என் மலர்tooltip icon

    சமையல்

    திடீரென விருந்தாளிகள் வந்தாலோ அல்லது சாம்பார், சட்னி போதவில்லை என்றால் சட்டென பருப்பில்லாமல் திடீர் சாம்பாரை வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஐந்து
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தக்காளி - நான்கு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைகேற்ப
    தண்ணீர் - தேவையான அளவு
    கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்

    பருப்பில்லாத திடீர் சாம்பார்

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.

    பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் .

    நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.

    பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முளைக்கட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முளைக்கட்டிய தானியங்கள், காய்கறிகள் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முளைக்கட்டிய கொள்ளு, பச்சை பயிறு, கொண்டைக்கடலை,பட்டாணி -    2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி
    லெட்யூஸ் -  சிறியது ஒன்று
    கொத்தமல்லி தழை -     சிறிதளவு
    வெள்ளரிக்காய் - 1
    மாங்காய் - 1
    கேரட் - 2
    எலுமிச்சம்பழம் - 1
    உப்பு -    தேவைக்கேற்ப

    முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட்

    செய்முறை

    முளைக்கட்டிய தானியங்களை குக்கரில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, மாங்காய், வெள்ளரிக்காய் லெட்யூஸ்,கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்

    ஒரு பாத்திரத்த்ல வேகவைத்த தானியங்களுடன் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து கிளறவும்.

    அத்துடன் உப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்

    சூப்பரான முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட்  ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திபெத்தியர்களின் பாரம்பரிய உணவு மோமோஸ். இந்த பாரம்பரிய ரெசிபியை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாவு பிசைய

    மைதா - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    பேக்கிங் பவுடர் - 1  டீஸ்பூன்

    பூரணம் செய்ய :

    சிக்கன் - 300 கிராம்
    வெங்காயம் - 1
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - சிறிய துண்டு
    சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 1
    மிளகு உடைத்தது - 1/4 டீஸ்பூன்

    சிக்கன் மோமோஸ்

    செய்முறை :

    வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    சிக்கனை நன்றாக கழுவி  வேக வைத்து கொள்ளவும். உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சப்பாதி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஈரத்துணியால் மூடி ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்ததாக உதிர்த்து வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், உப்பு சேர்க்கவும்.

    மசாலாக்கள் நன்கு கலந்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அனைத்துவிடவும்.

    ஊற வைத்த மாவை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி சப்பாத்தி உருட்டுவது போல் சிறு சிறு வட்டங்களாக உருட்டி தடுவில் தட்டையாக செய்துகொள்ளவும்.  

    செய்து வைத்துள்ள சிக்கன் பூரணத்தை ஒரு ஸ்பூன் நடுவில் வைத்து பின் கொழுக்கட்டையை மூடுவதுபோல் மூடவும்.

    இப்படியாக ஒவ்வொரு உருண்டைகளாக செய்யவும்.

    அடுத்ததாக இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    அதற்குள் இட்லி தட்டில் மோமோஸை அடுக்கி வைக்க வேண்டும். ஒன்றன் மேல் ஒன்று வைக்கக் கூடாது.

    தண்ணீர் கொதித்த பின்னர், அடுக்கி வைத்துள்ள மோமோஸ் தட்டை குக்கரில் வைக்கவும்.

    15 - 20 நிமிடங்களுக்கு வேக வைத்து பரிமாறவும்.

    சூப்பரான சுவையான சிக்கன் மோமோஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி சேர்த்து செய்யும் இந்த இட்லி சத்து நிறைந்தது. இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு - 2 கப்
    கம்பு - 2 கப்
    குதிரைவாலி - 1 கப்
    உளுந்து - 1 கப்
    உப்பு - சுவைக்கேற்ப

    3 வகை சிறுதானிய இட்லி

    செய்முறை:

    கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி அரிசி மூன்றையும் நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    உளுந்தை தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    இரண்டையும் தனித்தனியாக அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

    அரைத்த 2 மணிநேரத்தில் இட்லி ஊற்றலாம். சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பூரி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் ஆலூ கோப்தா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான்  - ஒன்றரை கப்,
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    பச்சை மிளகாய் - 2 ,
    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு,
    வறுத்த கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
    வறுத்த கசகசா - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    அரைக்க:

    பெரிய வெங்காயம் - 2
    பூண்டு - 6 பல்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    ஏலக்காய் - ஒன்று,
    உப்பு - சிறிதளவு,
    தக்காளி - ஒன்று

    காளான் ஆலூ கோப்தா

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காளான்களைப் போட்டு வதக்கி இறக்கவும்.

