search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சோளம் சுண்டல்
    X
    சோளம் சுண்டல்

    நார்ச்சத்து நிறைந்த சோளம் சுண்டல்

    சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இன்று சோளத்தில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோளம் - 2 கப் (உதிர்த்தது)
    வெங்காயம் - 1
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 3
    எலுமிச்சம்பழம் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    கறிவேப்பிலை - 2 கீற்று
    உப்பு - தேவைக்கேற்ப

    சோளம் சுண்டல்

    செய்முறை :

    சோளத்தை உதிர்த்து உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த சோளத்தை போட்டு கிண்டி விடவும்.

    இறக்கும் முன்பு தேங்காய்த்துருவலையும், எலுமிச்சைச்சாறும் சேர்த்து இறக்கவும்.

    அருமையான சோளம் சுண்டல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×