search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நத்தை கிரேவி
    X
    நத்தை கிரேவி

    நத்தை கிரேவி செய்வது எப்படி?

    தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். இன்று தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையான நத்தை கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நத்தை - அரை கிலோ
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    ப.மிளகாய் - 3
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலா - அரை  டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1  டீஸ்பூன்,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு,
    தேங்காய் விழுது - கால் கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    நத்தை கிரேவி

    செய்முறை :

    நம்மூரில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.

    கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தளை தூவி இறக்கவும்.

    இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×