என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் 3 குழந்தைகளின் தாய் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
    X

    ஆந்திராவில் 3 குழந்தைகளின் தாய் துண்டு துண்டாக வெட்டிக் கொலை

    • கணவர் இறந்து விட்டதால் வெங்கடம்மா பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று குடும்பம் நடத்தி வந்தார்.
    • குழந்தைகள் அழும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், கஜ்வேல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடம்மா (வயது 40).

    இவரது கணவர் இறந்து விட்டார். 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் வெங்கடம்மா பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடம்மா தனது வீட்டில் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வெங்கடம்மாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தைகள் தாய் கால், கைகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்

    குழந்தைகள் அழும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கஜ்வேல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட்ம்மாவின் உடல் பகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடம்மா எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலையாளி யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×