என் மலர்tooltip icon

    சமையல்

    குடைமிளகாயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடைமிளகாய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை நிற குடை மிளகாய் - 3
    நசுக்கிய புளி - ஒரு ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    எள் ஒரு - டேபிள்ஸ்பூன்
    தனியா - 2 டேபிள்ஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க


    கடுகு
    உளுத்தம்பருப்பு
    பெருங்காயம்
    கறிவேப்பிலை

    குடைமிளகாய்

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், குடைமிளகாய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய் தனியா சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, புளி, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காஜு கத்லியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சாக்லேட் சேர்த்து காஜு கத்லியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முந்திரி - 2 1/4 கப்
    சர்க்கரை - 1 கப்
    தண்ணீர் - 100 மில்லி
    டார்க் சாக்லேட் - 1 கப்

    சாக்லேட் காஜு கத்லி

    செய்முறை


    முந்திரியை நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை மிதமான சூட்டில் வைத்திருக்கவும்.

    சர்க்கரை பாகு ஒரு நூல் பதத்திற்கு வரும்வரை அதனை காய்ச்சி, 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும்.

    அரைத்து வைத்த முந்திரியை சர்க்கரை பாகுடன் சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை கெட்டியாக வரும்வரை கிளறி கொண்டே இருக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஆற வைக்கவும்.

    பின் கைகளில் நெய் தடவி கொண்டு இந்த மாவை மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

    ஒரு பட்டர் ஷீட்டில் இந்த மாவை வைத்து ரோல் செய்து 5-6 மிமீ வரை உருட்டி கொள்ளவும்.

    ஒரு சாஸ்பேனில் பௌல் வைத்து அதில் டார்க் சாக்லேட் சேர்த்து உருகும் வரை கிளறவும். .

    சாக்லேட் உருகியதும் காஜூ கத்லி மாவில் இதனை சேர்த்து சமமாக பரப்பி கொள்ளவும்.

    ஆறியபின் இதனை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.

    சூப்பரான சாக்லேட் காஜு கத்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்தில் தொண்டை வலி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சுக்கு மிளகு பால் குடிக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - ஒரு கப்,
    நாட்டு சர்க்கரை - தேவைக்கேற்ப,
    சுக்கு, மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்,
    மஞ்சள் பொடி - சிறிதளவு.

    சுக்கு மிளகு பால்

    செய்முறை :

    முதலில் பாலினை நன்கு காய்ச்ச வேண்டும்.

    பின்னர் சுக்கு, மிளகு பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து இறக்கி வடிக்கட்டி சூடாக குடிக்கவும்.

    தொண்டைக்கு இதமான சுக்கு மிளகு பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹோட்டலில் கிடைக்கும் சிக்கன் பாப்கார்ன் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - கால் கிலோ
    கார்ன் ஃப்ளார் -  2 மேஜைக்கரண்டி
    முட்டை -  1
    பிரெட் தூள் -  1 கப்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு விழுது - 3/4 மேஜைக்கரண்டி
    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு

    சிக்கன் பாப்கார்ன்

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    ஒரு பௌலில் மிளகாய் தூள், மிளகு துள், இஞ்சு பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    வெட்டி வைத்த சிக்கனை கலந்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அத்துடன் கார்ன் மாவு சேர்த்து சிக்கன் மேல் தடவி கொள்ளவும்.

    மேலும் அதில் முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ஒவ்வொரு சிக்கன் துண்டையும் இந்த பிரெட் துளில் தொட்டு எடுக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும். மொத்தமாக போடாமல் ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.

    பின் சூடாக எடுத்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானியங்கள் மிகவும் நல்லது. இன்று வரகு அரிசியில் காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - ஒரு கப்,
    முட்டைகோஸ் - கால் கிலோ,
    முள்ளங்கி, தக்காளி- ஒன்று,
    பெரிய வெங்காயம்- ஒன்று,
    பச்சை மிளகாய்- ஒன்று,
    எலுமிச்சம்பழம் - ஒன்று,
    அரிசி மாவு  - ஒரு டீஸ்பூன்
    இஞ்சித் துருவல் - சிறிதளவு,
    கொத்தமல்லி - அரை கட்டு,
    புதினா - கால் கட்டு,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    பூண்டு பல் - சிறிதளவு,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    வெஜிடபிள் வரகு கஞ்சி

    செய்முறை:

    ஒரு கப் வரகு அரிசியுடன் மூன்று கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

    முட்டைகோஸ், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.

    தக்காளி,  கொத்தமல்லி, புதினா, வெடக்யத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய  பச்சை மிளகாய், அரிசி மாவு சேர்த்து நன்கு வறுக்கவும்.

