search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோதுமை உப்புமா பால்ஸ்
    X
    கோதுமை உப்புமா பால்ஸ்

    சத்தான டிபன் கோதுமை உப்புமா பால்ஸ்

    கோதுமை உப்புமா மீந்து விட்டால் அதை வைத்து சுவையான பால்ஸ் செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை உப்புமா - ஒரு கப்

    தாளிக்க:


    நல்லெண்ணெய் அல்லது நெய் - ஒரு டீஸ்பூன்
    கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை - தேவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சாம்பார் பொடி - விருப்பப்பட்டால்
    மிளகாய்த்தூள் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை - விருப்பப்பட்டால்
    கொத்தமல்லி இலை - தேவைக்கு
    முந்திரி,வேர்க்கடலை - விருப்பப்பட்டால்

    கோதுமை உப்புமா பால்ஸ்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உப்மாவை உதிர்த்து சிறிய உருண்டையாக உருட்டி ஸ்டீமரில் ஐந்து நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து லேசாக வதக்கவும்.

    பின்னர் மஞ்சள் தூள், சாம்பார் பொடி (விருப்பப்பட்டால்) மிளகாய் தூள், உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வதக்கவும்.

    பின்னர் வேகவைத்த வைத்த உப்புமா உருண்டையை ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு தள்ளித் தள்ளிப் போடவும். உடனே கரண்டி விடாமல் சட்டியை மட்டும் லேசாக குலுக்கவும். பின்பு மூடியை போட்டு மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை வேகவிடவும்.

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு கொஞ்சம் பிழிந்து விடலாம்.

    அட்டகாசமான உப்புமா பால்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×