என் மலர்
சமையல்
தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற உணவுகளில் பஜ்ஜியும் ஒன்று. மாலை நேரங்களிலோ அல்லது மழை வரும் காலங்களிலோ இந்த மிளகாய் பஜ்ஜி செய்து சாப்பிட்டால், ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை மாவு - 1 கப்
பஜ்ஜி மிளகாய் - 10
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கொண்டை கடலை மாவு, அரிசி மாவு, உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மாவை கலக்கிக் கொள்ளுங்கள்.
பஜ்ஜி மிளகாயை கீறி அதற்குள் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஸ்டஃப் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய பஜ்ஜி நல்ல சுவையுடனும், காரசாரமானதாகவும் இருக்கும்.
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஸ்டஃப் செய்துள்ள மிளகாயை, கரைத்து வைத்துள்ள மாவில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

உப்பு, மஞ்சள், பெருங்காயம் - தேவையான அளவு

சுவையான பஜ்ஜி மிளகாய் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிவப்பு அவல், நட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாலட் மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த சிவப்பு அவல் - ஒரு கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று,
பச்சை மிளகாய் - ஒன்று
வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி -தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் நெய்விட்டு வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
பிறகு அவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

மேலே கொத்தமல்லித்தழை, வறுத்த நட்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விதவிதமாக பணியாரம் செய்தாலும் இனிப்பு பணியாரத்திற்கு என்றும் தனி வரவேற்பு உண்டு. சிறிது வித்தியாசமாக ரவா, மைதா, வாழைப்பழம் கலந்து பணியாரம் எப்படி செய்வதென்று பார்ப்போம்!
தேவையான பொருட்கள்
ரவை - 100 கிராம்
மைதா - 100 கிராம்
சர்க்கரை அல்லது வெல்லம் - 100 கிராம்
திக்கான தேங்காய் பால் - 1 கப்
பெரிய நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
நெய் - 50 மில்லி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை
வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவை, மைதா, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து அதனுடன் மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான வைத்து சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்யவும்.
ரவை - 100 கிராம்
மைதா - 100 கிராம்
சர்க்கரை அல்லது வெல்லம் - 100 கிராம்
திக்கான தேங்காய் பால் - 1 கப்
பெரிய நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
நெய் - 50 மில்லி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை
வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவை, மைதா, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து அதனுடன் மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான வைத்து சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்யவும்.
சுவையான ரவை வாழைப்பழ பணியாரம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த சுண்டல் வெயிலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும். இன்று இந்த சுண்டல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
பச்சை பயறு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய் துருவில் - விரும்பிய அளவு
தாளிக்க
எண்ணெய் - அரை டீஸ்பூன்

செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளுவையும், பச்சைப் பயறையும் இரவே ஊறவையுங்கள். இல்லையென்றால் காலையில் ஊறவைத்தால் மாலையில் செய்யலாம். இரண்டையும் குக்கரில் வேகவைத்துத் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.
சுண்டலைச் சேர்த்து, உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.
அடுத்து அதில் எலுமிச்சைச் சாறு பிழிந்துகொள்ளலாம்.
கொள்ளு - 1 கப்
பச்சை பயறு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய் துருவில் - விரும்பிய அளவு
தாளிக்க
எண்ணெய் - அரை டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - 3

செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளுவையும், பச்சைப் பயறையும் இரவே ஊறவையுங்கள். இல்லையென்றால் காலையில் ஊறவைத்தால் மாலையில் செய்யலாம். இரண்டையும் குக்கரில் வேகவைத்துத் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.
சுண்டலைச் சேர்த்து, உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.
அடுத்து அதில் எலுமிச்சைச் சாறு பிழிந்துகொள்ளலாம்.
சத்தான சுவையான கொள்ளு பச்சைப் பயறு சுண்டல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அத்திப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காய்ந்த அத்திப்பழத்தை வைத்து சுவையான தித்திப்பான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காய்ந்த அத்திப்பழம் - பதினைந்து
நெய் - கால் கப்
பாதாம் + முந்திரி - ஊறவைத்து தோலுரித்து பொடித்தது - அரை கப்
சர்க்கரை - முக்கால் கப்
பால்பவுடர் - முக்கால் கப்
ஏலப்பொடி - கால் டீஸ்பூன்
அலங்கரிக்க
குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
மென்மையானவுடன் தண்ணீரை வடிகட்டவும்.
மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.
நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு பொடித்த பாதாமை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.
இதில் அரைத்த அத்திப்பழ விழுது, பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்.
5 நிமிடம் விடாமல் கிளறவும்.
இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.

