என் மலர்

  நீங்கள் தேடியது "Veg Recieps"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு வகையான பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  பாசுமதி அரிசி - 2 கப்,
  தக்காளி - 4
  பச்சை மிளகாய் -2,  
  மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
  பெரிய வெங்காயம் - ஒன்று,
  பிரெட் ஸ்லைஸ் - 2,
  முந்திரித் துண்டுகள் - 6,
  சீரகம் - ஒரு டீஸ்பூன்,
  கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி,
  நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
  உப்பு - தேவைக்கேற்ப.  செய்முறை :

  2 தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

  வாணலியில் நெய் விட்டு முந்திரியை சேர்த்து வறுக்கவும்.

  பிரெட்டை துண்டுகளாக வெட்டு வறுத்து கொள்ளவும்.

  வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  வெந்நீரில் 2 தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

  குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

  வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும்.

  தக்காளி சற்று வதங்கியதும் இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

  குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் வறுத்த முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும்.

  கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

  இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நவதானியங்களை சேர்த்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி  - தலா 4 டேபிள்ஸ்பூன் அல்லது சமஅளவு,

  கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
  காய்ந்த மிளகாய் - 2
  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
  பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை

  அரைக்க:

  தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
  காய்ந்த மிளகாய் - 4,
  இஞ்சி - சிறிய துண்டு.
  சோம்பு - கால் டீஸ்பூன்,
  பட்டை - சிறிய துண்டு.  செய்முறை:

  இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

  தானியங்கள் அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து 2 மணிநேரம் ஊறவைத்து ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

  அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த தானியம், அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.

  பச்சை வாசனை போனதும், இறக்கவும்.

  சத்தான சுவையான நவதானிய சுண்டல் ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  ×