என் மலர்tooltip icon

    சமையல்

    பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது,. தினமும் பாலக்கீரையை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாலக்கீரை - 1 கட்டு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 6
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - 3
    புளி - சிறிதளவு
    மிளகு - 2 டீஸ்பூன்
    பூண்டு - 4 பல்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு

    பாலக்கீரை மிளகு கூட்டு

    செய்முறை

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் பாலக்கீரையை போட்டு வதக்கவும். பாலக்கீரையை வேக சற்று தண்ணீர் தெளித்து விடவும்.

    கீரை பாதி வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் தேங்காய் துருவல், உப்பு, மிளகு தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

    சத்தான சுவையான பாலக்கீரை மிளகு கூட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாக்லேட், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாக்லேட் சமோசா வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்று. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாவு தயாரிக்க:


    ரிஃபைண்டு ப்ளோர் -    1 கிலோ
    நெய் -  தேவையான அளவு
    ஏலக்காய் - சிறிதளவு

    ஸ்டஃப் செய்ய:

    சாக்லேட் - 500 கிராம்
    பாதாம் -     250 கிராம்
    முந்திரி -     250 கிராம்
    பிஸ்தா - 100 கிராம்
    சர்க்கரை -     1 கிலோ
    கரம் மசாலா பொடி -  கால் டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    சாக்லேட் சமோசா

    செய்முறை


    பாதாம், முந்திரியை வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ரிஃபைண்டு ப்ளோர் மாவு, சிறிதளவு நெய் மற்றும் ஏலக்காய் விதை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.

    இந்த மாவில் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    சமோசா உள்ளே ஸ்டஃப் செய்ய முதலில் சாக்லேட்டை உருக்கி வைத்து கொள்ளவும். பின் அதில் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸை சேர்த்து கொள்ளவும்.

    மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து அதனை முக்கோன வடிவில் சுருட்டி கொள்ளவும்.

    அதனுள் உருக்கி வைத்த சாக்லேட் கலவையை போட்டு சமோசாவில் ஓரங்களில் தண்ணீர் கொண்டு அதன் முனைகளை ஒட்டி வைக்கவும்.

    அனைத்து ஓரங்களையும் நன்றாக மூடி வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சமோசா பாதி அளவு வெந்தபின் வெப்பத்தை அதிகரித்து மொறுமொறுப்பாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூடான சாக்லேட் சமோசா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்று வெஜிடபிள் சேர்த்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை பிரெட் துண்டுகள் - 6
    நெய் - சிறிதளவு
    தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
    கோஸ் - 100 கிராம்
    கேரட் - 100 கிராம்
    பன்னீர் துருவல் - 2 ஸ்பூன்
    வெண்ணெய்     - சிறிதளவு

    சட்னிக்கு...
     
    புதினா - ஒரு கைப்பிடி
    பூண்டு - 5 பல்
    பச்சை மிளகாய் - 1

    வெஜிடபிள் சாண்ட்விச்

    செய்முறை :

    கோஸ், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கேரட், கோஸ், பன்னீர் துருவலுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி சாஸ் ஊற்றி கலந்து கொள்ளவும்.

    சட்னிக்கான பொருட்களை, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

    பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி, ஒருபுறத்தில் சட்னியை தடவவும்.

    இதன் மீது கலந்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து, சட்னி தடவிய மற்றொரு பிரெட் துண்டை வைத்து மூடவும்.

    தோசைக்கல்லில் நெய் சிறிது ஊற்றி சாண்ட்விச்சை இருபுறமும் நன்கு வேகவிடவும்.

    சூப்பரான சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவை கலர்புல்லாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மூவர்ண புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆரஞ்சு நிறத்திற்கு:

    பாஸ்மதி அரிசி - 1 கப்
    நெய் - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி விழுது - 1/4 கப்
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் - 8
    உப்பு - சுவைக்க

    வெள்ளை நிறத்திற்கு:

    பாஸ்மதி அரிசி - 1 கப்

    பச்சை நிறத்திற்கு:

    நெய் - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி
    கீரை சாறு - 1/2 கப்
    உப்பு - சுவைக்கு

    மூவர்ண புலாவ்

    செய்முறை

    அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி பொரிந்ததும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதில் சாதம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    மற்றொரு பேனில் அதே போல நெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மிளகாய்  சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி விழுது, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாதம் வேகும்வரை மூடி வைக்கவும்.

