என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    நாவிற்கு சுவையை கொடுக்கும் இந்த இட்லி பொடியை சுடச்சுட இட்லியோடு நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஆந்திரா ஸ்பெஷல், ‘நல்ல கார பொடி’ ஒருவாட்டி இப்படி செஞ்சுதான் பாருங்களேன்
    தேவையான பொருட்கள்:

    வர மல்லி - 1/2 கப்,
    உளுந்து - 1/4 கப்,
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    சீரகம் - 1 ஸ்பூன்,
    வரமிளகாய் - 10,
    கறிவேப்பிலை - 2 கொத்து,
    பூண்டு - 5 பல்,
    சிறிய நெல்லிக்காய் அளவு - புளி,
    தேவையான அளவு உப்பு.

    செய்முறை

    சிலபேருக்கு வர மல்லி வாசம் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் 1/2 கப் உளுந்து, 1/4 கப் அளவு வரமல்லி என்று அளவுகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடிக்கு, காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

    அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து முதலில் வர மல்லியை போட்டு, வர மல்லி வாசம் வரும் வரை சிவக்க வேண்டும்.

    அடுத்தபடியாக உளுந்தையும், கடலை பருப்பையும் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.

    மூன்றாவதாக சீரகத்தை மட்டும் தனியாக சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சீரகத்தை கருக விடாமல் வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    மிளகாயையும் உப்பையும் ஒன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

    இறுதியாக கறிவேப்பிலையை மொறுமொறுவென வறுக்க வேண்டும்.

    பூண்டு சூடாகும் வரை வறுக்கவேண்டும்.

    புளியை சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அப்போது தான் நன்றாக அரைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    புளியை மொத்தமாக ஒரு நிமிடம் வறுத்தால் கூட போதும்.

    வறுத்த அனைத்து பொருட்களும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இப்போது சூப்பரான காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி ரெடி.

    உங்கள் குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாகவும், விரும்பி சாப்பிடும் வகையிலும் பிரெட் கொண்டு அற்புதமான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். இப்போது பிரட் சீஸ் பைட்ஸ் எப்படி செய்வதென்று காண்போம்.
    தேவையான பொருட்கள்:

    பிரெட் துண்டுகள் - 2
    பிரெட்  தூள் - 1/2 கப்
    சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    சீஸ் துண்டுகள் அல்லது துருவிய சீஸ்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
    தண்ணீர் - 1/4

    செய்முறை:

    முதலில் ஒரு பிரெட் துண்டை எடுத்து, அதன் மேல் தேவையான சதுர சீஸ் துண்டுகளை வைக்கவும் அல்லது தேவையான அளவு துருவிய சீஸ் தூவிக் கொள்ளவும்.

    பின் அதன் மேல் மற்றொரு பிரெட்  துண்டை வைக்க வேண்டும். பின்பு ஒரு கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சோள மாவை நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

    பின் வெட்டி வைத்துள்ள ஒரு பிரெட் துண்டை எடுத்து, சோள மாவில் பிரட்டி, பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
    இதேப் போல் அனைத்து பிரெட்  துண்டுகளையும் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    எண்ணெய் சூடானதும், பிரெட் துண்டுகளைப் போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரெட் சீஸ் பைட்ஸ் தயார்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தர்ப்பூசணி பழத்தில் ஐஸ்கிரீம் தயாரித்தும் ருசிக்கலாம். அதுவும் உடலுக்கும், உள்ளத்திற்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஐஸ்கிரீம் தயாரிக்கும் விதம் குறித்து பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி துண்டுகள் - 1 கப்
    பிரஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
    ரோஸ் எசன்ஸ் - 2 துளி
    சர்க்கரை - சிறிதளவு

    செய்முறை:

    தர்பூசணி பழ துண்டுகளை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    பின்பு அதனுடன் பிரஷ் கிரீமை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    நன்கு அரைபட்டதும் ரோஸ் எசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து லேசாக அரைத்து இறக்கவும்.

    இந்த கலவையை அகன்ற கிண்ணத்தில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.

