search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெண்டைக்காய் 65
    X
    வெண்டைக்காய் 65

    சூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் 65

    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் 65 அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 250 கிராம்
    இஞ்சி - 1/2 துண்டு
    பூண்டு - 7 பற்கள்
    பச்சை மிளகாய் - 5
    கடலைமாவு - 1/4 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    வெண்டைக்காய் 65

    செய்முறை

    மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பௌலில் நறுக்கிய வெண்டைக்காயில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்த வைத்துள்ள வெண்டைக்காயை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.

    பின் சிறிதளவு கடலை, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.

    பின் பொரித்தவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதன்மேல் மாங்காய் தூள் மற்றும் மசாலா தூவி கொள்ளவும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
     
    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×