என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகளுக்கு மாலையில் சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை தேங்காய் வெல்ல தோசை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    அரிசி மாவு - அரை கப்
    பொடித்த வெல்லம் - அரை கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    கோதுமை தேங்காய் வெல்ல தோசை

    செய்முறை:

    ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

    வடிகட்டிய வெல்லத்துடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை கலந்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

    சிறு தீயில் தவாவை வைத்து எண்ணெய் தடவி மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, நன்றாக வெந்ததும் தோசையை திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை தேங்காய் வெல்ல தோசை

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பேட்டீஸ் இனிப்பும் புளிப்புமான ஒரு சிற்றுண்டி. இன்று இந்த சிற்றுண்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பேட்டீஸ்:

    தேவையான பொருட்கள் :


    உருளை கிழங்கு - கால் கிலோ
    பிரட் - 3 ஸ்லைஸ்
    பூண்டு - சிறிதளவு
    சோள மாவு - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

    செய்முறை :


    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

    பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்த பின்னர் அதனுடன் உதிர்த்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொறு மொறுப்பாக சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். சூப்பரான பேட்டீஸ் தயார்.

    ரகடா பட்டீஸ்

    ரகடா :

    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - ஒரு கப்
    வெங்காயம் - ஒன்று (பெரியது)
    கரம்மசாலா தூள் - 2 ஸ்பூன்
    தக்காளி சாஸ் - தேவையான அளவு
    லெமன் ஜூஸ் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சர்க்கரை - அரை ஸ்பூன்
    இஞ்சி - சிறு துண்டு
    பூண்டு - 4 பல்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    செய்முறை :

    பட்டாணியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.

    மிக்சியில் இஞ்சி, பூண்டு, மீதமுள்ள வெங்காயம், மீதிமுள்ள பட்டாணி சேர்த்து அரைக்க வேண்டும்.

    அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.

    இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.

    பேட்டீஸ் மேல் ரகடாவை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.

    சூப்பரான ரகடா பேட்டீஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ரோக்கோலியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ஓட்ஸ், ப்ரோக்கோலி சேர்த்து சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - அரை கப்,
    ப்ரோக்கோலி - கால் கப்,
    ஓமம் - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    பிரிஞ்சி இலை - ஒன்று,
    இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு (தட்டியது),
    பால் - ஒரு கப்,
    மல்லித்தூள் (தனியாத்தூள்),
    மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
    வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    ஓட்ஸ் - ப்ரோக்கோலி சூப்

    செய்முறை :

    குக்கரில் வெண்ணெயை சூடாக்கி, பிரிஞ்சி இலை, ப்ரோக்கோலிகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, ஒரு கப் பால், ஓட்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

    பிறகு இஞ்சி, மிளகாயை நீக்கிவிட்டு (இல்லையென்றால் மிகவும் காரமாக இருக்கும்), கலவையை மிக்ஸியில் விழுதுபோல் அரைத்து, பெரிய கண் உள்ள வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.

    வடிகட்டிய கலவையை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, ஓமம், தேவையெனில் பால் (அ) தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் ஒரு கொதிக்க விடவும்.

    பரிமாறுவதற்கு முன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் தூவவும்.

    சத்தான ஓட்ஸ் - ப்ரோக்கோலி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை சீஸ் மஃபினை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 6
    ஷ்ரெட்டடு சீஸ்(Shredded cheese) - 6 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    உப்பு, மிளகு - தேவையான அளவு
    குடை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு

    முட்டை சீஸ் மஃபின்

    செய்முறை :

    வெங்காயம், குடை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மைக்ரோவேவ் அவனை 180 - 200C’ல் முற்சூடு செய்யவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

    பின்னர் பொடியாக நறுக்கிய வெங்கயம், குடைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

    இப்பொழுது 6 மஃபின் மோள்டுகளில் எண்ணெய் தடவிய பின் இந்த கலவை ஊற்றி சிறிது சீஸை மேலே தூவி விடவேண்டும்.

    முற்சூடு செய்த அவனில் வைத்து 15 - 20 நிமிடம் பேக் செய்யவும்.

