என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி நடைபாதை பக்தர்கள் மலையடிவாரத்தில் பைகளை கொடுத்து கோவில் அருகே பெற வசதி
    X

    திருப்பதி நடைபாதை பக்தர்கள் மலையடிவாரத்தில் பைகளை கொடுத்து கோவில் அருகே பெற வசதி

    • நடைபாதை பக்தர்கள் உடமைகளை சுமந்து செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
    • திருப்பதியில் நேற்று 72,695 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் செல்போன்களை விரைவாகவும் எளிதாகவும் வைத்துவிட்டு திரும்பப்பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கவுண்டர்களுக்கு வந்ததும் தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் ஆட்டோமெட்டிக் முறையில் தானாக சேமிக்கப்படும்.

    தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு அவர்களின் விவரங்கள் மற்றும் பெயரை உள்ளீடு செய்து கியூ ஆர் கோடு ஜெனரேட் செய்யப்பட்டு பையில் இணைக்கப்படும். பக்தர்களுக்கு அதே கியூ ஆர் கோடு கொண்ட ரசீது வழங்கப்படும்.

    அதேபோல் செல்போன் டெபாசிட் செய்யும்போது கியூஆர் கோடு குறியுடன் இணைத்து ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும் பக்தர்கள் உடைமைகள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் தரிசனத்திற்கு வரும் நடைபாதை பக்தர்கள் தங்கள் உடமைகளை அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலையடிவாரங்களில் உள்ள தேவஸ்தான அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை மலைக்கு வந்து சேர்ந்துவிடும். இந்த நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி உடமைகளை ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ஆதார், செல்போன் எண்கள் மூலமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    பின்னர் கோவில் அருகே உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், ரூ.300 சிறப்பு தரிசன மையம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் தங்கள் உடமைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    இதன்மூலம் நடைபாதை பக்தர்கள் உடமைகளை சுமந்து செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 72,695 பேர் தரிசனம் செய்தனர். 27,060 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.44 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×