என் மலர்tooltip icon

    சமையல்

    சாலட்டில் கலோரிகள், கொழுப்புகள் குறைவாக இருக்கும். காலை, மாலையில் சாலட் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்று பன்னீர் வெஜிடபிள் சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 1 கப்
    வெங்காயம் - 1  
    தக்காளி - 1
    வெள்ளரிக்காய் - 1
    பச்சை மிளகாய் - 1
    கடுகு தூள் - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - 1 டீஸ்பூன்

    பன்னீர் வெஜிடபிள் சாலட்

    செய்முறை:

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பன்னீரை போட்டு 2-3 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும்.

    பின் அதனை இறக்கி, ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து, கடுகு தூள், உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும்.

    இறுதியில் அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.

    இப்போது பன்னீர் வெஜிடபிள் சாலட் ரெடி!!!

    குறிப்பு: இத்துடன் விருப்பமான காய்கறிகளை வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் 500 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - துண்டு ஒன்று,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
    பூண்டு - 5 பல்,
    முட்டை - ஒன்று,
    சோளமாவு - ஒரு ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,
    பிரெட் தூள் - தேவையான அளவு
    கரம் மசாலா - அரை ஸ்பூன்,
    சாட் மசாலா - அரை ஸ்பூன்,
    மிளகு தூள் - அரை ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.

    இறால் கட்லெட்

    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி இறாலை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி விடவும்.

    வடிகட்டிய இறாலை மிகவும் சிறியதாக பொடிபொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    இந்த இறாலுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதனுடன் கரம் மசாலா, சாட் மசாலா, மிளகு தூள் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.

    அதில் பிரட் தூள், சோளமாவு மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்ந்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக வடை செய்கிற மாதிரி செய்து நடுவில் முந்திரி பருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி 35 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சுவையான இறால் கட்லெட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கைக்காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. இன்று முருங்கைக்காய் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முருங்கைக்காய் - 20 கிராம்
    பயத்தம் பருப்பு - 25 கிராம்
    வெங்காயம் - 4
    தக்காளி - 2
    மிளகு - 5 கிராம்
    பட்டை - 1
    கிராம்பு - 1
    தேங்காய் பால் - 100 மி.லி
    நெய் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    முருங்கைக்காய் பாசிப்பருப்பு சூப்

    செய்முறை:

    முருங்கைக்காயை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

    பிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த முருங்கைக்காய் கலவையை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி கொதிக்க வைத்து வடிக்கட்டி சூடாக பரிமாறவும்.

    சுவையான, ஆரோக்கியமான முருங்கைக்காய் பாசிப்பருப்பு சூப் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வெந்தயக்கீரை கார குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயக் கீரை - 1/2 கப்
    சின்ன வெங்காயம் - 20
    பூண்டு - 10 பல்
    புளி - தேவையான அளவு
    சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லி தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    பெருஞ்சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/4 தேக்கரண்டி
    வெல்லம் - ஒரு சிறிய துண்டு

    வெந்தயக்கீரை கார குழம்பு

    செய்முறை  :


    வெந்தயக் கீரையை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும்.

    பின் சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து சாம்பார் தூள், சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பெருஞ் சீரகம் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

    கடைசியாக வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

    மேலே நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி பரிமாறவும்.

    சூப்பரான வெந்தயக்கீரை கார குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று தக்காளி, தேங்காய் பால் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - 2,
    தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்,
    வறுத்து பொடித்த தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிது,
    பிரெட் துண்டுகள் - 2
    உப்பு - தேவையான அளவு.

    தக்காளி தேங்காய்ப்பால் சூப்

    செய்முறை

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு வறுத்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பாத்திரத்தில் தக்காளியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்து விழுதாக அரைக்கவும்.

    பாத்திரத்தில் தக்காளி விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் கலந்து இறக்கி, அதன் மேலே தேங்காய்ப்பால், கொத்தமல்லித்தழை, பொரித்த பிரெட் துண்டுகள் தூவி பரிமாறவும்.