வறுத்த முந்திரி கிஸ்மிஸ் - தலா 12.

சூப்பரான அத்திப்பழ அல்வா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டில் இருக்கும் சிறிவர், பெரியோர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கொள்ளு லட்டு செய்து கொடுக்கலாம். இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - ஒரு கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
நெய் - சிறிதளவு.
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை :
வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு கொள்ளுவை போட்டு இளம்பதமாக வறுத்து எடுத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்
பிறகு நீரை நன்கு வடித்து… பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.
சுவையான கொள்ளு லட்டு தயார்.
கொள்ளு - ஒரு கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
நெய் - சிறிதளவு.
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்

செய்முறை :
வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு கொள்ளுவை போட்டு இளம்பதமாக வறுத்து எடுத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்
பிறகு நீரை நன்கு வடித்து… பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.
சுவையான கொள்ளு லட்டு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அப்பளம் வத்த குழம்பு அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1/4 கப்
அப்பளம் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6

செய்முறை
புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளித்த பின்னர் ஒடித்து வைத்துள்ள அப்பளத்தை இதனுடன் சேர்த்து குறைந்தது 1 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
பின் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேருங்கள்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்குங்கள்.

அப்பளம் வத்த குழம்பு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு தோசை, கம்பு தோசை போன்ற தோசை வகைகளுக்கு இந்தச் சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல் அற்புதமாக இருக்கும். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 12,
கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.
பின்னர் அதில் உறித்த சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும்.
மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.
சத்தான சுவையான சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல் ரெடி.
குறிப்பு: சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் துவையலாக அரைக்கும்போது வெங்காயத்தில் உள்ள நெடி குறைந்து சுவையாக இருக்கும்.
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 12,
கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.
பின்னர் அதில் உறித்த சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும்.
மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.
சத்தான சுவையான சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல் ரெடி.
குறிப்பு: சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் துவையலாக அரைக்கும்போது வெங்காயத்தில் உள்ள நெடி குறைந்து சுவையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோளம், மோர், உப்பு, சர்க்கரை, ஜெலப்பினோ மற்றும் செடர் சீஸ் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து பேக் செய்யப்படும் இந்த ஸ்நாக்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோளம் - 1 கப் மஞ்சள்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மோர் 1 கப்
முட்டை - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிதளவு
செடர் சீஸ் - கால் கப் துருவியது
ஜெலப்பினோ - 1-2 மேஜைக்கரண்டி

செய்முறை
ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவனில் நடுப்பகுதியில் ரேக்கை வைத்து 218 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கார்ன் ஸ்டிக் பேனையும் 10 நிமிடம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
சோளம், சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பெரிய பௌலில் போட்டு நன்கு கலக்க வேண்டும்.
இன்னொரு பௌலில் மோர் மற்றும் முட்டையை நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.
நன்றாக கலந்ததும் அத்துடன் கலக்கி வைத்த சோள மாவை சேர்க்கவும்.
மேலும் ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோ, செடர் சீஸ், பட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது மைக்ரோவேவ் அவனில் இருந்து பேனை வெளியே எடுத்து இரண்டு மேஜைக்கரண்டி பட்டர் தடவி அதில் செய்து கலந்து வைத்ததை ஊற்றி 12 முதல் 15 நிமிடம் வரை வைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
மோல்டுகள் இருந்து வெளியே எடுப்பதற்கு முன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கார்ன் ஸ்டிக்கை வைத்து ஆறியபின் இறக்கவும்.
சோளம் - 1 கப் மஞ்சள்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மோர் 1 கப்
முட்டை - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிதளவு
செடர் சீஸ் - கால் கப் துருவியது
ஜெலப்பினோ - 1-2 மேஜைக்கரண்டி
உருகிய அன்சால்ட்டட் பட்டர் - 1/4 கப்

