என் மலர்
சமையல்
விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - முக்கால் கிலோ
முருங்கைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
முழு மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை :
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
முருங்கைக்காயை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய்த் துருவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
காய்ந்த மிளகாய், முழுமல்லி (தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக விட்டு இறக்கவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
மட்டனுடன் மசாலா கலவை நன்கு சேர்ந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
மட்டன் - முக்கால் கிலோ
முருங்கைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
முழு மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
முருங்கைக்காயை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய்த் துருவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
காய்ந்த மிளகாய், முழுமல்லி (தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக விட்டு இறக்கவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
மட்டனுடன் மசாலா கலவை நன்கு சேர்ந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
முருங்கைக்காய் மட்டன் மசாலா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மழை காலத்தில் அடிக்கடி சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கார்ன், காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - ஒரு கப்,
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்,
தக்காளி - 1
வெங்காயம் - 1
மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்,
சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை:
காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோள மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெய் ஊற்றி உருகியதும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் வேகவைத்த காலிஃப்ளவர், ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கரைத்த சோள மாவை விட்டு கொதிக்க விடவும்.
பிறகு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
சூப் திக்கான பதம் வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
சூப்பரான கார்ன் காலிஃப்ளவர் சூப் ரெடி.
காலிஃப்ளவர் - ஒரு கப்,
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்,
தக்காளி - 1
வெங்காயம் - 1
மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்,
சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோள மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெய் ஊற்றி உருகியதும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் வேகவைத்த காலிஃப்ளவர், ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கரைத்த சோள மாவை விட்டு கொதிக்க விடவும்.
பிறகு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
சூப் திக்கான பதம் வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
சூப்பரான கார்ன் காலிஃப்ளவர் சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரை வைத்து சமோசா செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கப்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 2
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பேஸ்ட் செய்ய கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன்பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இந்த கலவையை தனியாக வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவை போட்டு சிறிது தண்ணீரை ஊற்றி பேஸ்ட் ஆக செய்ய வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த மாவை வட்ட வடிவமாக திரட்ட வேண்டும். அதை கூம்பு ( cone)வடிவில் கத்தியால் செய்ய வேண்டும்.
அந்த கூம்பு வடிவில் உட்பகுதியில் சிறிதளவு பொன்னாங்கண்ணி கீரையை வைக்க வேண்டும்.
கூம்பின் அனைத்து மூலைகளிலும் கோதுமை பேஸ்ட்டை தடவ வேண்டும்
அதன்பிறகு கூம்பின் மேல் பகுதியை முட வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பொன்னாங்கண்ணி சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூடான சுவையான பொன்னாங்கண்ணி சமோசா தயார்.

- இந்துமதி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ப்ரோக்கோலி கோஸ் டயட் சூப்பை அடிக்கடி செய்து குடிக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோஸ் - 100 கிராம்
ப்ரோக்கோலி - கால் பாகம்
கேரட் - 1
தக்காளி - 1
காளான் - 10
செலரி, கொத்தமல்லி, வெங்காயத்தாள் - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை
கோஸ், ப்ரோக்கோலி, கேரட், காளான், தக்காளி, கொத்தமல்லி, செலரி, வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்,
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தாளை போட்டு வதக்கவும்.
அடுத்து காளான், கோஸை போட்டு வதக்கவும்.
5 நிமிடம் வதங்கிய பின்னர் தக்காளி, ப்ரோக்கோலியை போட்டு வதக்கவும்.
சிறிது நேரம் கழித்து செலரி, கேரட்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
காய்கறிகள் நன்கு வெந்து அதில் உள்ள சத்துக்கள் நீரில் இறங்கியதும் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
டயட் சூப் என்பதால் உப்பும், மிளகுத்தூளும் கம்மியாக சேர்க்கவும்.

சூப்பரான ப்ரோக்கோலி கோஸ் டயட் சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதத்துடன் சாப்பிட ஹைதராபாத் கத்தரிக்காய் கறி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
விதையில்லாத சிறிய கத்திரிக்காய் - 15
பழுத்த தக்காளி - 1,
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பட்டை - 1 துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒன்றரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
வேர்க்கடலை, எள் - தலா ஒரு தேக்கரண்டி
கொப்பரைத் தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கெட்டியான பால் - ஒன்றரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை
கத்தரிக்காயின் காம்பை எடுக்காமல் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, கசகசா, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, எள், கொப்பரைத்தேங்காய் துருவலை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு தக்காளி சாறு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும்.
கத்திரிக்காய் கலவையில் பாலைச் சேர்த்து வேக விடவும்.
உப்பு சேர்த்து, கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா கலவையை ஊற்றி நன்றாகக் கொதித்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கவும்.

சுவையான ஐதராபாத் கத்தரிக்காய் கறி தயார்!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேரட், தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 1,
பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1/2 அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
தண்ணீர் - 400 மி.லி.,
உப்பு, மிளகுத் தூள் - தேவைக்கு,
கிராம்பு - 2,
பூண்டு - 2 பல்,

செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத் தூள், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு தக்காளியை வேக விடவும்.
சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும்.
குறைவான சூட்டில் 300 மி.லி. வரும் வரை சூப்பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான கேரட் தக்காளி சூப் ரெடி.
குறிப்பு:
கேரட் - 1,
பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1/2 அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
தண்ணீர் - 400 மி.லி.,
உப்பு, மிளகுத் தூள் - தேவைக்கு,
கிராம்பு - 2,
பூண்டு - 2 பல்,
பட்டை - 1/2 இன்ச் அளவு.

செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத் தூள், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு தக்காளியை வேக விடவும்.
சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும்.
குறைவான சூட்டில் 300 மி.லி. வரும் வரை சூப்பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான கேரட் தக்காளி சூப் ரெடி.
குறிப்பு:
சூப்பை கொதிக்க வைத்தால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகி விடும். ஆகவே பாத்திரத்தை மூடியோ அல்லது குக்கரில் வைத்தோ சூப் செய்யவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். இன்று தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையான நத்தை கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நத்தை - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப.மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு,
தேங்காய் விழுது - கால் கப்

செய்முறை :
நம்மூரில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.
வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.
கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தளை தூவி இறக்கவும்.
நத்தை - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப.மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு,
தேங்காய் விழுது - கால் கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
நம்மூரில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.
வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.
கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தளை தூவி இறக்கவும்.
இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வயிற்றில் உள்ள புண்ணை குணமாக்கும் தேங்காய்ப் பால். இன்று பாசிப்பருப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - கால் கிலோ
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெ.வெங்காயம் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
கொத்தமல்லி, பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பூண்டை லேசாக இடித்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை நன்றாக அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் மிளகாய், வெங்காயம், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரிசி, உப்பு, பாசிப்பருப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறி விடவும்.
அதனுடன் புதினா, கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
பச்சரிசி - கால் கிலோ
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெ.வெங்காயம் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை :
கொத்தமல்லி, பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பூண்டை லேசாக இடித்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை நன்றாக அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் மிளகாய், வெங்காயம், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரிசி, உப்பு, பாசிப்பருப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறி விடவும்.
அதனுடன் புதினா, கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
சத்தான பாசிப்பருப்பு தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காய்கறிகள், மட்டன் சேர்த்து செய்யும் இந்த மட்டன் தால்சா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - கால் கிலோ,
துவரம் பருப்பு - கால் கிலோ,
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்,
மல்லி தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சம் பழ அளவு,
பூண்டு - 20 பல்,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய் - அரை மூடி,
வாழைக்காய், கெட்டியான மாங்காய், கத்திரிக்காய், தக்காளி - தலா ஒன்று,
பெரிய முருங்கைக்காய் - 2,
சின்ன வெங்காயம் - 4,
பட்டை - 2
கிராம்பு - 3,
பச்சை மிளகாய் - 4,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
நெய் - 50 கிராம்,

செய்முறை:
மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.
கழுவிய மட்டனை குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
துவரம் பருப்பைக் கழுவி, 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக விட்டு எடுத்து வைக்கவும்.
(வாழைக்காயையும், மாங்காவையும் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள், தேவையான உப்பு போட்டு வேக விடவும்.
இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் உரித்து, மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
தேங்காயைத் துருவி, தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி... காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை கொத்தமல்லி, தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வெந்த துவரம் பருப்பு, வேக வைத்த மட்டன், காய்கறியை ஒவ்வொன்றாக எடுத்து இதில் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கி விடவும்.
இத்துடன், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும், புளிக்கரைசலை ஊற்றவும்.
மீண்டும் கொதி வந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, தேங்காய் விழுதை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கலக்கி விட்டு, எல்லாம் சேர்த்து கொதித்ததும் அடிபிடிக்காமல் கிளறி, இறக்கவும்.

சூப்பரான மட்டன் தால்சா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை - பீட்ரூட் தோசை செய்து கொடுக்கலாம். இன்று இந்த தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உப்பு - தேவைக்கேற்ப,
ஆட்டிய உளுத்தம் பருப்பு மாவு - கால் கப்,
துருவிய பீட்ரூட் - கால் கப்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3,
எண்ணெய் - தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் ஆட்டிய உளுத்தம் பருப்பு மாவு, உப்பு, கோதுமை மாவு சேர்த்து கலந்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கிய பீட்ரூட்டை கலவையை மாவில் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சுவையான சத்ததான கோதுமை - பீட்ரூட் தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை, இட்லி, சாதம், பழைய சாதத்திற்கு தொட்டுகொள்ள இந்த விரால் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
விரால் மீன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
புளி - சிறிதளவு
தேங்காய்ப் பால் - கால் கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பூண்டு - 10 பல்
வறுத்துப் பொடித்த வெந்தயம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

செய்முறை :
விரால் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லியை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். புளி நன்றாக ஊறியதும் அதனை தனியாக கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் தக்காளி மற்றும் சிறியத் துண்டுகளாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்த பிறகு விரால் மீன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பின்னர் தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம்.
இப்போது சுவையான கிராமத்து விரால் மீன் குழம்பு தயார்.

குறிப்பு: பொதுவாக மீன் குழம்பு 2-வது நாள்தான் சுவையாக இருக்கும். மீன் நன்றாக குழம்பில் ஊறி 2-வது நாள் சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். கிராமத்துவாசிகள் பொதுவாக முதல்நாள் மாலையே மீன் குழம்பை வைத்துவிட்டு மறுநாள் காலைதான் சாப்பிடுவார்கள்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆயுத பூஜையில் மீந்து போன பொரியை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
அரிசி பொரி - 2 பெரிய கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
எலுமிச்சம் பழம் - 1
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - தேவைக்கு
கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பொட்டுக்கடலையைப் பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியவுடன், அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.
பின் அதில் ஊறவைத்தப்பொரி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி அதன் மேல் கேரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
அரிசி பொரி - 2 பெரிய கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
எலுமிச்சம் பழம் - 1
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - தேவைக்கு
கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லித் தழை - சிறிது

செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பொட்டுக்கடலையைப் பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியவுடன், அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.
பின் அதில் ஊறவைத்தப்பொரி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி அதன் மேல் கேரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
சுவையான அரிசி பொரி உப்புமா ரெடி.