    மற்றொரு கடாயில் மஞ்சள் தூள் மற்றும் சாதம் சேர்க்கவும்.

    அதில் பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கீரை சாறு சேர்த்து கிளறி மூடி வைத்து வேகவிடவும்.

    ஒரு தட்டில் ரிங் மோல்ட் வைத்து அதில் பச்சை நிற புலாவ் வைத்து அழுத்தம் கொடுக்கவும்.

    அடுத்து அதன் மேல் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற புலாவ்களை ஒன்றன்மீது ஒன்று வைத்து அழுத்தம் கொடுக்கவும்.

    ரிங் மோல்டை மெதுவாக எடுத்து ஒரு தட்டில் இந்த திரங்கா புலாவை சூடாக பரிமாறவும்.

    அருமையான திரங்கா புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிரீன் சப்பாத்தியில் உள்ள பீட்டா கரோடின் மற்றும் வைட்டமின் பி ஆகியன, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். இன்று இந்த சப்பாத்தியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    வேகவைத்த பட்டாணி - அரை கப்,
    புதினா - அரை கட்டு,
    கொத்தமல்லித்தழை - அரை கட்டு,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - தேவைக்கு,
    நெய் - 1 டீஸ்பூன்,
    சீரகத்தூள், கரம் மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவைக்கு,
    நெய் - சிறிதளவு.

    கிரீன் சப்பாத்தி

    செய்முறை :

    புதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து, நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    அரைத்த விழுதுடன், கோதுமை மாவு, நெய், கரம் மசாலா, சீரகத்தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு (சற்று இளக்கமாக) பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

    சத்தான கிரீன் சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருப்பு கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, சோடியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. கருப்பு கொண்டைக்கடலை குருமா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையானப் பொருள்கள்:

    கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

    அரைக்க:

    தேங்காய் - 3 துண்டுகள்
    கசகசா - 1/2 டீஸ்பூன்
    பொட்டுக்கடலை - 1/4 டீஸ்பூன்

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    கிராம்பு - 1
    பிரிஞ்சி இலை - 1
    சீரகம் - கொஞ்சம்
    பெருஞ்சீரகம் - கொஞ்சம்
    முந்திரி - 5

    கருப்பு கொண்டைக்கடலை குருமா

    செய்முறை:

    கருப்பு கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.

    கடலையைக் கழுவிவிட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும் .ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் வேக வைத்த கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

    எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

    கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.

    இப்போது அருமையான, கருப்பு கொண்டைக்கடலை குருமா தயார்.

    இது பூரி, சப்பாத்தி, நாண், சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சாண்ட்விச்சிலுள்ள பீட்டா கரோடின், குழந்தைகளுக்கு சரும ஆரோக்கியம் மற்றும் தெளிவான பார்வையை தருவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை பிரெட் ஸ்லைஸ் - 10,
    கேரட் (துருவியது) - 1 கப்,
    சீஸ் (துருவியது) - அரை கப்,
    வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
    பூண்டு - 3 பல்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    உப்பு - சிட்டிகை.

    கேரட் சாண்ட்விச்

    செய்முறை:

    பிரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.

    பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.

    வெண்ணெயை அடுப்பில் வைத்து உருக்கி, அதில் நசுக்கிய பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.

    ஐந்து நிமிடங்கள் வதக்கியபின் இறக்கி சீஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    ஒரு பிரெட் ஸ்லைஸின்மேல், இந்தக் கலவையில் சிறிதளவைத் தூவி, மற்றொரு ஸ்லைஸால் மூடவும்.

    வெண்ணெய் தடவி, டோஸ்டரில் ரோஸ்ட் செய்யுங்கள். அல்லது, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள்.

    சூப்பரான சத்தான கேரட் சாண்ட்விச் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காளானில் உள்ள தாது உப்பும், புரதமும் வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளுள் முக்கியமானவை. இன்று காளான் வைத்து பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 15,
    கடலை மாவு - அரை கப்,
    கார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்,
    அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்,
    மைதா - 1 டேபிள் ஸ்பூன்,
    சீரகத்தூள், மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    காளான் பஜ்ஜி

    செய்முறை :

    காளானை நன்றாக சுத்தம் செய்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, மைதா, சீரகத்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இதில் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து கொள்ளுங்கள்.

    காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்துப் பரிமாறுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காளானை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான காளான் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பசலைக்கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்க்கும்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக் கிழங்கு - 4,
    பசலைக் கீரை - 1 கட்டு,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 2 பல்,
    சீஸ் (துருவியது) - அரை கப்,
    பிரெட் ஸ்லைஸ் - 3,
    பிரெட் தூள் - தேவையான அளவு,
    எலுமிச்சம்பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
    கார்ன்ஃப்ளார் - கால் கப்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    பசலைக் கீரை கட்லெட்

    செய்முறை:

    கார்ன்ஃப்ளார் மாவை நீர்க்கக் கரைத்து கொள்ளுங்கள்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, கட்டிகள் இல்லாமல் மசித்துக் கொள்ளுங்கள்.

    கீரையை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    இந்த விழுதை, மசித்த கிழங்குடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அத்துடன் உதிர்த்த பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, துருவிய சீஸ் சேர்த்து, நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

    உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து, வேண்டிய வடிவத்தில் கட்லெட் செய்து, கார்ன்ஃபிளார் மாவில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான பசலைக்கீரை கட்லெட் ரெடி.

    குறிப்பு: பசலைக் கீரைக்கு பதிலாக, புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் பாதி, பாதி எடுத்து, அரைத்தும் இந்த கட்லெட்டை செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிங்கப்பூரில் மிகவும் பிரபலமானது 'மீன் தலைக் கறி’ (Fish Head Curry). இந்த மீன் தலைக்கறியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் தலை - 1 கிலோ (வஞ்சிரம், கொடுவா போன்ற வகை மீன்களில் பெரிய மீன்களின் தலையாக வாங்க வேண்டும்)
    வெண்டைக்காய் - கால் கிலோ
    கத்திரிக்காய் - கால் கிலோ
    நாட்டுத் தக்காளி் - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - கால் கிலோ
    புளி - 200 கிராம்
    மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
    மல்லித் தூள் (தனியாத் தூள்) - 4 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 2 குழிக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    வெல்லம் - சிறிதளவு

    தாளிக்க:

    கடுகு - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை- சிறிது

    மீன் தலைக் கறி

    செய்முறை:


    வெண்டைக்காயை காம்பை மட்டும் நீக்கி விட்டு முழுதாக அப்படியே வைக்கவும்.

    கத்தரிக்காய், நாட்டுத்தக்காளியை இரண்டாக வெட்டிக்கெள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    மீன் தலையைக் கழுவி உப்பு, மஞ்சள் தூள் தடவி ஊற விடவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.

    இதில் வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டுக் கிளறவும்.

    புளிக்கரைசல் இதில் ஊற்றி, கூடவே 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

    கலவை திக்காக வரும்போது, அதில் மீனைப் போடவும். மூன்று நிமிடம் கழித்து வெல்லம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். மீன் தலை 3 நிமிடம் தான் வேக வேண்டும்.

    சூப்பரான மீன் தலைக் கறி ரெடி.

    இட்லி, தோசை, சாதத்துக்கு அருமையான காம்பினேஷன் இந்தத் தலைக் கறி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஓட்ஸ் மக்கா சோள அடையை சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 2 கப்
    மக்கா சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    ப. மிளகாய் - 2 முதல் 3 வரை
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    எண்ணெய் - தேவையான அளவு

    ஓட்ஸ் மக்கா சோள அடை

    செய்முறை:

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் வாணலியில் ஓட்ஸைப் போட்டு, வறுத்தெடுக்கவும். சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத் கொள்ளவும்.

    அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சோள மாவு, மிளகாய் தூள், பெருங்காய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

    பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக் கொள்ளவும்.

    ஆரஞ்சு பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டிக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு சுமார் 6 உருண்டைகள் வரை வரும்.

    ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணை தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து வட்டமாகத் தட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கல்லில் எண்ணெய் தடவி தட்டி வைத்த அடையை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்றாக வேகும் வரை திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.

