என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கார்ன் காலிஃப்ளவர் சூப்
    X
    கார்ன் காலிஃப்ளவர் சூப்

    கார்ன் காலிஃப்ளவர் சூப்

    மழை காலத்தில் அடிக்கடி சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கார்ன், காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காலிஃப்ளவர் - ஒரு கப்,
    ஸ்வீட் கார்ன் - ஒரு கப்,
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்,
    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
    வெண்ணெய் - கால் டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    கார்ன் காலிஃப்ளவர் சூப்

    செய்முறை:


    காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோள மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெய் ஊற்றி உருகியதும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வேகவைத்த காலிஃப்ளவர், ஸ்வீட் கார்னை சேர்த்து  வதக்கவும்.

    அடுத்து அதில் கரைத்த சோள மாவை விட்டு கொதிக்க விடவும்.

    பிறகு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

    சூப் திக்கான பதம் வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.

    சூப்பரான கார்ன் காலிஃப்ளவர் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×