    சில மணி நேரத்தில் கெட்டி பதத்திற்கு மாறிவிடும்.

    சுவையான தர்ப்பூசணி ஐஸ்கிரீம் தயார்.
    மாங்கா‌ய் ‌சேர்த்த மீ‌ன் குழ‌ம்பை இட்லி, சூடான சாதத்துடனும், பழைய சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் - அரை கிலோ
    புளி - சிறிதளவு
    பெ.வெங்காயம் - 5
    தக்காளி - 4
    மா‌ங்கா‌ய் - 1
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - சிறிதளவு
    க‌றிவே‌ப்‌பிலை - சி‌றிதளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    மீன்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

    கரைத்த புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    அதனுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகளை போட்டு கிளறிவிடவும்.

    பின்னர் மாங்காய் துண்டுகளை போடவும்.

    மீன் துண்டுகள் நன்கு வெந்து குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.
    சூடான சாதம் மட்டுமல்ல, இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும் இந்த இறால் புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - கால் கிலோ  
    தக்காளி -2  
    பெ.வெங்காயம் - 2  
    பச்சை மிளகாய் - 3  
    இஞ்சி ,பூண்டு விழுது -சிறிதளவு  
    மிளகாய் தூள் - தேவையான அளவு  
    மஞ்சள் தூள் - சிறிதளவு  
    கொத்தமல்லித் தூள் - 2 டேபிள்ஸ்பூன்  
    புளி - சிறிதளவு  
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு  
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    இறாலை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள். அதனுடன் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்குங்கள்.

    நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.

    பின்னர் புளிகரைசலை ஊற்றி கிளறிவிடுங்கள்.

    பின்னர் இறால் துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர், போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி வையுங்கள்.

    அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்குங்கள்.

    ருசியான இறால் புளிக்குழம்பு ரெடி.
    கடைகளில் கிடைக்கும் விரலி மஞ்சள் விளை நிலங்களில் அறுவடை செய்யப்ப்டடு கொதிநீரில் இட்டு நன்கு வேக வைத்த பின்னரே விற்பனைக்கு வருகிறது. இங்கே சொல்லப்படும் ஊறுகாய் தயாரிப்பு முறையானது வேக வைக்காத பச்சை மஞ்சளை பயன்படுத்தி செய்யப்படுவதாகும்.
    தேவையான பொருட்கள்

    பச்சை மஞ்சள்(தோல் சீவி துருவியது) - கால் கிலோ
    எலுமிச்சை பழம் - 3
    நல்லெண்ணெய் - 100 மிலி
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    கடுகு - 2 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 10
    கல்உப்பு - 4 டீஸ்பூன்
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறவைத்து பெருங்காயம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

    எலுமிச்சை பழ சாறை பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்யை சூடாக்கி 1 டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும். அடுப்பை மிதமாக வைத்து துருவி வைத்த மஞ்சளை போட்டு பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    அதன் பின்னர் அரைத்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு எலுமிச்சைசாறு அதில் சேர்க்க வேண்டும். கொதிக்கும் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலக்கும் போது உருவாகும் வெடிப்பு தணியும் வரை காத்திருந்த பின்னர் 5 நிமிடங்கள் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து ஆற விடவும்.

    நன்றாக ஆறியவுடன் அதை கண்ணாடி பாட்டிலில் இட்டு பிரிட்ஜில் வைத்து சுமார் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
    தனிப்சிறப்பு பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தின் மேலப்பாளையம் பிரியாணி தயார் செய்யும் முறையை இங்கே பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்

    விருப்பமான இறைச்சி வகை - 2 கிலோ
    சீரக சம்பா அரிசி - 2 கிலோ
    கரம் மசாலா தூள் -  1 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 6 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தயிர் - 200 கிராம்
    நெய் - 200 மில்லி
    நல்லெண்ணெய் - 100 மில்லி
    பெரிய வெங்காயம் - 800 கிராம்
    தக்காளி - 800 கிராம
    மிளகாய் - 16
    புதினா, கொத்தமல்லி தழை - தேவையான அளவு
    பட்டை - 10 கிராம்
    அன்னாசி பூ - 3
    ஏலக்காய் - 10 கிராம்
    கிராம்பு - 10 கிராம்
    பிரியாணி இலை - 3
    இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்
    அலுமினியம் பாயில் பேப்பர்

