என் மலர்tooltip icon

    சமையல்

    தீபாவளி அன்று சாப்பிடும் எண்ணெய் பலகாரங்களும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தீபாவளி லேகியத்தைச் சாப்பிட்டால், அதிலிருந்து நிவாரணம் பெறலாம்.
    தீபாவளி லேகியம் சாப்பிட்டால், பல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து முடித்ததுமே தீபாவளி லேகியத்தில் ஓர் உருண்டையை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாம். இது தீபாவளியின்போது உடல் கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

    தீபாவளி லேகியத்தைச் சாப்பிட்டால், அதிலிருந்து நிவாரணம் பெறலாம். தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தைச் சாப்பிடலாம். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த லேகியத்தை வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

    தேவையான பொருட்கள்

    மிளகு - இரண்டு டீஸ்பூன்,
    சீரகம் - இரண்டரை டீஸ்பூன்,
    தனியா - இரண்டரை டீஸ்பூன்,
    ஓமம் - 20 கிராம்,
    கண்டதிப்பிலி - 10 குச்சிகள்,
    சுக்கு - ஒரு துண்டு,
    ஏலக்காய் - இரண்டு,
    வெல்லம் - 100 கிராம்,
    நெய் - தேவையான அளவு

    தீபாவளி லேகியம்

    செய்முறை

    இதில் வெல்லம், நெய் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் லேசாக வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும்.

    இது முழுமையாகப் பொடியாகாவிட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிட்டு மீண்டும் நைசாக அரைக்கவும்.

    அரைத்த பொருள்கள் அனைத்தையும் ஓர் அடிகனமான வாணலியில் கொட்டி கேஸ் ஸ்டவ்வை `சிம்'மில்வைத்துக் கிளறவும். இடையே வெல்லம், நெய் என ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து மீண்டும் கிளறினால் தீபாவளி லேகியம் தயார்.

    இது ஒருவேளைக்கு நான்கைந்து பேர் சாப்பிடப் போதுமானதாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளிக்கு மட்டும்தான் பலவகையான இனிப்புகளை செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வோம். இன்று நெய் பால் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நெய் - 3 தேக்கரண்டி
    எழுமிச்சைசாறு - 2 தேக்கரண்டி
    சர்க்கரை - ¾ கப்
    பால் - 1½ லிட்டர்
    அலங்கரிக்க - பாதாம், பிஸ்தா

    நெய் பால் கேக்

    செய்முறை:

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு நான்ஸ்டிக் ஸ்டிக் கடாயில் ஒன்றரை லிட்டர் பாலை ஊற்றி அதை மிதமான சூட்டில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரட்டுப்பால் போல் பாலானது திரண்டு வரும். அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து மறுபடியும் கிளற வேண்டும். இப்பொழுது முக்கால் கப் சர்க்கரையை சிறிது சிறிதாக கலந்து கிளற வேண்டும்.

    பால் திரட்டானது சர்க்கரை சேர்த்தவுடன் இளகி மறுபடியும் கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இப்பொழுது நெய்யையும் ஊற்றி கிளற, கிளற நன்கு திரண்டு வரும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்தப்பால் திரட்டை அதில் கொட்டி சமப்படுத்தி வைக்க வேண்டும்.

    இந்த கலவையை அறை வெப்பத்திலேயே நன்கு ஆறவிட்டு விட வேண்டும். நன்கு ஆறிய பின்பு இவற்றை வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போட்டு அதன் மேல் பாதாம், பிஸ்தா வைத்து அலங்கரிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள், உடல் கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பயன் அடையலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆளி விதை - அரை கப் (Flax seeds),
    எள் - கால் கப்,
    உளுத்தம்பருப்பு - கால் கப்,
    கடலைப்பருப்பு - கால் கப்,
    காய்ந்த மிளகாய் - 10,
    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    ஆளி விதை 

    செய்முறை

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் ஆளி விதை மற்றும் எள்ளை தனித்தனியாக படபடவென்று பொரியும் படி வறுத்து கொள்ளவும்.

    பிறகு சிறிது எண்ணெய் விட்டு மற்ற அனைத்தையும் தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அனைத்துப் பொருட்களும் ஆறியவுடன் தேவையான உப்பு சேர்த்து கரகரவென்று பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    இட்லி, தோசைக்கு தொட்டுகொள்ளவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா அருமையாக இருக்கும். இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    வேர்க்கடலை - 1/4 கப்,
    மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
    முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1 கைப்பிடி,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா

    செய்முறை :

    முருங்கைக்கீரை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சத்து மிக்க பழங்களும் ஓட்ஸ் மற்றும் பால் கலந்த அருமையான உணவை காலையில் எடுத்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள், பேரீச்சை பழம், மாதுளை, வாழைப்பழம் சேர்ந்த கலவை - 2 கப்
    பால் - 2 கப்
    ஓட்ஸ் - கால் கப்
    உப்பு - ஒரு சிட்டிகை
    தேன் - 2 மேசைக்கரண்டி
    உலர்ந்த திராட்சை - 2 மேசைக்கரண்டி

    சாலட்

    செய்முறை :

    பழங்களை தேவையான வடிவில் வெட்டி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே காய்ச்சிய பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கும்போது ஓட்ஸ் மற்றும் உப்பைச் சேர்க்கவும். ஒரு சில நிமிடங்களில் ஓட்ஸ் வெந்து குழைந்து விடும்.

    ஓட்ஸ் வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து ஓட்ஸ் கலவை கெட்டியாக இருந்தால் மேலும் பால் ஊற்றி தளர இருக்குமாறு கலக்கவும்.

    இந்த ஓட்ஸ் கலவையில் பழங்கள், திராட்சை, தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அதை கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.