    துருவிய முட்டைகோஸ், முள்ளங்கியை இதனுடன் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி... ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

    பிறகு, மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும்.

    வெந்த வரகு அரிசியுடன், இதனை சேர்த்து நன்கு கலக்கினால்... இதமான, மிகவும் ருசியான, சத்தான வெஜிடபிள் வரகு கஞ்சி தயார்.

    இதற்கு தொட்டுக் கொள்ள, கொள்ளுத் துவையல் சிறந்தது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. இன்று சூப்பரான சார்மினார் பிரியாணியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசிக்காக:


    நீளமான அரிசி - 2 கப்
    பிரிஞ்சி இலை - 3
    ஏலக்காய் - 2-3
    கிராம்பு - 2-3
    நெய் - 1 தேக்கரண்டி
    புதினா - 1/2 கப்
    அன்னாட்சி பூ - 1
    பட்டை - 1 துண்டு

    தண்ணீருக்கு தேவையானது

    உப்பு - தேவையான அளவு
    மட்டன் - 600 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    நெய் - 250 கிராம்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பட்டை - 2
    கிராம்பு - 4-5
    பட்டை - சிறிய துண்டு
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 2 டீஸ்பூன்

    ஊறவைக்க

    உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த்தூள் - 2 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தே - 1/2 தேக்கரண்டி
    தயிர் - 1 கப்
    இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
    பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் (கீறியது) - 2
    பால் - 1/4 கப்
    குங்குமப்பூ - 5-6
    புதினா - 1/2 கப்
    லெமன் ஜுஸ் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    லேயரிங்

    வறுத்த வெங்காயம்
    வறுத்த பூண்டு
    குங்குமப் பூ ஊறவைத்த பால் - 1 கப்
    கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு கைப்பிடி
    நெய் - 1/2 கப்

    சார்மினார் பிரியாணி

    செய்முறை

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் மட்டனை ஊறவைக்கத் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். 3-4 மணி நேரம் ப்ரிஜ்ஜில் எடுத்து வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 10-15 நிமிடம் ஊறவைக்கவும்.

    குங்குமப் பூ ஊறவைத்த தண்ணீரில் அரிசிக்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து பாதி வெந்ததும் அரிசியை வடித்து வைக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும நறுக்கிய தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சூட்டை குறைத்து பாலை சேர்க்கவும்

    மசாலா பொடி சேர்த்து கலக்கவும் பால் திரியாமல் பார்த்துக் கொள்ளவும்.

    இதனுடன் ஊறவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்போது பிரியாணி மசாலாவை சேர்த்து தீயைக் குறைத்து வைத்து வேகவைக்கவும்.

    மட்டன் முழுவதுமாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பிரியாணியை தயார் செய்ய, பெரிய அகலமான பாத்திரத்தை எடுக்கவும்.

    நெய் சாதத்தை ஒரு லேயராக வைத்து, அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, நெய், மற்றும் குங்குமப் பூ பால் ஊற்றி, அதன் மேல் வேகவைத்த கறியை வைக்கவும்.

    இதேபோல் லேயரை சாதம் மற்றும் கறி தீரும் வரை வைக்கவும்.

    பின் பாத்திரத்தை மூடி அதன்மேல் கனமான பாத்திரத்தை வைக்கவும். மீடியம் ஹீட்டில் 20-25 நிமிடம் வேகவைக்கவும். பின் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடங்களுக்கு மூடியை திறக்கவும்.

    10 நிமிடங்களுக்குப் பின் அரிசி உடையாமல் கிளறி விடவும்.

    தயிர் பச்சடியுடன் பரிமாறவும்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வட மாநிலங்களில் இந்த சோஜி உப்புமா மிகவும் பிரபலம். சத்தான இந்த இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்ய தேவையான பொருட்கள்

    பச்சரிசி - ஒரு கப்
    பாசிப்பருப்பு - அரை கப்

    தாளிக்க

    கடுகு - ஒரு ஸ்பூன்
    கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு
    தேங்காய் துருவல் -  சிறிதளவு
    முந்திரி பருப்பு - தேவையான அளவு

    சோஜி உப்புமா

    செய்முறை:

    பச்சரிசி, பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    முந்திரி பருப்பை வறுத்து தனியாக வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் நன்றாக கொதித்தபின் வறுத்த பச்சரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறு தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்  .

    தண்ணீர் வற்றி பச்சரிசி, பாசிப்பருப்பு வெந்ததும் திறந்து அதில் தேங்காய் துருவல், வறுத்த முந்திரி சேர்க்கவும்.

