search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விரால் மீன் குழம்பு
    X
    விரால் மீன் குழம்பு

    கிராமத்து ஸ்டைல் விரால் மீன் குழம்பு

    தோசை, இட்லி, சாதம், பழைய சாதத்திற்கு தொட்டுகொள்ள இந்த விரால் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    விரால் மீன் - 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    புளி - சிறிதளவு
    தேங்காய்ப் பால் - கால் கப்
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    பூண்டு - 10 பல்
    வறுத்துப் பொடித்த வெந்தயம் - 1 டீஸ்பூன்
    சீரகம் -  1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    விரால் மீன் குழம்பு

    செய்முறை :

    விரால் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லியை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். புளி நன்றாக ஊறியதும் அதனை தனியாக கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் தக்காளி மற்றும் சிறியத் துண்டுகளாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

    குழம்பு நன்றாக கொதித்த பிறகு விரால் மீன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

    அதன் பின்னர் தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம்.

    இப்போது சுவையான கிராமத்து விரால் மீன் குழம்பு தயார்.

    குறிப்பு: பொதுவாக மீன் குழம்பு 2-வது நாள்தான் சுவையாக இருக்கும். மீன் நன்றாக குழம்பில் ஊறி 2-வது நாள் சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். கிராமத்துவாசிகள் பொதுவாக முதல்நாள் மாலையே மீன் குழம்பை வைத்துவிட்டு மறுநாள் காலைதான் சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×