என் மலர்tooltip icon

    சமையல்

    வாயு தொல்லையை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
    தேவையான பொருட்கள்:

    வெற்றிலை - 6,
    மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்
    திப்பிலி - 2 டீஸ்பூன்,
    பூண்டு - 10 பல்
    பெருங்காயப்பொடி, உப்பு - தேவையான அளவு

    வெற்றிலை திப்பிலி

    செய்முறை  :

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி, வெற்றிலை, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    வெற்றிலை நன்கு வெந்ததும், சூப்பை வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்து அருந்தலாம்.

    வெற்றிலை திப்பிலி சூப் ரெடி.

    டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர்  இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் மிகவும் பிடிக்கும். இன்று வித்தியாசமான சிக்கன் முர்தபா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    கோதுமை - 3 கப்
    சிக்கன் - 200 கிராம்
    பட்டாணி - 100 கிராம்
    வெங்காயம் - கால் கிலோ
    இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
    முட்டை - 8
    கோஸ் - 100 கிராம்
    கேரட் - 50 கிராம்
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி இலை - 1 கொத்து
    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    துருவிய தேங்காய் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
     
    சிக்கன் முர்தபா

    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    கோஸ், கேரட், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கொஞ்சம் எண்ணெய், உப்பு, தண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு பிரைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை 30 மணிநேரம் ஊற வைத்த பிறகு சப்பாத்திகளாக சுட்டு வைக்கவும்.
     
    கடாயில் சிக்கனை போட்டு அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மசாலா மற்றும் உப்பு போட்டு வேகும்வரை வரட்டவும்.
     
    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம், கோஸ், கேரட், பட்டாணி, கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு வதக்கவும்.
     
    வெங்காயம் வதங்கிய பிறகு கொத்தமல்லி இலை, துருவிய தேங்காயை போட்டு தேங்காய் கொஞ்சம் கனிந்து சேர்ந்த பிறகு இறக்கவும்.
     
    அடுப்பில் ரொட்டி தவாவை வைத்து தவா கொஞ்சம் காய்ந்ததும், 2 டீஸ்பூன் முட்டையை சட்டியில் பரவலாக ஊற்றவும்.
     
    பிறகு அதன்மேல் தேய்த்து வைத்த ரொட்டியை போட்டு, முட்டை ரொட்டியுடன் நன்கு ஒட்டிய பிறகு, ரொட்டியை திருப்பி போடவும்.
     
    ரொட்டியின் முட்டை மேல் 2 ஸ்பூன் சிக்கன் கலவையை வைத்து சதுரமாக நான்கு பக்கமும் மடிக்க வேண்டும்.
     
    பிறகு முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி அழகாக சுட்டு எடுக்கவும்.

    சூப்பரான சிக்கன் முர்தபா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை உப்புமா மீந்து விட்டால் அதை வைத்து சுவையான பால்ஸ் செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை உப்புமா - ஒரு கப்

    தாளிக்க:


    நல்லெண்ணெய் அல்லது நெய் - ஒரு டீஸ்பூன்
    கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை - தேவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சாம்பார் பொடி - விருப்பப்பட்டால்
    மிளகாய்த்தூள் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை - விருப்பப்பட்டால்
    கொத்தமல்லி இலை - தேவைக்கு
    முந்திரி,வேர்க்கடலை - விருப்பப்பட்டால்

    கோதுமை உப்புமா பால்ஸ்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உப்மாவை உதிர்த்து சிறிய உருண்டையாக உருட்டி ஸ்டீமரில் ஐந்து நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து லேசாக வதக்கவும்.

    பின்னர் மஞ்சள் தூள், சாம்பார் பொடி (விருப்பப்பட்டால்) மிளகாய் தூள், உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வதக்கவும்.

    பின்னர் வேகவைத்த வைத்த உப்புமா உருண்டையை ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு தள்ளித் தள்ளிப் போடவும். உடனே கரண்டி விடாமல் சட்டியை மட்டும் லேசாக குலுக்கவும். பின்பு மூடியை போட்டு மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை வேகவிடவும்.

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு கொஞ்சம் பிழிந்து விடலாம்.

    அட்டகாசமான உப்புமா பால்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்த ஸ்நாக்ஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சாக்லேட், தேங்காய் சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தேங்காய் துருவல் - 200 கிராம்
    மேரி பிஸ்கட் ( Marie gold biscuits) - 10
    சாக்லேட் பவுடர் - 4 ஸ்பூன்
    வென்னிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
    கன்டன்ஸ்டு மில்க் - 150 கிராம்
    பால் - அரை கப்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன் (உருகியது)

    அலங்கரிக்க

    தேங்காய் துருவல் - தேவையான அளவு

    சாக்லேட் தேங்காய் பால்ஸ்

    செய்முறை


    மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட் தூள், சாக்லேட் பவுடர், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் அதில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை சேர்த்து அதனுடன் கன்டன்ஸ்டு மில்க், உருக்கிய வெண்ணெய், வென்னிலா எசன்ஸ், பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

    இந்த கலவை நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறவிடவும்.

