என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
மாலை நேரத்தில் சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று ஆசையாக உள்ளதா? அப்படியானால் மீல் மேக்கர் கொண்டு அற்புதமான கோலா உருண்டை செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 1 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மீல் மேக்கரை வேக வைப்பதற்கு...
பால் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
மீல் மேக்கருடன் அரைப்பதற்கு...
சோம்பு - 3/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கசகசா - 3/4 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 1
செய்முறை:
வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் மீல் மேக்கரைப் போட்டு 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, 15 நிமிடம் அப்படியே ஊற வைத்து, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசிக் கொள்ளவும். பின் மீல் மேக்கரில் உள்ள நீரை கையால் பிழிந்து கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் மீல் மேக்கரைப் போட்டு, அத்துடன் சோம்பு, பச்சை மிளகாய், கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், தீயை குறைத்துவிட்டு, உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சோயா கோலா உருண்டை தயார்.

‘கீமா’ என்றதும் பலருக்கு நினைவில் வருவது அசைவம் மட்டும் தான். அதனை மறக்கடிக்கும் விதமாக சைவப் பிரியர்கள் மட்டுமின்றி, அசைவப் பிரியர்களும் விரும்பும் சுவையான உணவு தான் வெஜ் கீமா. அதன் எளிய செய்முறை இங்கே...
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 4 (பொடிதாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடிதாக நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
குடைமிளகாய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 50 கிராம்
ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
கறி மசாலாப் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ½ தேக்கரண்டி
தனியா தூள் - ½ தேக்கரண்டி
சீரகத் தூள் - ½ தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
துருவிய பன்னீர் - 100 கிராம்
துருவிய வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - ½ தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில், அடி கனமான வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, குடை மிளகாய், பட்டாணி, பச்சை மிளகாய், அரைத்த தக்காளி விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
2 நிமிடங்கள் கழித்து மிளகாய்த் தூள், சீரகத்தூள், கறி மசாலாத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். பின்பு சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்து கேரட், பீன்ஸ், துருவிய பன்னீர் சேர்த்து வதக்கவும். 2 நிமிடங்களுக்குப் பிறகு சிறிதளவு துருவிய வெண்ணெய்யை அதில் சேர்க்கவும்.
இந்தக் கலவையை நன்றாகக் கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். பின்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் மீதம் இருந்த துருவிய வெண்ணெயை மேலே தூவி எலுமிச்சம் பழச்சாறை ஊற்றவும்.
கடைசியாக கொத்தமல்லி தழையை மேலே தூவி இறக்கவும்.
சுவையான வெஜ் கீமா தயார். இதனை சப்பாத்தி, தோசை, அடையுடன் சேர்த்துப் பரி மாறலாம்.

இரத்த சோகை, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு நோய், வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - ¼ கிலோ
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
உப்பு - தேவைக்கு
மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
மல்லி துாள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் துாள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
சீரக துாள் - ½ டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வெண்டைக்காயை சுத்தமாக கழுவி, நீர் துடைத்து விட்டு, சற்று பெரிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்.
முந்திரி பருப்பு அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில், உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், கரம் மசாலா, மல்லி துாள், சீரக துாள் சேர்த்து, சில துளிகள் நீர் தெளித்து கலந்து கொள்ளவும்.
இதில், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், நீரை வடித்து விட்டு முந்திரி, ஒன்றிரண்டாகத் தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கலந்த பின், கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு சேர்த்து, பக்கோடாவிற்கு பிசைவது போல பிசையவும்.
எதையும் நொறுக்கி விடாமல், மசாலா சீராக கலக்கும் விதமாக மென்மையாக பிசையவும்.
அதன்பின், நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து பிரட்டி, சில நிமிடங்கள் வைத்து, எண்ணெய் காய்ந்ததும், பிரட்டி வைத்த வெண்டைக்காயை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
நன்கு ஆறிய பின் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால், மொறுமொறுவென்று இருக்கும்.
இப்போது சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.

