search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    எளிமையான பொருட்களை கொண்டு தயாரிக்கக்கூடியது பிஸ்கட் புட்டிங். மிகக்குறைந்த நேரத்தில் எந்த கால நிலையிலும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான சிற்றுண்டி இது
    தேவையான பொருட்கள்

    பாகு தயாரிப்பதற்கு


    சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
    தண்ணீர் - அரை மேஜைக்கரண்டி

    அரைப்பதற்கு

    ஏதாவது ஒருவகை பிஸ்கட் - 10 (பெரிதாக இருந்தால்) அல்லது 20 (சிறிதாக இருந்தால்)
    சர்க்கரை - அரை மேஜைக்கரண்டி
    ஏலக்காய் - 5

    புட்டிங் செய்வதற்கு

    முட்டை - 2
    நெய் - அரை மேஜைக்கரண்டி
    காய்ச்சி ஆற வைத்த பால் - 2 மேஜைக்கரண்டி

    செய்முறை

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    பாகு தங்க நிறத்தில் வரும் வரை காய்ச்சி, அதை அடிகனமான சிறிய பாத்திரத்தில் ஊற்றவும். பிஸ்கட், சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் மிக்சியில் போட்டு மாவு போல பொடித்து கொள்ளவும்.

    பின்பு அதை சலித்து எடுத்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து(முடிந்தால் முட்டை அடிக்கும் கருவி கொண்டு அடிக்கலாம்), அதனுடன் பிஸ்கட் கலவையை சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும். 2 நிமிடங்கள் கழித்து இந்த கலவையை சர்க்கரை பாகு இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி மூட வேண்டும்.

    பின்பு அடுப்பில் இட்லி குக்கரை வைத்து அதனுள் மூடி வைத்த முட்டை கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து பாத்திரத்தின் அடி தொடும் வரையில் குக்கரில் தண்ணீர் ஊற்ற விட வேண்டும். மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை கலவை வேக வேண்டும்.

    பின் அடுப்பை அணைத்து பிட்டு 15 நிமிடங்கள வரை புட்டிங்கை நன்றாக ஆறவிடவும். புட்டிங் உள்ள பாத்திரத்தின் ஓரங்களை கத்தியை கொண்டு பாத்திரத்தில் புட்டிங் ஒட்டாதவாறு இளக்கி கொள்ளவும். பிறகு பாத்திரத்தின் மேல் ஒரு தட்டை வைத்து பாத்திரத்தை அதன் மீது கவிழ்க்கவும்.

    இப்போது பார்ப்பதற்கே கண்ணை கவரும் வண்ணமாக வாயில் வைத்ததும் கரையும் வகையில் பிஸ்கட் புட்டிங் ரெடி.
    ஐரிஷ் காபி, எக்ஸ்ப்ரசோ, காப்பசீனோ, மோக்கசினோ, டர்கிஷ் காபி, பில்டர் காபி, டிகிரி காபி, டிக்காஷன் காபி என பல விதங்களில் காபி தயாரிக்கிறார்கள். அந்த வரிசையில் இங்கு நாம் பார்க்கப்போவது ‘மசாலா காபி’.
    நம்மில் பலர், காலைபொழுது விடிந்ததும் அந்த நாளை காபியுடன் தான் தொடங்குவோம். காபி உற்சாக பானமாகவும், ஆற்றலைத் தருவதாகவும் இருக்கும். உலகம் முழுவதும் காபி பிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள். 1,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய காபி, 17-ம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் நுழைந்தது. சர்வதேச காபி அமைப்பு மற்றும் உலக நாடுகளில் உள்ள காபி சங்கங்கள் இணைந்து அக்டோபர் 1-ந் தேதியை சர்வதேச காபி தினமாகக் கொண்டாடி வருகின்றன.