    இதனுடன் கடலை மாவு, கசகசா, உப்பு, மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசையவும்.

    பிறகு, இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் சூடானதும் செய்து வைத்த உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

    இதுவே காளான் ஆலூ கோப்தா (அதிக எண்ணெய் வேண்டாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில்கூட இந்த உருண்டைகளை வேகவிட்டு எடுக்கலாம்).

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.

    பிறகு, உப்பு, கரம் மசாலாத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    கிரேவி கெட்டியாகும்போது பொரித்து வைத்த கோப்தாக்களைப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    மேலே கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

    சூப்பரான காளான் ஆலூ கோப்தா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சத்தான சிறுதானிய வகையைச் சேர்ந்த கொள்ளுடன் சில காய்கறிகள் சேர்த்து சத்தான சுவையான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கப்
    உருளைகிழங்கு - 1
    கேரட் - 1
    ஸ்வீட் கார்ன் - 1
    முட்டைகோஸ் - சிறிதளவு
    இஞ்சி விழுது - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - 2 டீபூன்
    உப்பு - தேவையான அளவு
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

    கொள்ளு காய்கறி கட்லெட்

    செய்முறை:

    கொள்ளை நன்கு ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.

    கொள்ளு, உருளைக்கிழங்கு, ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை வேகவைத்து, கையால் மசித்துக்கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லி, கொத்தமல்லி, கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு கலந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இஞ்சி விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் பிடித்து வைக்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு கட்லெட்டாக சுட்டு எடுக்கவும்.

    சத்தான சுவையான கொள்ளு காய்கறி கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அலாதிப் பிரியம். அந்த வகையில் நாவில் எச்சில் ஊறவைக்கும் அட்டகாசமான சுவையில் ‘ஹனி சிக்கன்’ செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் விங்ஸ் - 500 கிராம்
    சோள மாவு - அரை கப்
    மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    தேன் - 5 தேக்கரண்டி
    மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி
    பார்பிக்யூ சாஸ் - அரை கப்
    உப்பு - தேவையான அளவு
    வெள்ளை எள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    ஹனி சிக்கன்

    செய்முறை:

    வெள்ளை எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை ( விங்ஸ்) ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதில் அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு சேர்த்து நன்கு கிளறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்க வேண்டும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த சிக்கனை எடுத்து சோளமாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் பொரிக்க வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு எண்ணெயை ஊற்றி அதில் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேனை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

    2 நிமிடம் கலக்கிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொரித்த சிக்கனை எடுத்து அடுப்பில் இருக்கும் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேன் கலவையில் கொட்டி கிளற வேண்டும்.

    அடுப்பை அனைத்து தட்டில் பரிமாறி அதன் மேல் வறுத்த எள்ளை தூவினால் சுவையான ‘ஹனி சிக்கன்’ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நூல்கோலில் நீர்ச்சத்துடன் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த வகையில் இந்த நூல்கோல் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    வெயில் காலத்தில் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்

    நூல்கோல் - 2
    கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
    தக்காளி - 1
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    நூல்கோல்

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நூல்கோலைதோல் சீவியப் பொடியாக அரிந்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

    நூல்கோல் அரை வேக்காடு வெந்ததும், வெங்காயம், தக்காளியை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கிவிடுங்கள்.

    சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் கேரட் துருவலைச் சேர்த்து வதக்குங்கள்.

    பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து மிளகுத் தூளைத்

    சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, கொதிக்கும் சூப்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறுங்கள்.

    சத்தான நூல்கோல் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காய்கறிகள் சேர்ந்து சூப்பரான போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    (மேல் மாவுக்கு)

    கடலை மாவு - 1 கப்
    ஆப்ப சோடா - சிட்டிகை
    உப்பு - ருசிக்கேற்ப
    கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - தேவையான அளவு.