வாழை இலை மீன் பொள்ளிச்சது கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீன் - ½ கிலோ எடையில் 2 (சுத்தம் செய்து உடலில் அங்கங்கே கீறி விட்டு முழுமையாக வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம் - 200 கிராம்.
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 50 கிராம்
எலுமிச்சை - 2
மிளகாய் தூள் - 5 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் பால் - ஒரு மூடி
வாழை இலை பெரியது - ஒன்று.
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 150 மில்லி.
செய்முறை
ஒரு தட்டில் கொடுக்கப்பட்டு உள்ள பொடிகளில் மல்லிப் பொடியைத் தவிர மற்ற பொடிகள் எல்லாவற்றிலும் பாதியளவு எடுத்து ஒரு தட்டில் போட்டுக்கொள்ளுங்கள் அதில் இரண்டு எலுமிச்சம் பழங்களையும் வெட்டிப் பிழியுங்கள்.அத்துடன் தேங்காய் எண்ணெய் , உப்பு ,பாதி அளவு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பிசைந்து மீனின் உடலில் தடவுங்கள்.உள்ளேயும் தடவலாம்.
இந்த மீன்களை ஒரு அரை மணி நேரம் மசாலில் ஊற விடுங்கள். அவை ஊறுகிற நேரத்தில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி,அது சூடானதும்,கறிவேப்பிலை,சின்ன வெங்காயம்,மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து , உப்பு போட்டு வதக்குங்கள்.எண்ணெய் பிரிந்து வரும்போது வெட்டி வைத்து இருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்றாக சுருண்டு வரும்வரை வதக்கி,அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறிவிட்டு கடாயை இறக்குங்கள்.
அதன் பிறகு , ஒரு பெரிய வாழை இலையை அடுப்பில் வாட்டி இரண்டு துண்டுகளாக வெட்டி வையுங்கள். ஒரு தோசைக் கல்லை எடுத்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அது சூடானதும் அதில் மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து இந்தப்பக்கம் ஒரு நிமிடம் அந்தப்பக்கம் ஒரு நிமிடம் வேகவிட்டு எடுங்கள்.
இப்போது ஒரு வாழை இலைத் துண்டை எடுத்து அதன் நடுவில் கடாயில் இருக்கும் மசாலாவில் ஒரு கரண்டி எடுத்து பரப்புங்கள்.இப்போது எண்ணெயில் லேசாக வேக வைத்து வைத்திருக்கும் மீனை எடுத்துப் போட்டு அதன் மேலும் மசாலாவை அள்ளி வையுங்கள். மீன் இரண்டுபுரமும் மசாலா இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த இலையை மடித்து மீன் வெளியே தெரியாதபடி பொதிந்து வாழை நாரால் காட்டுங்கள். இப்படி இன்னொரு மீனையும் கட்டிய பிறகு மறுபடி அந்த தோசைக் கல்லை பற்றவைத்து மொத்த எண்ணெயையும் அதில் ஊற்றி அது நல்ல சூடானதும் மீன் பொதியை தூக்கி வைத்து ஒவ்வொரு புறமும் மூன்று நிமிடம் வேகும்படி புரட்டி போட்டு எடுத்தால் , மீன் பொள்ளிச்சது ரெடி.

மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் சாப்பிட்டு அலுத்து விட்டதா? இன்று சற்று வித்தியாசமாக சிக்கனில் ஊறுகாய் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்புகள் இல்லாத சிக்கன் - 1 கிலோ
மிளகாய் தூள் - 8 மேசைக்கரண்டி
உப்பு - 7 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/2 கப்
கடுகுப் பொடி - 2 மேசைக் கரண்டி
சீரகம் மற்றும் வெந்தையப் பொடி - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா பொடி - 1/2 மேசைக்கரண்டி
முழு பூண்டு - 1
கறிவேப்பிலை - 5 இலைகள்
சீரகம் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் - 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் உரித்த முழு பூண்டு பற்களை அதில் போட்டு வதக்கவும்.
அடுத்ததாக கறிவேப்பிலை சேர்க்கவும்.
பின் இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்.
அடுத்ததாக சிறிய பாத்திரத்தில் மிளகாய்த் தூள், உப்பு, கடுகுப் பொடி, சீரகம் மற்றும் வெந்தயப் பொடி, கரம் மசாலா பொடி, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்குக் கிளறவும்.
இந்தக் கலவையை எண்ணெய் கடாயில் போட்டு வதக்கவும். வதக்கும் போது அடுப்பை சிறுந்தீயில் வையுங்கள்.
மசாலா நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து கலவை சிக்கனிற்குள் இறங்குமாறு வதக்கவும்.
தற்போது சுவையான சிக்கன் ஊறுகாய் ரெடி.
இதை எல்லா உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

நம்மில் பலர் விதவிதமான மெயின் டிஷ் இருந்தாலும் வித்தியாசமான சைடிஷ்ஷை விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தயிர் சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
தயிர் - கால் லிட்டர்
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 2
வரமிளகாய் - 4
பூண்டு - 20 பல்
உப்பு - தேவையான அளவு
வரமிளகாய் தூள் - 4 ஸ்பூன்
கரம் மசாலா - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கால் லிட்டர் தயிரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் வரமிளகாய் தூள் 2 ஸ்பூன், கரம்மசாலா தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதக்கிய பிறகு அதில் கலந்து வைத்த தயிர் கலவையை ஊற்றி கிளறவும்.
அதனுடன் மீதி இருக்கும் 2 ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
10 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து, அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும்.
சூப்பரான தயிர் சட்னி ரெடி.