    செய்முறை

    பிரஷர் குக்கரில் இறைச்சியை போட்டு வேகவைக்க தேவையான அளவு நீர் ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதில் பாதியை சேர்த்த 4 விசில் வரும் வரை வேக வைத்து தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் 2 கிலோ சீரக சம்பா அரிசியில் 1.5 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் தனியாக பாதியளவு வேக வைத்து  கொள்ளவும்.

    இன்னொரு பாத்திரத்தில் நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அன்னாசி பூ. கிராம்பு. பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு கரம் மசாலா தூள், புதினா இலை, மிளகாய்த்தூள், உப்பு, தயிர் சேர்த்து கிரேவி தயார் செய்யவும்.

    அதில் வேக வைத்த இறைச்சியை நீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    பாதி வெந்த நிலையில் உள்ள அரிசியில் அதன் ஒரு பாதியில் கிரேவியில் பாதியளவு ஊற்றி அதன் மேலாக மீதமுள்ள சாதத்தை பரப்பி மறு பாதி கிரேவியை அதன் மீது ஊற்றி பாயில் பேப்பர் மூலம் பாத்திரத்தை மூடி தம் போட வேண்டும்.

    தீயை பாதி அளவுக்கு பத்து நிமிடம் எரிய விட்ட பின்னர் அலுமினியம் பேப்பரை அகற்றி கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட்டால் மேலப்பாளையம் பிரியாணி ரெடி.

    என்னதான் சீஸ் விருப்பமானது என்றாலும் அது விலை அதிகம் என்பதால் அடிக்கடி வாங்க முடியாது. அந்த கவலை இனிமே இல்ல. இன்று வீட்டிலேயே அரை மணிநேரத்தில் சீஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 150 கிராம்
    அடித்த முட்டை - 3 ஸ்பூன்
    உப்பு கலந்த வெண்ணெய் - 200 கிராம்
    பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
    உப்பு - சுவைக்கு ஏற்ப

    செய்முறை:

    பன்னீரை உடைத்து தூளாக்கிக்கொள்ளவும்.

    அதில் அடித்த முட்டையை ஊற்றவும்.

    பின் உப்பு கலந்த வெண்ணெய் சேர்க்கவும்.

    அடுத்ததாக பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    இந்தக் கலவையை தற்போது நன்கு பிசைந்துகொள்ளவும்.

    தற்போது அகலமான பாத்திரத்தில் மற்றொரு பாத்திரம் வைக்கும்படியாகத் தண்ணீர் ஊற்றவும். காரணம், இவ்வாறு செய்வதால் சீஸ் கிளறும்போது

    அடிப்பிடிக்காது.

    தண்ணீர் நன்கு கொதிக்கும்போது மற்றொரு பாத்திரத்தை அதில் வைக்கவும்.

    தற்போது பிசைந்த பன்னீர் பேஸ்டை அதில் போட்டு நன்கு கிளறவும். இடைவெளியின்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.

    15 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால் உருகி பேஸ்ட் வடிவில் சீஸ் பதத்திற்கு வரும்.

    பின் அதை ஒரு டப்பாவில் அடைத்து ஃபிரிஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

    காரக்குழம்பு மற்றும் மீன்குழம்புக்கு பொருத்தமான‌, கூடுதல் சுவை சேர்க்கும் குழம்புப் பொடியை தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    மஞ்சள் ‍- 4 துண்டு
    மிளகாய் வற்றல்- கால் கிலோ
    தனியா (மல்லி) - கால் கிலோ
    கடுகு - 40 கிராம்
    மிளகு - 3 தேக்கரண்டி
    சீரகம் - 20 கிராம்
    வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
    சோம்பு (பெருஞ்சீரகம்) - இரண்டு தேக்கரண்டி (விரும்பினால்)
    கடலைப்பருப்பு - இரண்டு மேஜைக்கரண்டி
    துவரம்பருப்பு - இரண்டு மேஜைக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை

    மிளகாய் வற்றலை நன்றாக வெயிலில் காய வைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அனைத்தையும் ஒன்றின் ஒன்றாக தனித்தனியாக போட்டு பக்குவமாக‌ வறுத்து ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டால் இரண்டு மாதத்திற்கு குழம்புப் பொடி ரெடி.
    அவலை கொண்டு வெறும் உப்புமா மட்டுமே தயாரிக்க முடியும் என்ற நிலை மாறிவிட்டது, குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நண்பர்கள் விரும்பும் வகையில் பல்வேறு உணவு வகைளை அவல் மூலம் தயார் செய்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள்

    அவல் - 1 கப்
    கடலை மாவு - அரை கப்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    குடைமிளகாய் -
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 2 பல்
    பெருங்காயம் - சிறிதளவு
    ஓமம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    அவலை நன்றாக கழவி 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    தக்காளி, பூண்டு, ப.மிளகாயை மிக்சியில் போட்டு ஒன்றாக அரைத்து கொள்ளவும்.

    ஊறவைத்த அவலுடன் அரைத்த விழுது, வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பெருங்காயம், ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்க வேண்டும். தண்ணீர் விடாமல் மாவை கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்த மாவை நீள வாக்கில் விரல் போன்று உருட்டி கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிங்கர்ஸ்சை கவனமாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    அதை சாஸ் உடன் பரிமாறவும்.
    சுடச்சுட சாதத்தில் நெய் விட்டு பருப்பு பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்.. அடடே என்ன ருசி என்பீர்கள்.. .உங்களுக்கும் உணவகங்களில் தரும் பருப்பு பொடி பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள், ரொம்ப நன்றாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1/4 கப்
    முழு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
    பாசி பருப்பு  - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5
    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் துவரம் பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும். அதனை ஒரு தட்டில் கொட்டிவிட்டு, அடுத்து அதை போல்

    பாசி பருப்பை சிவக்க வறுத்து, துவரம் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.

    அடுத்து உளுந்தம் பருப்பையும் நன்கு சிவக்க வறுத்து மற்ற பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.

    பின் காய்ந்த மிளகாயை நன்கு மொறுமொறுவென்று வறுத்து கொள்ளவும்.

    அதனையும் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்,

    கடைசியாக மிளகை லேசாக வறுத்து சேர்த்து கொள்ளவும்.

    கூடவே பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் சிறிது நேரம் ஆற விடவும்.

    பின் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து  நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.

    சுவையான பருப்பு பொடி தயார்.

    காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு தேவையான போது பயன்படுத்தலாம்.

    சூடான சாதத்துடன் பருப்புப் பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.

    குறிப்பு

    ஒவ்வொரு பருப்பையும் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.  நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.


    ரம்ஜான் பண்டிகை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது, பிரியாணி தான். அதோடு அந்நாளில் வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைத்தால், பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா செய்யுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    அரைப்பதற்கு...


    வெங்காயம் - 1
    இஞ்சி - 1 இன்ச்
    பூண்டு - 4 பல்
    முந்திரி - 10
    கசகசா - 2 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு...


    சிக்கன் - 1 கிலோ
    தயிர் - 1 கப்
    பிரியாணி இலை - 2
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 இன்ச்
    வரமிளகாய் - 4
    கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    குங்குமப்பூ - சிறிது (அலங்கரிப்பதற்கு)

    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    அடுத்து முந்திரி, கசகசா சேர்த்து நீர் ஊற்றி நன்கு மேன்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.

    கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரைத்த பாதி வெங்காய விழுது மற்றும் பாதி முந்திரி விழுதை சேர்த்து, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது 2 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் அதில் எஞ்சிய வெங்காய விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    பின்பு அத்துடன் மீதமுள்ள முந்திரி விழுதை சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.

    இறுதியாக ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 25 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

    பின்பு மூடியைத் திறந்து, அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கிளறி இறக்கி, மேலே குங்குமப்பூவைத் தூவினால், சுவையான பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×