search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெஜிடபிள் ஜூஸ்
    X
    வெஜிடபிள் ஜூஸ்

    வெயிலுக்கு உடலுக்கு சக்தி தரும் வெஜிடபிள் ஜூஸ்

    இந்த ஜூஸ் நோய் தொற்றுகளில் இருந்தும் சளி, இருமல் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும். மேலும் உடலுக்கு சக்தியை தரும். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி பழம் - 4
    கேரட் - 1
    தண்டு கீரை - 1
    சிவப்பு குடை மிளகாய் - 1
    மிளகு - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    பூண்டு - 5 பல்
    தண்ணீர் - அரை கப்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    வெஜிடபிள் ஜூஸ்

    செய்முறை

    தக்காளி, கேரட், தண்டு கீரை, சிவப்பு குடை மிளகாயை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டை லேசாக இடித்து கொள்ளவும்.

    வாணலியில்  தண்ணீர் ஊற்றி தக்காளி, கேரட், கீரை தண்டு, சிவப்பு குடைமிளகாய், உப்பு, மிளகு, பூண்டை போட்டு சிறு தீயில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் இறக்கி 10 நிமிடங்கள் ஆற விடவும்.

    பின்னர் அந்த காய்கறிகளை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    இறுதியில் கொத்தமல்லி தழை, தண்ணீர் சேர்த்து சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

    இந்த ஜூஸை பிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்து விட்டு பரிமாறவும்.

    நோய் தொற்றுகளில் இருந்தும் சளி, இருமல் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×