    காபியில் உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன. ஒரு நாளில் மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஐரிஷ் காபி, எக்ஸ்ப்ரசோ, காப்பசீனோ, மோக்கசினோ, டர்கிஷ் காபி, பில்டர் காபி, டிகிரி காபி, டிக்காஷன் காபி என பல விதங்களில் காபி தயாரிக்கிறார்கள். அந்த வரிசையில் இங்கு நாம் பார்க்கப்போவது ‘மசாலா காபி’.

    உடலுக்கு நன்மை செய்யும் மசாலா காபி செய்முறை இதோ:

    அரைப்பதற்கு தேவையானவை:

    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 துண்டு
    மிளகு - 4

    காபி தயாரிப்பதற்கு தேவையானவை:

    மேலே குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து அரைத்த பொடி - 2 டீஸ்பூன்
    பால் - 3 கப்
    தண்ணீர் - 1 கப்
    காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - தேவையான அளவு

    செய்முறை:


    அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    பால், தண்ணீர், அரைத்த பொடி மூன்றையும் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். அதை அடிப்பிடிக்காமல் அவ்வப்போது கலக்கவும்.

    காபி கலக்கும் கப்பில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு காபி பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    அதனுடன் கொதிக்க வைத்த பாலையும் சேர்த்துக் கலக்கினால், ‘மசாலா காபி’ ரெடி.
    விதவிதமான வகைகளில் செய்யும் இறால் உணவுகளைச் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்த வகையில் ‘இறால் பால்ஸ்’ எவ்வாறு சமைப்பது என்பதை இங்கு காணலாம்...
    தேவையான பொருட்கள்:

    இறால் - 500 கிராம்
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    முட்டை - 1
    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
    சோளமாவு - 2 தேக்கரண்டி
    ரொட்டித் தூள் / நுணுக்கிய பொறை - 8 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் பெரியது - 1
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:


    இறாலை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுடன், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    ஊறவைத்த இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில்  இறாலுடன் மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    முட்டையை சிறிய பாத்திரத்தில் நன்றாக அடித்துக் கலக்கவும். அதனை இறாலுடன் சேர்த்துக் கிளறவும்.

    பின்னர் அதில் சோள மாவு, 4 தேக்கரண்டி ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையை சேர்த்து நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

    இந்த இறால் உருண்டைகளை மீதமிருக்கும் ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் மென்மையாக உருட்டி  30 நிமிடங்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

    பின்பு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அது நன்றாக சூடானதும், அதில் இறால் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அதன் மேல் சிறிது கொத்தமல்லித் தழையைத் தூவவும்.

    இப்பொழுது மொறுமொறு இறால் பால்ஸ் தயார்.

    இதனுடன் சில்லி சாஸ் கலந்த மயோன்னசை சேர்த்து சாப்பிடலாம்.
    பள்ளியில் இருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    வெங்காயம் - 1
    பட்டன் காளான் - 300 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கியவுடன் காளான், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    காளான் நன்றாக வெந்தவுடன் அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் மினி சமோசா ரெடி!!
    குழந்தைகளுக்கு பூரி என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபி செய்வதும் மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று,
    கோதுமை மாவு - 200 கிராம்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். சூடான நீரில் காலிஃப்ளவரை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவு போல பிசையவும்.

    காலிஃப்ளவருடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மசிக்கவும்.

    கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக திரட்டி நடுவே காலிஃப்ளவர் கலவையை வைத்து மடித்து மீண்டும் திரட்டவும்.

    வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி ரெடி.

    குறிப்பு: இது சாதாரண பூரி போல உப்பி வராது. தட்டையாகவே இருந்தாலும், ருசி நன்றாக இருக்கும்.
    மொச்சையில் கூட்டு, காரக்குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மொச்சையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    தேவையான பொருட்கள் :

    உலர் மொச்சை - 100 கிராம்,
    சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
    துவரம்பருப்பு - 100 கிராம்,
    புளி - எலுமிச்சைப் பழ அளவு,
    தேங்காய்த் துருவல் - சிறிய கப்,
    கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும்.

    துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும்.

    தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும்.

    இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து குழம்பில் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான மொச்சை சாம்பார் ரெடி.
    பன்னீரை காலையில் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கும். இரவு நேரங்களில் சாப்பிடுவதால் நன்கு தூக்கம் வரும். இன்று பன்னீர் டோஸ்ட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 100 கிராம்
    மிளகாய் தூள் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    மிளகு தூள் - தேவைக்கு
    நெய் - 4 டீஸ்பூன்

    செய்முறை:

    பன்னீரை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.

    நறுக்கிய பன்னீரை மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

    வாணலியில் நெய்விட்டு உருக்கியதும் ஒவ்வொரு பன்னீர் ஸ்லைஸாகப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்...

    கடைசியாக அதன் மேல் மிளகுத்தூள் தூவி பரிமாறவும்

    சுவையான பன்னீர் டோஸ்ட் ரெடி..

    இந்த பன்னீர் டோஸ்ட்டை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் இரண்டு ஸ்லைஸ்களுக்கு நடுவில் கறி மசால் அல்லது வெஜ் கிரேவி வைத்தும் சாப்பிடலாம்.

    சப்பாத்தி, தோசை, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மீல் மேக்கர் கீமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீல் மேக்கர் - அரை கப்
    சோம்பு - கால் டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    மீல் மேக்கரை சூடான நீரில் போட்டு அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    அரை மணிநேரம் கழித்து நீரை நன்றாக பிழிந்து எடுத்து விட்டு மீல் மேக்கரை மிக்சியில் போட்டு துருவலாக பொடித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த பட்டாணி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து வரும் போது துருவிய மீல் மேக்கரை போட்டு நன்றாக கிளறவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது ‘பர்ஃபி’. நாவில் கரையும் வித்தியாசமான சுவை கொண்ட ‘வாழைப்பழ பர்ஃபி’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.
    பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது ‘பர்ஃபி’. அதன்  சுவையின் காரணமாக இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் ‘பர்ஃபி’யை விரும்பிச் சாப்பிடுகின்றனர். அந்த வகையில், நாவில் கரையும் வித்தியாசமான சுவை கொண்ட ‘வாழைப்பழ பர்ஃபி’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.

    தேவையான பொருட்கள்:

    நன்றாக பழுத்த வாழைப்பழம் - 3
    வெல்லம் -  100 கிராம்
    நெய் - 8 தேக்கரண்டி
    கோதுமை மாவு - 150 கிராம்
    ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
    பொடித்த பாதாம் - தேவையான அளவு

    செய்முறை:

    தோல் நீக்கிய வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில், வெல்லத்தைப் போட்டு அது கரையும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    பின்பு வேறொரு பாத்திரத்தில் 6 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கோதுமை மாவு சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். பின்பு அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழக் கலவையை அதில் கொட்டி 10 நிமிடங்கள் கிளறவும்.

    இப்போது அந்தக் கலவையில் வடிகட்டிய வெல்ல நீர் மற்றும் ஏலக்காய் தூளைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். பின்னர் அதன் மேல் 2 தேக்கரண்டி நெய் ஊற்றிக் கலந்து இறக்கவும்.  

    இந்தக் கலவையை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, பொடித்த பாதாமை அதன் மேல் தூவி, விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.

    இப்போது நாவில் கரையும் சுவையான ‘வாழைப்பழ பர்ஃபி’ தயார்.
    நாண், பூரி, சப்பாத்திக்கு அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி கீமா. பத்தே நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 3
    பச்சை பட்டாணி - 1/2 கப்
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிது

    தாளிக்க :

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 1
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    அன்னாசிப்பூ - 1
    பெரிய வெங்காயம் - 1

    செய்முறை  :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.

    தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.

    பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.

    பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா வாடை போனதும் அதனுடன்  துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.

    இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

    சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான முட்டை கீமா ரெடி.
    உணவுப் பொருட்களுடன் பால் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் ‘மலாய் சிக்கன்’ சுவை மிகுந்தது.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 500 கிராம் (எலும்பு நீக்கியது)
    தயிர் - 5 தேக்கரண்டி
    கறி மசாலாப் பொடி - 2 தேக்கரண்டி
    பூண்டு பெரியது - 2
    இஞ்சித் துண்டு - 1
    வெங்காயம் - 4
    மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
    சீரகம் - 2 தேக்கரண்டி
    தனியா - 2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 3
    வெண்ணெய் - 2 தேக்கரண்டி
    பிரெஷ் கிரீம் - 3 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயத்தை தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    மிதமான தீயில் அடிகனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

    பின்பு அதில் சிறிது வெண்ணெய் சேர்க்கவும், அது உருகியதும் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் அதனுடன் வெங்காய விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்னர் சுத்தப்படுத்திய கோழி இறைச்சியை அதில் சேர்க்கவும். இறைச்சி சற்று வதங்கியதும் தயிர், மிளகுப் பொடி, சீரகப்பொடி, கறி மசாலாப்பொடி, தனியாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்பு வாணலியை 10 நிமிடங்கள் மூடி தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.

    பின்னர் அதில் பிரெஷ் கிரீம், பச்சை மிளகாய் மற்றும் வெண்ணெய் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.

    இப்பொழுது வித்தியாசமான சுவையில் ‘மலாய் சிக்கன்’ தயார்.
    கிரில்லிங் முறையில் அன்னாசிப்பழத்தை கொண்டு தயாரிக்கும் அட்டகாசமான உணவுதான் அன்னாசிப்பழ பார்பிக்யூ. இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
    பார்பிக்யூ என்பது உணவுப்பொருளை நேரடியாக நெருப்பில் சுட்டு சமைக்கும் முறையாகும். உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பார்பிக்யூ முறையில் பெரும்பாலும் அசைவ உணவுகளே சமைக்கப்படுகின்றன. அதிலிருந்து மாறுபட்டு கிரில்லிங் முறையில் அன்னாசிப்பழத்தை கொண்டு தயாரிக்கும் அட்டகாசமான உணவுதான் அன்னாசிப்பழ பார்பிக்யூ. இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நன்றாக பழுத்த அன்னாசிப்பழம் - 1
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகுதூள் - கால் தேக்கரண்டி
    வறுத்து அரைத்த சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
    வெண்ணெய் - 2 தேக்கரண்டி
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    எலுமிச்சை பழச்சாறு - 1 தேக்கரண்டி
    தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
    லவங்கப்பட்டை தூள் - அரை தேக்கரண்டி
    பார்பிக்யூ குச்சிகள் - தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு

    செய்முறை

    அன்னாசி பழத்தை தோல் சீவிய பின்பு நடுவில் இருக்கும் கடினமான சதைப்பகுதியை நீக்கவும்.

    பிறகு பழத்தை சதுர வடிவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

    சர்க்கரையை மிக்சியில் போட்டு தூளாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள், சர்க்கரை, லவங்கப்பட்டை தூள், தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த கலவையில் அன்னாசிப்பழத்துண்டுகளை கொட்டி கிளறவும். பின்பு எலுமிச்சைம் பழச்சாறு ஊற்றி கலக்கவும்.

    பாத்திரத்தை காற்று புகாதவாறு மூடி இரவு முழுவதும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

    அடுத்த நாள் காலையில் அன்னாசிப்பழ துண்டுகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக பார்பிக்யூ குச்சியில் சொருகவும்.

    அடுப்பில் கிரில் செய்வதற்கான வாணலியை வைத்து அது சூடானதும் வெண்ணெயை போட்டு உருக வைக்கவும். பின்பு அதில் பார்பிக்யூ குச்சியில் சொருகப்பட்ட பழத்துண்டுகளை நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும்.

    இப்போது சுவையான அன்னாசிப்பழ பார்பிக்யூ தயார்.
    ×