    அருமையான ஓட்ஸ் சோள அடை ரெடி.

    குறிப்பு:

    "சோள மாவு" என்று நான் குறிப்பிடிருப்பது, சூப், கிரேவி போன்றவற்றிற்குச் சேர்க்கும் "கார்ன் ஸ்டார்ச்" அல்ல. மஞ்சள் நிறத்தில் "கார்ன் மீல்" என்று கடைகளில் கிடைக்கும். இந்த மாவு இல்லையென்றால், சிறிது மக்கா சோளத்தை மிக்ஸியில் பொடித்தோ, அல்லது முழு சோளத்தை சற்று ஊற வைத்து அரைத்தோ சேர்க்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஹனி பிரியாணி என்கிற வெள்ளை பிரியாணி காயல்பட்டினத்தில் மிகவும் பிரபலமானது. அந்த ஊர் கல்யாண விருந்து மற்றும் சில முக்கிய விருந்துக்கு இந்த பிரியாணிதான் செய்வார்கள்..
    தேவையான பொருள்கள் :
     
    சிக்கன் - அரை கிலோ
    பிரியாணி அரிசி - 1/2 கிலோ
    பச்சைமிளகாய் - 15
    கொத்தமல்லி தழை - 1 கட்டு
    புதினா - 1/2 கட்டு
    வெங்காயம் - 6
    பிரியாணி இலை - 1
    உப்பு தேவைக்கு

    தாளிக்க :

    நெய் - 50 கிராம்
    தேங்காய் எண்ணெய் - 50 கிராம்
    இஞ்சி பூண்டு - 3 டீஸ்பூன்
    தயிர் - 3 டீஸ்பூன்
    ஏலக்காய் - 4
    பட்டை சிறிதளவு
    கிராம்பு - 2
    பிரியாணி இலை - 1
    கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
     
    அரைக்க தேவையான பொருள்கள் :

    முந்திரி - 25 கிராம்
    பாதம் - 25 கிராம்
    பிஸ்தா - 10 கிராம்
    கசகசா - 10

    அஹனி பிரியாணி

    செய்முறை :

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியினை 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை நீட்டமாக மெலிதாக நறுக்கி வைக்கவும்.

    சிக்கனுடன் 2 ஸ்பூன் த‌யிர், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க‌வும்.

    அடி க‌னமான‌ பாத்திர‌த்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்த‌ பின்பு தாளிக்க‌ வேண்டிய‌ பொருட்க‌ளை போட்டு தாளித்த பின்னர்
    வெங்காய‌ம், ப‌.மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.

    ந‌ன்றாக‌ வ‌த‌ங்கிய‌ பிற‌கு கலந்து வைத்து சிக்கனை போட‌வும்.
     
    இத‌னுட‌ன் அரைத்த‌ ந‌ட்ஸ் விழுது, உப்பு சேர்த்து ந‌ன்றாக‌ மூடிப்போட்டு 1/2 மணிநேரம் சிக்கனை வேக‌விட‌வும்.

    பிறகு அதில் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிவந்த பின்பு ஊற வைத்த அரிசியினை சேர்க்கவும். நன்றாக கிளறி விடவும். மேலே கடைசியாக எலுமிச்சை பழத்தினை சுற்றிவரை பிழிந்துவிடவும்.

    பிரியாணி சட்டியினை மூடி போட்டு மேலே ஒரு அடிகனமான பாத்திரம் வைத்து ஆவி போகாமல் 10 நிமிடம் ஹை தணலிலும் அடுத்த 15 நிமிடங்கள் குறைந்த தணலிலும் வைத்து அடுப்பினை அணைக்கவும்.

    பிறகு 20-30 நிமிடம் கழித்து சூட சூட பரிமாறவும்.

    அஹனி பிரியாணி ரெடி.

    குறிப்பு :

    குறைந்த தணலில் அடுப்பில் சட்டியினை வைக்கும் பொழுது தோசை தவாவினை கீழே வைத்து மேலே சட்டியினை வைத்தால் அதிகம் கீழே அடிபிடிக்காது.

    பிரியாணி எடுக்கும் பொழுது மரக்கரண்டியினை பயன்படுத்தவும். மரக்கரண்டியால் பிரியாணி எடுக்கும்பொழுது பிரியாணி உடையாமல் வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×