    சுவையான முட்டை சீஸ் மஃபின் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுவர்கள் வெற்றிலை துளசி சூப் செய்து குடிக்கலாம். இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தண்ணீர் - 1 கப்
    சீரகப் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
    வெற்றிலை - 5 அல்லது 6 இலைகள்
    புளி கரைசல் - ஒரு டீஸ்பூன்
    இஞ்சி - ஒரு துண்டு
    தக்காளி - ஒன்று
    சிவப்பு மிளகாய் - ஒன்று
    உப்பு - தேவையான அளவு

    வெற்றிலை துளசி

    செய்முறை

    இஞ்சியை ஒன்றும் பாதியாக நசுக்கிகொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் தண்ணீர் ஒரு கப் (100 மிலி) ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி துளசி இலை, வெற்றிலை ஐந்தாறு இலைகள், புளி கரைசல், நசுக்கிய இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து பக்குவம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி மிளகு தூள் சேர்த்து சூடாக சூப்பைப் பரிமாறவும்.

    சத்தான வெற்றிலை துளசி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிலேயே கேக் செய்வது மிகவும் எளிமையானது. இன்று கேழ்வரகு, சாக்லேட் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 35 கிராம்
    கோதுமை மாவு - 35 கிராம்
    வெண்ணெய் - 40 கிராம்
    சர்க்கரை - 65 கிராம்
    பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
    கோக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்புத் தண்ணீர் - ஒன்றே கால் டீஸ்பூன்
    எண்ணெய் - ஒன்றே கால் டீஸ்பூன்
    சாக்லேட் எசென்ஸ் - 1 டீஸ்பூன்
    முட்டை - 1
    சாக்லேட் துகள்கள் - தேவையான அளவு

    ராகி சாக்லேட் கேக்

    செய்முறை:

    கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், கோக்கோ பவுடர் மூன்றையும் சேர்த்துக் சலித்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் சேர்த்து சிறிது நேரத்துக்கு நன்றாகக் கலக்கவும்.

    பின்னர் அதனுடன் முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும்.

    இதனுடன் உப்புத் தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அனைத்து நன்றாக கலந்தவுடன் சலித்த மாவுகளை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பொங்கி வரும் வரை கலக்கவும்.

    கடைசியாக சாக்லெட் எசென்ஸ் ஊற்றி கலக்கி விடவும்.

    எல்லாவற்றையும் ரெடி செய்தவுடன் கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி, பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும்.

    அதன் மேல் கேக் மாவைக் கொட்டவும். கேக் பாத்திரத்தை லேசாக தரையில் தட்டி சமன்படுத்தவும்.

    இதை குக்க‌ரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து இறக்கி விடவும்.

    கேக் ஆறியதும் கிரீம் தடவி சாக்லெட் துகள் களைத் தூவி அழகுபடுத்தி பரிமாறவும்.

    சூப்பரான ராகி சாக்லேட் கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுநீர் எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகக் கற்கள் கரைய உதவும் இந்த சூப். உடல் பருமன், கொலஸ்ட்ராலை குறைக்கும். இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு - 1,
    இஞ்சித் துருவல், சீரகத்தூள், மிளகுத்தூள்  - ஒரு டீஸ்பூன்,
    உப்பு  - தேவையான அளவு. 

    வாழைத்தண்டு சூப்

    செய்முறை:

    வாழைத்தண்டில் நாரை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நறுக்கிய வாழைத்தண்டுடன் இஞ்சித் துருவல், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தண்டு நன்றாக வெந்ததும் அதில் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.

    சிறிதளவு பால் சேர்த்தும் பரிமாறலாம்.