    ஆறிய மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    பிடித்து வைத்த உருண்டைகளை தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்.

    இதை பிரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் எடுத்து பரிமாறவும்.

    அருமையான சாக்லேட் தேங்காய் பால்ஸ் ரெடி.

    இதை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரண்டை இலையை துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் ஒழியும். இஞ்சி, பிரண்டை சேர்த்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
    உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    இஞ்சி பிரண்டை துவையல்

    செய்முறை:

    பிரண்டையின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும்.

    அடுத்து அதில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும்.

    வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.

    அனைத்தும் அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பஜ்ஜி தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ். மாலை நேரத்தில் டீ யுடன் சேர்த்து சாப்பிடலாம். இன்று குடைமிளகாயில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    கடலைமாவு - 1 கப்
    அரிசி மாவு - 3 மேஜைக்கரண்டி
    குடைமிளகாய் - 2
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    சோடா உப்பு - 1 சிட்டிகை
    தண்ணிர் - 3/4 கப்
    கேசரி கலர் - 1 சிட்டிகை
    எண்ணெய் - பொரித்து எடுக்க

    குடைமிளகாய் பஜ்ஜி

    செய்முறை

    குடைமிளகாயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், பெருங்காயம், மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு, சோடா உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் சிறிது கட்டியாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டி வைத்த குடைமிளகாயை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூடான சுவையான குடைமிளகாய் பஜ்ஜியை சூடாக டீ, அல்லது காபி உடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட், மாதுளம் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இது இரண்டையும் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாதுளை முத்துக்கள் - ஒரு கப்,
    மாதுளைத் தோல் - கால் கப்,
    துருவிய பீட்ரூட் - கால் கப்,
    தக்காளி - 2,
    கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன்,
    வெண்ணெய் - அரை டீஸ்பூன்,
    கிராம்பு - 2,
    மிளகுத்தூள்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    பீட்ரூட் மாதுளம் பழம்

    செய்முறை:

    மாதுளைத் தோல், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்,

    மாதுளை முத்துக்கள், மாதுளைத் தோல், துருவிய பீட்ரூட், நறுக்கிய தக்காளியை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்க்கவும்.

    கிராம்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து லேசாக வறுக்கவும்.

    அரைத்த மாதுளை விழுது, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.

    உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    பீட்ரூட் மாதுளம் பழம் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் கீரை என்றால் சாப்பிடமாட்டார்கள். இவர்களுக்கு இந்த முறையில் கீரையை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    பசலைக்கீரை - 2 கட்டு,
    சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பசலைக்கீரை பூரி

    செய்முறை:

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை போட்டு சிறிது நேரம் வதக்கிய பிறகு ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பிறகு மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சுவையான சத்தான பசலைக்கீரை பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கல்யாண முருங்கையை உணவில் சேர்தது கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னைகளும் வராது. இன்று கல்யாண முருங்கை தோசை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 கப்
    இட்லிஅரிசி - 1 கப்
    கடலைபருப்பு - 4 ஸ்பூன்
    கல்யாண முருங்கை இலை - 1 கட்டு
    உப்பு - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயம் - சிட்டிகை
    எண்ணெய் - தேவையான அளவு

    கல்யாண முருங்கை தோசை

    செய்முறை

    கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கீரையை சுத்தம் செய்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும்.

    பச்சரிசி, இட்லி அரிசி, கடலைபருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

    பின்னர் கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும். பாதி அரைந்ததும் சுத்தம் செய்த கீரை, வற்றல், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சத்தான கல்யாண முருங்கை தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளின் வாய்க்கு சுவையாக வித்தியாசமாக ஏதேனும் செய்து கொடுக்க நினைத்தால், தக்காளி பாஸ்தா செய்து கொடுங்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாஸ்தா - 3 கப்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    தக்காளி - 2
    பூண்டு - 2-3 பற்கள்
    இஞ்சி - 1 இன்ச்
    பச்சை மிளகாய் - 1-2
    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது

    தக்காளி பாஸ்தா

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் பாஸ்தாவை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து விட்டு, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கேரட்டை சேர்த்து நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.

    தக்காளி பச்சை வாசனை போனவுடன் அதில் சாம்பார் பொடி, தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், தக்காளி பாஸ்தா ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை அடங்கியுள்ளன. இன்று பாலக்கீரையில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 1 கட்டு
    துவரம் பருப்பு - 1/4 கப்
    வெங்காயம் - 1
    மிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 2 கப்
    தேங்காய் - சிறிது

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

    பாலக்கீரை கூட்டு

    செய்முறை:

    துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பாலக்கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

    கடைசியாக அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பாலக்கீரை கூட்டு ரெடி.....

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை மாவில் தட்டை செய்து கொடுக்கலாம். இன்று இந்த தட்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    வெண்ணெய் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

    கோதுமை தட்டை

    செய்முறை:

    கடலைப்பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    அதனை சிறு உருண்டைகளாக்குங்கள்.

    உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி மெலிதாக தட்டைபோல் ஆக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த தட்டைகளை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சுவையான கோதுமை தட்டை ரெடி.

    இந்த தட்டையை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×