search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    30 நிமிடத்தில் செய்யலாம் முட்டை மஞ்சூரியன் கிரேவி
    X

    30 நிமிடத்தில் செய்யலாம் முட்டை மஞ்சூரியன் கிரேவி

    • முட்டை கிரேவி மஞ்சூரியன் செய்வதற்கும் மிகவும் எளிமையானது.
    • இது சப்பாத்தி, நாண், பிரைடு ரைஸ்க்கு அசத்தலான சைடிஷ் .

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3

    மைதா மாவு - 3 டீஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - ½ டீஸ்பூன்

    மிளகு சீரகப்பொடி - 1 டீஸ்பூன்

    ஆனியன், குடைமிளகாய் - தலா 1

    சிவப்பு மிளகாய் சாஸ் - 1 டீஸ்பூன்

    பச்சைமிளகாய் சாஸ் - 1 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    ஸ்பிரிங் ஆனியன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.

    ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் மிளகு சீரகப்பொடி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்..

    ஒருகிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றிக் கொள்ளவும். இதனை இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் கிண்ணத்தை வைத்து 10 முதல் 12 நிமிடம் வரை வேக வைக்கவும்.

    முட்டை வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.

    ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் துண்டுகளாக நறுக்கிய முட்டைகளை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து அரை பாகம் வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சிறிதளவு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சிவப்பு மிளகாய் சாஸ், பச்சைமிளகாய் சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ், கரைத்து வைத்த சோள மாவு தண்ணீரை ஊற்றவேண்டும்.

    அத்துடன் உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறவும்.

    கிரேவி நன்கு திக்கான பதம் வதக்கியதும், மேலே ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கினால் சூப்பரான முட்டை மஞ்சூரியன் கிரேவி ரெடி.

    Next Story
    ×