search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாலக்கீரை கூட்டு
    X
    பாலக்கீரை கூட்டு

    இரும்புச்சத்து நிறைந்த பாலக்கீரை கூட்டு

    பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை அடங்கியுள்ளன. இன்று பாலக்கீரையில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 1 கட்டு
    துவரம் பருப்பு - 1/4 கப்
    வெங்காயம் - 1
    மிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 2 கப்
    தேங்காய் - சிறிது

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

    பாலக்கீரை கூட்டு

    செய்முறை:

    துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பாலக்கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

    கடைசியாக அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பாலக்கீரை கூட்டு ரெடி.....

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×