இந்த சாதத்தை காலை வேளையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் போதோ, விரைவில் சமைப்பதற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
கேரட் - 2
கறிவேப்பிலை - சிறிது
பிரியாணி இலை - 1
கிராம்பு - 3
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே எண்ணெயில் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய, பின்பு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து, 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி, சாதத்தை போட்டு, 3 நிமிடம் கிளறி இறக்கி, மேலே முந்திரியை தூவினால், சுவையான கேரட் சாதம் ரெடி!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேக் வகைகளை விரும்பி ருசிப்பார்கள். இன்று லெமன் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 3 கப்
பால் - 1 கப்
நெய் - 1 கப்
ஆரஞ்சு அல்லது லெமன் கலர் - 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் - 5
முந்திரி பருப்பு - 10
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை:
மைதா மாவில் சிறிது நெய் கலந்து, பச்சை வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.
அதில் பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கரைத்துக்கொள்ளவும்.
எலுமிச்சம் பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய எலுமிச்சம் பழத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அடிப்பக்கம் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடானதும் சர்க்கரையைக் கொட்டி கம்பிப்பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.
பின்பு அதில் மைதா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். கலவை நன்றாக நுரைத்து வரும்போது, எலுமிச்சை விழுதை அதில் போட்டு நன்றாகக் கிளறவும். பிறகு நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றவும்.
இப்போது அந்தக் கலவையில் லெமன் அல்லது ஆரஞ்சு கலர் சில துளிகள், வெனிலா எசன்ஸ் சில துளிகள், ஏலக்காய்த் தூள், பொடிப் பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு, திராட்சை இவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கலவை பர்பி பதத்துக்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி சமமாக்கவும். ஆறியவுடன் துண்டுகளாக வெட்டி
பரிமாறவும்.
அதிக செலவில்லாமல் வித்தியாசமான சுவையில் ‘லெமன் கேக்’ ரெடி.

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கும் வகையில், மிருதுவான கேக்கை சுலபமான முறையில் மைக்ரோ ஓவன் பயன்படுத்தாமல் செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 250 கிராம்
சர்க்கரை - 5 தேக்கரண்டி
கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி
பழுத்த வாழைப்பழம் - 2
காய்ச்சிய பால் - 4 தேக்கரண்டி
சாக்லேட் துண்டுகள் - தேவைக்கேற்ப
வினிகர் - 1 தேக்கரண்டி
செய்முறை:
வாழைப்பழத் துண்டுகள், சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவை நான்கையும் ஒன்றாகக் கலந்து சலித்து எடுக்கவும். அதை வாழைப்பழ கலவையில் கொட்டிக் கிளறவும். அதில் சிறிது சிறிதாக பால் ஊற்றி பசை போல, சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் வினிகர் மற்றும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தின் உட்பகுதி முழுவதும் எண்ணெய் தடவி இந்தக் கலவையை அதில் ஊற்றவும்.
அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதில் சிறிது தண்ணீரை ஊற்றி குக்கிங் ஸ்டாண்டு பொருத்தவும். கேக் கலவை இருக்கும் பாத்திரத்தை அதன் மேல் வைத்து, காற்று புகாதவாறு மூடி,
மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து பின்பு ஆற வைக்கவும்.
இப்பொழுது சுவையான சாக்லேட் பனானா கேக் தயார்!

குழந்தைகள் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு தங்கள் பெற்றோர்களை தொல்லை செய்கின்றனர். ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை எப்படி வீட்டில் செய்வது குறித்து காணலாம்.
தேவையான பொருள்கள்:
பரோட்டா - 2
முட்டை - 1
வெங்காயம் - 2
எண்ணெய் - 4 ஸ்பூன்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து பொன்னிறம் வரும் வரை நன்கு வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதக்கிய பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.
தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.
அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.
10 நிமிடம் கழித்து வாசனைக்காக கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
சுட சுட சுவையான கொத்து பரோட்டா தயார்.
இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..