    சூப்பரான தக்காளி தேங்காய்ப்பால் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன், மட்டனை விட மீனில் செய்யும் கபாப் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - அரை கிலோ
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    வினிகர் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    மீன் கபாப்

    செய்முறை :

    வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

    மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.

    பின்பு அதில் உள்ள சதைப் பகுதியை மட்டும் மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    அருமையான மீன் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பர்கள் ஒட்ஸ், கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இவை இரண்டையும் சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 3 கப்
    கோதுமை மாவு - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு

    ஓட்ஸ் கோதுமை டயட் ரொட்டி

    செய்முறை

    ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்சை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்

    பிசைந்த மாவை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

    விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஓட்ஸ் கோதுமை டயட் ரொட்டி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 150 கிராம்
    பட்டர் - 200 கிராம்
    முட்டை - 200 கிராம் (3or4)
    சர்க்கரை - 200 கிராம்
    கொக்கோ பவுடர் - 50 கிராம்
    பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
    வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    ஸ்பைசஸ் - 1 டீஸ்பூன் (விருப்பப் பட்டால்)
    (ஜாதிக்காய், ஏலம், பட்டை மிக்ஸ்)
    நட்ஸ்(வால் நட்ஸ், முந்திரி பருப்பு) - 25 கிராம்
    ஃப்ரூட்ஸ் - 25 கிராம்
    (டூட்டி ஃப்ரூடி, உலர் திராட்சை, ட்ரை மிக்ஸ்ட் ஃப்ரூட்)
    பாதாம் எசன்ஸ் - 2 ட்ராப் (விருப்பப்பட்டால்)
    ஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
    ஒயின் - 2 டீஸ்பூன்( விருப்பப்பட்டால்)
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    க்ளிசெரின் - 1 டீஸ்பூன்

    சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக்

    செய்முறை :

    மைதா மாவு, பேக்கிங் பவுடர், ஸ்பைசஸ், சாக்லேட் பவுடர் எல்லாம் சேர்த்து மும்முறை சலித்து தனியே வைத்துக் கொள்ளவும்.

    சர்க்கரையை பொடித்து வைக்கவும்.

    பேக்கிங் டிரேயில் பட்டர் பேப்பர் போட்டு, எண்ணெய் தடவி மாவு தூவி தட்டி ரெடி பண்ணிக் கொள்ளவும்.

    நட்ஸ் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக திரித்து கொள்ளவும்.

    ஃப்ரூட்ஸ்சையும், நட்ஸ்சையும் ஒரு டேபிள் ஸ்பூன் மாவில் மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.

    பட்டரை பீட்டரால் சேர்த்து அடிக்கவும்.

    அடுத்து பொடித்த சர்க்கரையை போட்டு அடிக்கவும்.

    (fluffy) முட்டையையும், பட்டர் சர்க்கரை கலவையுடன் சேர்த்து அடித்து கொள்ளவும்,

    தயிர் சேர்க்கவும், வெனிலா எசன்ஸ், பாதாம் எசன்ஸ் சேர்க்கவும், கிளிசரின் சேர்க்கவும். நன்றாக மிக்ஸ் செய்யவும்.

    பின்பு சலித்த மாவை பட்டர், சர்க்கரை, முட்டை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக சேர்த்து பிரட்டவும்(fold in one direction). அடுத்து ஃப்ரூட்ஸ், நட்ஸ் கலந்த மாவை போட்டு கலந்து கொள்ளவும். இப்பொழுது கேக் மாவு ரெடியாகி விட்டது.

    சூடு செய்த ஒவனில் பேக்கிங் ட்ரேயில் கேக் மாவை விட்டு 170 - 180 டிகிரியில் 35 - 40 நிமிடம் வைத்து எடுக்கவும். கேக் நன்றாக ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும். சுவையான ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் ரெடி.

