search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொன்னாங்கண்ணி கீரை சமோசா
    X
    பொன்னாங்கண்ணி கீரை சமோசா

    சத்தான ஸ்நாக்ஸ் பொன்னாங்கண்ணி கீரை சமோசா

    கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரை வைத்து சமோசா செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்
    நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கப்
    நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 2
    மிளகு தூள் - ஒரு சிட்டிகை
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    பேஸ்ட் செய்ய கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    பொன்னாங்கண்ணி கீரை

    செய்முறை :


    அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.

    அதன்பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இந்த கலவையை தனியாக வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவை போட்டு சிறிது தண்ணீரை ஊற்றி பேஸ்ட் ஆக செய்ய வேண்டும்.

    ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு அந்த மாவை வட்ட வடிவமாக திரட்ட வேண்டும். அதை கூம்பு ( cone)வடிவில் கத்தியால் செய்ய வேண்டும்.

    அந்த கூம்பு வடிவில் உட்பகுதியில் சிறிதளவு பொன்னாங்கண்ணி கீரையை வைக்க வேண்டும்.

    கூம்பின் அனைத்து மூலைகளிலும் கோதுமை பேஸ்ட்டை தடவ வேண்டும்

    அதன்பிறகு கூம்பின் மேல் பகுதியை முட வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பொன்னாங்கண்ணி சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூடான சுவையான பொன்னாங்கண்ணி சமோசா தயார்.

    - இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×