மாம்பழத்தை வைத்து ஐஸ்கிரீம், பாயாசம், கேக் என வித்தியாசமான பல்வேறு ரெசிபிகளை தயாரிக்கலாம். இன்று மேங்கோ மலாய் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 1 1/2 கப்
மாம்பழம் - 2 (தோல் நீக்கியது)
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மலாய் - 2 டீஸ்பூன்
பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பிஸ்கட் - 5
பொடியாக நறுக்கிய பிஸ்தா - தேவையான அளவு
துருவிய ஒயிர் சாக்லேட் - சிறிதளவு
செய்முறை
மாம்பழங்களை சுத்த செய்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.
இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் விழுதாக அரைது கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் பால், சர்க்கரை, சோள மாவு போட்டு கட்டியில்லாமல் நன்கு கலக்க வேண்டும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளற வேண்டும். அடிபிடிக்காமல் கலவை கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். சிறிது தளர்வான பதத்தில் இருக்கும்போதே அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
இந்த கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது அதனுடன் மலாய் கிரீமை சேர்க்கவும். இதை மீண்டும் அடுப்பில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அனைத்தும் ஒன்றாக கலந்து பசை பதத்தில் வந்ததும் கலவையை இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். நன்கு ஆறியதும், கலவை கெட்டி பதத்திற்கு வந்து விடும். அப்போது அரைத்து வைத்த மாம்பழ விழுதை சேர்த்து கலக்கவேண்டும். அனைத்தும் ஒன்றாக கலந்தால் அல்வா பதத்துக்கு மாறிவிடும்.
இதை அப்படியே வைத்து விட்டு எடுத்து வைத்துள்ள பிஸ்கட்களில் 5 மட்டும் தூளாக்கிகொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி தட்டில் முதலில் முழு பிஸ்கட்டுகளை அடுக்கி கொள்ளவேண்டும். அதன்மேல் மாம்பழ கலவையை பரப்பி வேண்டும். அதன்மேல் தேங்காய் துருவலை தூவ வேண்டும். முதலில் செய்தது போல் இரண்டாவதாக ஒருலேயரை உருவாக்க வேண்டும். இதன்மேல் அலங்கரிக்க துருவிய ஓயிட் சாக்லேட், நறுக்கிய மாம்பழத்துண்டுகள், பொடித்த பிஸ்கட் தூள் ஆகியவற்றை பரவலாக தூவ வேண்டும்.
தயார் செய்த இந்த கலவையை ஃப்ரிஜ்ஜில் 2 மணிநேரம் வைக்க வேண்டும். தற்போது மேங்கோ மலாய் கேக் பரிமாற தயாரான நிலையில் இருக்கும்.
இதை துண்டுகளாக்கி பரிமாறலாம்.

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சுவையான சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 5 கப்
சிக்கன் கைமா(கொத்துக்கறி) - 800 கிராம்
வெங்காயம் - 6 (பொடிதாக நறுக்கியது - 4, நீளமாக நறுக்கியது - 2)
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 4 டேபிள் ஸ்பூன்
தயிர் - ¼ கப்
பச்சை மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மசாலா பொருட்கள் (பட்டை, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ) - தேவையான அளவு
சாஹிஜீரா - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - தேவையான அளவு
புதினா - 1 கட்டு
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
நீளமாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன் கைமாவுடன், பாதி அளவு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள் மற்றும் தனியா தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
வாணலியில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை, சாஹிஜீரா சேர்த்து வதக்கவும்.
பின்பு பொடிதாக நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பின்னர் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து பொடிதாக நறுக்கிய தக்காளியை அத்துடன் சேர்த்து வதக்கியதும், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்துக் கிளறவும். அதில் ஊற வைத்த சிக்கன் மற்றும் தயிர் சேர்த்து கிளறி சில வினாடிகள் கழித்து, பொடிதாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி 15 முதல் 20 நிமிடம் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சுத்தம் செய்த பாஸ்மதி அரிசி, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, ஏலக்காய், சிறிதளவு சாஹிஜீரா, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரை வேக்காட்டில் வேக வைத்து எடுக்கவும்.
சிக்கன் வெந்த பிறகு, ஒரு பாத்திரத்தில் சிக்கன் கலவை ஒரு அடுக்கு, வேக வைத்த அரிசி ஒரு அடுக்கு என்ற விகிதத்தில் வைக்க வேண்டும். இறுதியாக, குங்குமப்பூ, சிறிதளவு தண்ணீர், கொத்தமல்லித்தழை, வறுத்த வெங்காயம் கலந்து, குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால், சுவையான ‘சிக்கன் கீமா பிரியாணி’ தயார்.