    சூப்பரான வாழைத்தண்டு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை பொடிமாஸ் தோசை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    முட்டை - 4
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
    தோசை மாவு (வீட்டில் தயாரித்த) - தேவைக்கேற்ப

    முட்டை பொடிமாஸ் தோசை

    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, உப்பு, மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். முட்டையை நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும். முட்டை பொடிமாஸ் தயார்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைக்கு மாவு எடுத்து முழு அளவில் ஊற்றாமல் சற்று சின்னதாக ஊற்றி, முட்டை பொடிமாஸை ஒரு கரண்டி அளவு போட்டு நன்றாக அமுக்கி விடுங்கள். தோசை மாவில் முட்டை பொடிமாஸ் நன்றாக அமுங்கி இருக்க வேண்டும். பின் தோசையை திருப்பி போட்டு நான்றாக வெந்ததும் எடுக்க வேண'டும். மூடி போட்டும் எடுக்கலாம். பின் சூடாக பரிமாறவும்..

    கார சட்னி, தக்காளி தொக்கு, சிக்கன், மட்டன் கிரேவி ஏதாவது ஒன்றுடன் தொட்டு சாப்பிடலாம்.

    குறிப்பு: இந்த தோசையை முட்டை பொடிமாஸுக்கு பதில், டார்க் சாக்லெட், கேரட், பீட்ரூட் ஆகியவைகளை கேரட் சீவியால் சீவி தோசைமேல் தூவியும் செய்யலாம் இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

    விஜயலெஷ்மி கமலகண்ணன்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் கீரையை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் கீரை தயிர் மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கீரை - 2 கப்
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    தயிர் - 1 கப்
    உப்பு - தேவைக்கு

    கீரை தயிர் மசியல்

    செய்முறை :


    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வெறும் வாணலியில் முளைக் கீரையைப் போட்டு வேகவிடுங்கள்.

    அடுத்து அதில் தேங்காய் கலவையை போட்டு கிளறவும்.

    பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கீரை கெட்டியானவுடன் இறக்கி, தயிர் சேர்த்துக் கலக்கிப் பரிமாறுங்கள்.

    சூப்பரான கீரை தயிர் மசியல் ரெடி.

    இதற்கு எந்த கீரையை வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகளுக்கு கவுனி அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
        
    கவுனி அரிசி - ஒரு கிலோ
    பாகு  வெல்லம் - அரை கிலோ
    சர்க்கரை - ஒரு ஸ்பூன்
    ஏலக்காய் - 4
    தேவையான எண்ணெய் - பொரிப்பதற்கு

    கவுனி அரிசி

    செய்முறை

    கவுனி அரிசியை நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    பின்னர் தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் வரை ஆறவிட வேண்டும். அரிசியை மாவாக திரிக்க வேண்டும்.

    பாகு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி பாகு வெல்லத்தை சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு வெல்லத்தை எடுக்க வேண்டும்.

    அதன்பின் கவுனி அரிசி மாவில் சர்க்கரை, பொடித்த ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறிய பிறகு வட்ட வடிவில் கவுனி அரிசி மாவை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூடான சுவையான கவுனி அரிசி அதிரசம் தயார்.

    இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆரோக்கியமானது புதினாக்கீரை சூப். இந்த சூப்பை தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்று வலி, அஜீரணம், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குறையும்.
    தேவையான பொருள்கள்:

    புதினா - 1 கட்டு
    பூண்டு- பாதி (சிறியது)
    மிளகு - 2 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 10
    எலுமிச்சை பழம் - பாதி
    உப்பு - தேவையான அளவு

    புதினா

    செய்முறை:


    புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டு, மிளகு மற்றும் சீரகத்தை சிறிது தட்டி வைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் தினாவை போட்டு நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் தட்டி வைத்த பூண்டு, மிளகு, சீரகத்தை போட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

    சூப் பதம் வந்ததும் கடைசியாக எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி இறக்கி பரிமாறவும்.

    சுவையான, ஆரோக்கியமான புதினாக்கீரை சூப் தயார். இதை தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட எந்த நோய்களும் வராமல் தடுக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி - 1/2 கப்
    உருளைக் கிழங்கு - 250 கிராம்
    சீஸ் - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    மாவு பிசைய :

    மைதா - 2 கப்
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    உருளைக்கிழங்கு சீஸ் சமோசா

    செய்முறை :

    உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உறித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.

    அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.

    திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.

    அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.

    இப்படி ஒவ்வொரு மாவாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசா அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.

    சுவையான உருளைக்கிழங்கு சீஸ் சமோசா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×