    * இதில் விரும்பிய பழங்களையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கிரில் சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மைக்ரோவேவ் ஓவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    தயிர் - 1/2 கப்
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    முட்டை - 1
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - சிறிதளவு

    மைக்ரோவேவ் ஓவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி?

    செய்முறை:


    சிக்கனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    மைக்ரோவேவ் ஓவனை 200 டிகிரி சூடு பண்ணவும்.

    இப்போது சிக்கனுடன் எண்ணெய் சிறிது சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் வைக்ககூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி சூட்டில் 20 நிமிடம் வைக்கவும்.

    பிறகு அதை வெளியே எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும்.

    மிகவும் சுவையான கிரில் சிக்கன்  ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு இளநீர் தக்காளி கிளியர் சூப் மிகவும் உகந்தது. இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இளநீர் - 2 கப் (அதிக இனிப்பு இல்லாத இளநீராக வாங்கவும்),
    தக்காளிச் சாறு - கால் கப்,
    இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

    தாளிக்க:

    கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்).

    தக்காளி, இளநீர்

    செய்முறை:

    இளநீர், இஞ்சிச் சாறு, தக்காளிச் சாறு, உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி, நுரைத்து வருகையில்... தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.

    கடைசியாக மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

    குறிப்பு: இதை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசிக்காது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஸ்வீட் கார்லிக் சிக்கன் இருக்கும். இன்று இதன் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1 கிலோ (எலும்பு நீக்கியது)
    கோதுமை மாவு - 1/2 கப்
    பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    மிளகு - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    பட்டர் - 1 மேசைக்கரண்டி
    பூண்டு இஞ்சி விழுது - 2 மேசைக்கரண்டி
    சோயா சோஸ் - கால் கப்
    தேன் - 5 மேசைக்கரண்டி
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    பிரவுண் சுகர் - 1 மேசைக்கரண்டி
    எள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு

    சூப்பரான ஸ்வீட் கார்லிக் சிக்கன்

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பூண்டு விழுது, மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    சிக்கன் துண்டுகளை இந்த கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் போட்டு சூடானதும் பூண்டு, இஞ்சி, சோயா சோஸ், தேன், பிரவுண் சுகர், சேர்த்து நன்கு சூடாக்கிய பின் பொரித்த இறைச்சி துண்டுகளை போடவும்.

    கடைசியாக வறுத்த எள் கொஞ்சம் தூவவும்.

    அடுப்பில் இருந்து இறக்கி வெங்காயத்தாளை தூவி பரிமாறவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்லிக் சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதத்திற்கு சைடிஷ்ஷாகவும், ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிட சுவையாக இருக்கும் இந்த மீல் மேக்கர் கட்லெட். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீல் மேக்கர் - 100 கிராம்
    பொட்டுக் கடலை மாவு - அரை கப்
    பெரிய வெங்காயம் - 1
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூம் - கால் தேக்கரண்டி
    சோள மாவு - ஒரு தேக்கரண்டி
    கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    மீல் மேக்கர் கட்லெட்

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் மீல் மேக்கரை அரைமணிநேரம் ஊறவைத்த பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், கறிமசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் அரைத்த மீல் மேக்கரை போட்டு கட்லெட் மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கட்லெட் போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    வித்தியாசமான மீல் மேக்கர் கட்லெட் தயார்..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புரத சத்து நிறைந்த இந்த சிக்கன் கிரில்டு சாண்ட்விச்சை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த சிக்கன் - 2 துண்டுகள்
    சூக்கினி - 1
    பூண்டு - 2
    எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
    கோதுமை பிரெட் - 2 ஸ்லைஸ்
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

    சிக்கன் கிரில்டு சாண்ட்விச்

    செய்முறை:

    பூண்டை உரித்து துருவி கொள்ளவும்.

    ஒரு பௌலில் துருவிய பூண்டை போட்டு அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை சாண்ட்விச் மேல் தடவ பயன்படுத்தலாம்.

    சிக்கன் ஸ்லைஸ் மற்றும் சூக்கினியின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி கிரில் செய்து கொள்ளவும். சில நிமிடங்கள் வேக வைத்து மொறுமொறுப்பாக செய்து எடுக்கவும்.

    ஒரு கோதுமை பிரெட்டை வைத்து அதில் பூண்டு எலுமிச்சை சாறை தடவி அதன் மேல் கிரில் செய்த சிக்கன் ஸ்லைஸ் மற்றும் சூக்கினியை வைத்து அதன் மேல் மற்றொரு கோதுமை பிரெட்டால் மூட வேண்டும்.

    இப்போது புரதம் நிறைந்த சாண்ட்விச் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் 65 அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 250 கிராம்
    இஞ்சி - 1/2 துண்டு
    பூண்டு - 7 பற்கள்
    பச்சை மிளகாய் - 5
    கடலைமாவு - 1/4 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    வெண்டைக்காய் 65

    செய்முறை

    மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பௌலில் நறுக்கிய வெண்டைக்காயில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்த வைத்துள்ள வெண்டைக்காயை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.

    பின் சிறிதளவு கடலை, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.

    பின் பொரித்தவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதன்மேல் மாங்காய் தூள் மற்றும் மசாலா தூவி கொள்ளவும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
     
    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் கஞ்சி, களி, இட்லி, தோசை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேழ்வரகு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கேழ்வரகு இட்லி - 5
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    முந்திரி - 5
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    கறிவேப்பிலை - சிறிது  

    ராகி இட்லி

    செய்முறை :

    கேழ்வரகு இட்லிகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், மிளகாய், இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.  
     
    உப்பு தேவைப்பட்டால் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.

    சுவையான கேழ்வரகு இட்லி உப்புமா ரெடி.

    * காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலையில் இப்படி செய்து அசத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×