    நன்றாக பொல பொல பொலவென வெந்து வரும் போது கடைசியாக நெய், கொத்தமல்லி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூடான சுவையான சோஜி உப்புமா தயார்.

    இந்துமதி.


    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் விசேஷம் என்றாலே எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு என்றால் அது கீர் தான். இன்று சேமியாவில் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சேமியா - 1 கப்
    நெய் - 25 கிராம்
    லிட்டர் பால் -     400 மில்லி
    சர்க்கரை - 5டி கிராம்
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 2
    பாதாம் -  20 கிராம்
    உலர் திராட்சை - தேவையான அளவு

    சேமியா கீர்

    செய்முறை

    சேமியாவை கைகளால் உடைத்துக் கொள்ளவும்.

    பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும்.

    சூடான தண்ணீரில் உலர் திராட்சையை ஊற வைக்கவும்.

    நெய்யில் கிராம்பு, ஏலக்காய் வறுக்கவும்.

    அடுத்து அதில் சேமியாவை சேர்த்து வறுக்கவும். பிரவுன் நிறத்தில் வறுக்க வேண்டியது அவசியம்.

    அடுத்து அதில் பாலை ஊற்றி கொதிக்கவைக்கவும்..
        
    கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து வேகவைக்கவும். பால் திக்காக்கும் வரை வேக வைக்க வேண்டியது அவசியம்

    சர்க்கரை மற்றும் உலர் திராட்சையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கவும்.

    சூடு ஆறிய பின் பரிமாறவும்.

    சூப்பரான சேமியா கீர் ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இன்று சோளத்தில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோளம் - 2 கப் (உதிர்த்தது)
    வெங்காயம் - 1
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 3
    எலுமிச்சம்பழம் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    கறிவேப்பிலை - 2 கீற்று
    உப்பு - தேவைக்கேற்ப

    சோளம் சுண்டல்

    செய்முறை :

    சோளத்தை உதிர்த்து உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த சோளத்தை போட்டு கிண்டி விடவும்.

    இறக்கும் முன்பு தேங்காய்த்துருவலையும், எலுமிச்சைச்சாறும் சேர்த்து இறக்கவும்.

    அருமையான சோளம் சுண்டல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டில் எளிய முறையில் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 3,
    நெய் - 100 கிராம்,
    சர்க்கரை- 1/2 கப்,
    ஏலக்காய் தூள்- 2 டீஸ்பூன்,
    முந்திரி - 10,
    பாதாம் - 5.

    ஆப்பிள் அல்வா

    செய்முறை :

    ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நீர் சேர்க்காமல் நன்கு அரைக்கவும். அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    நெய்யில் பாதாம், முந்திரியை போட்டு வறுத்து எடுக்கவும்.

    அதே கடாயில் மேலும் சிறிது நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள ஆப்பிள் கலவையை போட்டு நன்றாக கிளறவும்.

    அடுத்து அதில் பிறகு சர்க்கரை, நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

    அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது பாதாம், முந்திரி சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான ஆப்பிள் அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒரே மாதிரி உப்புமா செய்யாமல், சற்று வித்தியாசமாக ரவையுடன் முட்டைகோஸ் சேர்த்து உப்புமா செய்யலாம். இன்று முட்டைகோஸ் ரவை உப்புமா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை ரவை - 2 கப்
    முட்டைகோஸ் - 1/2 கப் (நறுக்கியது)
    கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    முட்டைகோஸ் ரவை உப்புமா

    செய்முறை:

    முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பின் அதில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

    அடுத்து முட்டைகோஸ் சேர்த்து, முட்டைகோஸ் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

    பின்பு அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் வறுத்த கோதுமை ரவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது சுவையான முட்டைகோஸ் ரவை உப்புமா ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பிரெட், முட்டை சேர்த்து உப்புமா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பிரெட் - 6,
    முட்டை - 2,
    வெங்காயம் - 1,
    கடுகு - சிறிதளவு,
    உளுந்து - 1ஸ்பூன்,
    கடலை பருப்பு - 1ஸ்பூன்,
    முந்திரி - 5,
    ப. மிளகாய் - 3,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.

    பிரெட் முட்டை உப்புமா

    செய்முறை:

    பிரெட்டை உதிர்த்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, உளுந்து, கடலை பருப்பு, முந்திரி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப. மிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி கிளறவும்.

    முட்டை நன்றாக உதிரியாக வந்தவுடன்  அதில் உதிர்த்து வைத்த பிரெட்டை போட்டு கிளறவும்.

    முட்டை, பிரெட் இரண்டும் நன்றாக சேர்ந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் முட்டை உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×