search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடைமிளகாய் பஜ்ஜி
    X
    குடைமிளகாய் பஜ்ஜி

    அருமையான ஸ்நாக்ஸ் குடைமிளகாய் பஜ்ஜி

    பஜ்ஜி தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ். மாலை நேரத்தில் டீ யுடன் சேர்த்து சாப்பிடலாம். இன்று குடைமிளகாயில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    கடலைமாவு - 1 கப்
    அரிசி மாவு - 3 மேஜைக்கரண்டி
    குடைமிளகாய் - 2
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    சோடா உப்பு - 1 சிட்டிகை
    தண்ணிர் - 3/4 கப்
    கேசரி கலர் - 1 சிட்டிகை
    எண்ணெய் - பொரித்து எடுக்க

    குடைமிளகாய் பஜ்ஜி

    செய்முறை

    குடைமிளகாயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், பெருங்காயம், மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு, சோடா உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் சிறிது கட்டியாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டி வைத்த குடைமிளகாயை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூடான சுவையான குடைமிளகாய் பஜ்ஜியை சூடாக டீ, அல்லது காபி உடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×