    குறிப்பு:


    நட்ஸ், ஃப்ரூட் சேர்க்காமலும் ப்லைன் சாக்லேட் கேக் செய்யலாம். தயிர், கிளிசரின், எஸன்ஸ், ஸ்பைசஸ் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோய் வந்துட்டாலே நாவை கட்டுப்படுத்தனும். எது சாப்பிடனும்?! சாப்பிடக்கூடாது என பெரிய லிஸ்ட் போடுவாங்க. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் தோசையை இன்று பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்

    கோதுமை - அரை கப்,
    புழுங்கரிசி - அரை கப்,
    பச்சரிசி - அரை கப்,
    துவரம் பருப்பு - அரை கப்,
    கடலைபருப்பு - அரை கப்,
    வெந்தயம் - 2 தேக்கரண்டி,
    மிளகு - 2 தேக்கரண்டி,
    உப்பு - ருசிக்கேற்ப,
    சீரகம் - 2 தேக்கரண்டி,
    கறிவேப்பிலை - 2 கொத்து,
    தூள் பெருங்காயம் - அரை தேக்கரண்டி,
    எண்ணெய் - தேவையான அளவு

    கோதுமை மிளகு சீரக தோசை

    செய்முறை


    மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.

    அரிசி, பருப்பு, வெந்தயம், கோதுமையை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைத்த பின் தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவேண்டும்.

    தட்டி வைத்த சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சுவையான மிளகு சீரக தோசை ரெடி.

    ஜீரணக்கோளாறு உள்ளவர்களுக்கு மிக நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காடை முட்டை குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பரான இருக்கும். இன்று காடை முட்டையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காடை முட்டை - 20
    எண்ணெய் - தேவையான அளவு
    சீரகம் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
    இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
    கரம்மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
    நீர் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
    காடை முட்டை


    செய்முறை :

    தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடை முட்டையை வேக வைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும்

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

    மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்

    அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    காடை முட்டை குழம்பு ரெடி!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றும் சோயா பீன்ஸ் சத்தானதும் சுவையானது. இன்று சோயா பீன்ஸ் சுண்டல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் - 1/2 கப்
    துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    எண்ணெய் - அரை தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள்  - 2 சிட்டிகை
    கறிவேப்பிலை - 1 கொத்து

    சோயா பீன்ஸ் சுண்டல்

    செய்முறை

    சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.

    கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும்.

    ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

    சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் உடலுக்கு நன்மை பயப்பதோடு உடல் எடை கூடுவதையும் தடுக்கும். இன்று தீபாவளி ஸ்பெஷல் தினை முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை - 2 கப் (வறுத்தது)
    பொட்டுக்கடலை - 2/3 கப் (வறுத்தது)
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த்தூள் - ¼ தேக்கரண்டி
    ஓமம் - 1 தேக்கரண்டி
    கருப்பு எள் - 1 தேக்கரண்டி
    காய்ச்சிய வெண்ணெய் - ¼ கப்
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    முறுக்கு

    செய்முறை

    தினையையும், பொட்டுக்கடலையையும் தனித்தனியாக வாணலியில் இட்டு வறுத்தெடுத்துப் பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு இரண்டையும் கலந்து அவற்றுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், கருப்பு எள் இவற்றையும் சேர்த்து கலக்கி அவற்றுடன் காய்ச்சிய வெண்ணையையும் சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் கலந்து முறுக்கு மாவை மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாத பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் முறுக்குகளை பொரித்தெடுக்கலாம்.

    வெண்ணெய் மற்றும் பொட்டுக்கடலை மாவு அதிகமானால் முறுக்கு சரியாக வராமல் பிரிந்து போகக்கூடும். அதுபோன்ற சமையங்களில் அதிகப்படியாக வைத்திருக்கும் தினை மாவைக் கலந்து கொண்டால் முறுக்கு மொறு மொறுப்பாக வரும்.

    சூப்பரான தினை முறுக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×