search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பசலைக் கீரை கட்லெட்
    X
    பசலைக் கீரை கட்லெட்

    குழந்தைகளுக்கு சத்தான பசலைக் கீரை கட்லெட்

    பசலைக்கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்க்கும்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக் கிழங்கு - 4,
    பசலைக் கீரை - 1 கட்டு,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 2 பல்,
    சீஸ் (துருவியது) - அரை கப்,
    பிரெட் ஸ்லைஸ் - 3,
    பிரெட் தூள் - தேவையான அளவு,
    எலுமிச்சம்பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
    கார்ன்ஃப்ளார் - கால் கப்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    பசலைக் கீரை கட்லெட்

    செய்முறை:

    கார்ன்ஃப்ளார் மாவை நீர்க்கக் கரைத்து கொள்ளுங்கள்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, கட்டிகள் இல்லாமல் மசித்துக் கொள்ளுங்கள்.

    கீரையை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    இந்த விழுதை, மசித்த கிழங்குடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அத்துடன் உதிர்த்த பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, துருவிய சீஸ் சேர்த்து, நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

    உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து, வேண்டிய வடிவத்தில் கட்லெட் செய்து, கார்ன்ஃபிளார் மாவில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான பசலைக்கீரை கட்லெட் ரெடி.

    குறிப்பு: பசலைக் கீரைக்கு பதிலாக, புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் பாதி, பாதி எடுத்து, அரைத்தும் இந்த கட்லெட்டை செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×