    (பூரணத்துக்கு)

    உருளைக் கிழங்கு - 1
    கேரட் - 1
    பீன்ஸ் - 4
    பட்டாணி - ஒரு கைப்பிடி
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிது
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

     மிக்ஸ்டு வெஜிடபிள் போண்டா

    செய்முறை:

    கொத்தமல்லி, காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெள் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    அத்துடன் காய்கறிகளையும், மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள்.

    காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

    ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள்.

    பிறகு கடலை மாவுடன் சிறிது உப்பு ஆப்ப சோடா (விருப்பப்பட்டால்) கலர் பவுடர் தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

    சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஜூஸ் நோய் தொற்றுகளில் இருந்தும் சளி, இருமல் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும். மேலும் உடலுக்கு சக்தியை தரும். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி பழம் - 4
    கேரட் - 1
    தண்டு கீரை - 1
    சிவப்பு குடை மிளகாய் - 1
    மிளகு - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    பூண்டு - 5 பல்
    தண்ணீர் - அரை கப்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    வெஜிடபிள் ஜூஸ்

    செய்முறை

    தக்காளி, கேரட், தண்டு கீரை, சிவப்பு குடை மிளகாயை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டை லேசாக இடித்து கொள்ளவும்.

    வாணலியில்  தண்ணீர் ஊற்றி தக்காளி, கேரட், கீரை தண்டு, சிவப்பு குடைமிளகாய், உப்பு, மிளகு, பூண்டை போட்டு சிறு தீயில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் இறக்கி 10 நிமிடங்கள் ஆற விடவும்.

    பின்னர் அந்த காய்கறிகளை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    இறுதியில் கொத்தமல்லி தழை, தண்ணீர் சேர்த்து சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

    இந்த ஜூஸை பிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்து விட்டு பரிமாறவும்.

    நோய் தொற்றுகளில் இருந்தும் சளி, இருமல் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் அடிக்கடி மரவள்ளிக்கிழங்கு பாதாம் கீர் பருகலாம். இந்த கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
    முந்திரி - 20
    பாதாம் - 25
    பிஸ்தா - 8
    ஏலக்காய் - 3
    ஐஸ் கட்டிகள் - 5
    சர்க்கரை - தேவையான அளவு

    மரவள்ளிக்கிழங்கு

    செய்முறை:

    பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

    பாதாம், முந்திரியை ஊறவைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் ஏலக்காய், ஊறவைத்த முந்திரி, பாதாம், துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்த்து நைசாக அரைத்து  கொள்ளவும்.

    அடுத்து அதில் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒரு திருப்புத் திருப்பவும்.

    பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    கீர் பரிமாறும் டம்ளரில் ஊற்றி மேலே பிஸ்தா தூவி பரிமாறவும்.

    சூப்பரான மரவள்ளிக்கிழங்கு பாதாம் கீர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மரவள்ளிக்கிழங்கு - ஒரு கப்
    ரவை - ஒரு கப்
    அரிசி - மாவு ஒரு
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    உருளைக்கிழங்கு - 1
    பச்சை மிளகாய் - 2
    சாட் மசாலா - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி பேஸ்ட் - 2டீஸ்பூன்

    மரவள்ளிக்கிழங்கு

    செய்முறை

    மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொண்டு வட்ட வடிவமாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை வட்டவடிவமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் ரவை, உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அந்த மாவில் துருவிய மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் தவாவை வைத்து இந்த மாவை இரண்டு தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.

    ஒரு தட்டில் தோசை வைத்து அதன் மேல் முதலில் வட்டவடிவமாக வெட்டிய தக்காளி, அடுத்து வெங்காயம், அடுத்து உருளைக்கிழங்கு அடுத்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சாட் மசாலா, சிறிதளவு உப்பு, என்று ஒன்றன் பின் ஒன்றாக லேயராக அடுக்கி அதன் முடிவில் மற்றொரு தோசையில்  கொத்தமல்லி பேஸ்டை தடவி மூடி துண்டுகளாக வெட்டி சூடாக பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை தயார்.

    B. இந்துமதி 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×