங்கே மிகவும் தனித்துவமான பணி முறை, பிஎஸ்எல்வி-ன் மேல் நிலை முதல் முறையாக முதன்மை செயற்கைக்கோளை உட்செலுத்துவதற்கு இரண்டு எரிப்பு காட்சிகளை எடுக்கும். எனவே இன்று மிகவும் வித்தியாசமான பணி அணுகுமுறைக்காக பிஎஸ்எல்வியை நான் வாழ்த்த விரும்புகிறேன்.
இப்போதிலிருந்து, ஆதித்யா-எல்1 அதன் பயணத்தை மேற்கொள்ளும். சில புவி சூழ்ச்சிகளுக்குப் பிறகு, அது எல்1 புள்ளிக்கு அதன் பயணத்தைத் தொடங்கும். இது மிக நீண்ட பயணம். கிட்டத்தட்ட 125 நாட்கள். எனவே ஆதித்யா விண்கலத்தின் நீண்ட பயணத்திற்கும் எல் 1 இன் ஒளிவட்ட சுற்றுப்பாதையைச் சுற்றி வருவதற்கும் வாழ்த்துகள்.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ரோவர் லேண்டரில் இருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் நகர்ந்துவிட்டது, மேலும் அது (சந்திர) இரவைத் தாங்கும் என்பதால், வரும் ஓரிரு நாட்களில் இருவரையும் தூங்கச் செய்யும் பணியைத் தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது.
இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
- சுரேஷ் இளம் பெண் குளிப்பதை எடுத்த வீடியோவை தனது செல்போனில் இருந்து அழித்தது தெரியவந்தது.
திருப்பதி:
பெங்களூரை சேர்ந்த 26 வயது இளம்பெண். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனது குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். கோவில் அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
இந்த விடுதியில் தொட்டம்பேடு மண்டலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை இளம் பெண்ணின் குடும்பத்தினர் லாட்ஜில் இருந்து வெளியே சென்றனர். இளம் பெண் மட்டும் லாட்ஜில் தனியாக இருந்தார்.
அப்போது இளம்பெண் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார்.
லாட்ஜ் ஊழியர் சுரேஷ் ஜன்னல் வழியாக இளம் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனைக் கண்ட இளம் பெண் கத்தி கூச்சலிட்டார். இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விடுதிக்கு விரைந்து வந்து சுரேஷை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
இதில் சுரேஷ் இளம் பெண் குளிப்பதை எடுத்த வீடியோவை தனது செல்போனில் இருந்து அழித்தது தெரியவந்தது.
போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவில் அருகே உள்ள விடுதியில் இதேபோல் ஊழியர் ஒருவர் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீண்டும் நிகழாமல் தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






