என் மலர்
கிச்சன் கில்லாடிகள்

சாக்லேட் பனானா கேக்
குக்கரில் செய்யலாம் சாக்லேட் பனானா கேக்
சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கும் வகையில், மிருதுவான கேக்கை சுலபமான முறையில் மைக்ரோ ஓவன் பயன்படுத்தாமல் செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 250 கிராம்
சர்க்கரை - 5 தேக்கரண்டி
கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி
பழுத்த வாழைப்பழம் - 2
காய்ச்சிய பால் - 4 தேக்கரண்டி
சாக்லேட் துண்டுகள் - தேவைக்கேற்ப
வினிகர் - 1 தேக்கரண்டி
செய்முறை:
வாழைப்பழத் துண்டுகள், சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவை நான்கையும் ஒன்றாகக் கலந்து சலித்து எடுக்கவும். அதை வாழைப்பழ கலவையில் கொட்டிக் கிளறவும். அதில் சிறிது சிறிதாக பால் ஊற்றி பசை போல, சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் வினிகர் மற்றும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தின் உட்பகுதி முழுவதும் எண்ணெய் தடவி இந்தக் கலவையை அதில் ஊற்றவும்.
அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதில் சிறிது தண்ணீரை ஊற்றி குக்கிங் ஸ்டாண்டு பொருத்தவும். கேக் கலவை இருக்கும் பாத்திரத்தை அதன் மேல் வைத்து, காற்று புகாதவாறு மூடி,
மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து பின்பு ஆற வைக்கவும்.
இப்பொழுது சுவையான சாக்லேட் பனானா கேக் தயார்!

Next Story