செய்முறை
ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவனில் நடுப்பகுதியில் ரேக்கை வைத்து 218 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கார்ன் ஸ்டிக் பேனையும் 10 நிமிடம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
சோளம், சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பெரிய பௌலில் போட்டு நன்கு கலக்க வேண்டும்.
இன்னொரு பௌலில் மோர் மற்றும் முட்டையை நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.
நன்றாக கலந்ததும் அத்துடன் கலக்கி வைத்த சோள மாவை சேர்க்கவும்.
மேலும் ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோ, செடர் சீஸ், பட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது மைக்ரோவேவ் அவனில் இருந்து பேனை வெளியே எடுத்து இரண்டு மேஜைக்கரண்டி பட்டர் தடவி அதில் செய்து கலந்து வைத்ததை ஊற்றி 12 முதல் 15 நிமிடம் வரை வைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
மோல்டுகள் இருந்து வெளியே எடுப்பதற்கு முன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கார்ன் ஸ்டிக்கை வைத்து ஆறியபின் இறக்கவும்.
சூடான ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர் ரெசிபி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெர்ரி ஜூஸ் பாக்டீரியா உள்ளிட்ட நோய் தொற்றுகளை விரட்டவும் உதவும். இன்று இந்த ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 2 கப்
தயிர் - 1 கப்
ஸ்டாபெர்ரி பழம் - 100 கிராம்

செய்முறை
ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை நன்றாக சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
மிக்சியில் பாலையும், தயிரையும் ஊற்றி ஓடவிட்டு அதில் ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை கொட்டி விழுதாக அரைத்து பருகலாம்.
இது பாக்டீரியா உள்ளிட்ட நோய் தொற்றுகளை விரட்டவும் உதவும்.
பால் - 2 கப்
தயிர் - 1 கப்
ஸ்டாபெர்ரி பழம் - 100 கிராம்
புளூபெர்ரி பழம் -100 கிராம்

செய்முறை
ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை நன்றாக சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
மிக்சியில் பாலையும், தயிரையும் ஊற்றி ஓடவிட்டு அதில் ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை கொட்டி விழுதாக அரைத்து பருகலாம்.
இது பாக்டீரியா உள்ளிட்ட நோய் தொற்றுகளை விரட்டவும் உதவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பூண்டு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - கால் கிலோ
பூண்டு - 30 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
எண்ணெய் - 60 மி.லி.கிராம்
மஞ்சள் தூள் - 3 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 10 கிராம்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு

செய்முறை
சிக்கன் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப,மிளகாய், பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும நறுக்கிய பூண்டினை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு இதில் நன்கு கழுவிய சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்து மசாலாவுடன் இணைந்து வந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
சிக்கன் - கால் கிலோ
பூண்டு - 30 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
எண்ணெய் - 60 மி.லி.கிராம்
மஞ்சள் தூள் - 3 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 10 கிராம்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு
கரம் மசாலா - 5 கிராம்.

செய்முறை
சிக்கன் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப,மிளகாய், பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும நறுக்கிய பூண்டினை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு இதில் நன்கு கழுவிய சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்து மசாலாவுடன் இணைந்து வந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சிக்கன் பூண்டு வறுவல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டயட்டில் இருப்பவர்கள் மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் மரவள்ளிக்கிழங்கு, ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து கட்லெட் செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ
ஓட்ஸ் - 100 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
புதினா - ஒரு கப்
கேரட் - ஒன்று
பீன்ஸ் - 10
பச்சைப் பட்டாணி - 50 கிராம்
பிரெட் தூள் - ஒரு கப்
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெங்காயம், பீன்ஸ், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துகொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
பச்சைப் பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் துருவிய கேரட், வேக வைத்த பட்டாணி, பொடியாக நறுக்கிய பீன்ஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், வேக வைத்து துருவிய மரவள்ளிக்கிழங்கு, புதினா சேர்த்து வதக்கி இறக்கவும்.
ஆறியதும் வறுத்து பொடித்த ஓட்ஸ் சேர்த்து நன்கு பிசையவும்.
தேவையான வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டி, பிரெட் தூளில் புரட்டி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டை போட்டு சுற்றி எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.
சூப்பரான சத்தான .மரவள்ளிக்கிழங்கு ஓட்ஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.