என் மலர்tooltip icon

    சமையல்

    மரவள்ளிக்கிழங்கில் விதவிதமான ரெசிபிகளை செய்யலாம். இன்று மரவள்ளிக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
    பச்சரிசி மாவு - முக்கால் கிலோ
    இஞ்சி - ஒரு துண்டு
    பச்சை மிளகாய் - 10
    ஓமம் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    வெண்ணெய் - 100 கிராம்

    மரவள்ளிக்கிழங்கு

    செய்முறை :

    இஞ்சி, பச்சை மிளகாய், ஓமத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் துருவிய  மரவள்ளிக்கிழங்கை போட்டு அதனுடன் அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை முறுக்கு அச்சில் போட்டு சிறு சிறு முறுக்குகளாகப் பிழிந்து பொரித்தெடுக்கவும்.

    இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள் காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் செய்து சுவைக்கலாம்.இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரவுன் பிரெட் - 8
    முட்டை - 4
    (சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளைகருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் )
    வெங்காயம் - 1 பெரியது
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    குடை மிளகாய் - 1 சிறியது
    வெள்ளரி - அரையளவு
    உப்பு - தேவையான அளவு

    கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச்

    செய்முறை

    வெங்காயம், வெள்ளரிக்காய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    பின் உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    இடையில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும் ( முட்டை வெள்ளைக்கருவை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் )

    வெங்காயம் வதங்கியதும் முட்டையை ஊற்றி கலந்து கிண்டவும்.

    இறுதியில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் மற்றும் வெள்ளரி கலந்து இறக்கவும்.

    பிரவுன் பிரெட்டை ஓரத்தை வெட்டி  விட்டு அதை முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    இரண்டு பிரெட் துண்டங்களுக்கு நடுவில் முட்டை கலவையை வைத்து sandwich மேக்கரில் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாட்டில் அனைத்து விழாக்களிலும் பண்டிகைகளிலும் பணியாரம் தவறாது இடம்பெறும். வாழைப்பூ வைத்துசெய்யும் பணியாரம் பலரின் விருப்ப உணவாகும்.
    தேவையான பொருட்கள்

    புழுங்கல் அரிசி - கால் கிலோ
    வாழைப்பூ - 1
    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப்
    இஞ்சி - ஒரு துண்டு, மிளகு - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - 2
    தக்காளி - 1
    நெய் - ஒரு கப் (சிறியது)

    வாழைப்பூ பணியாரம்

    செய்முறை

    வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

    இவற்றுடன் இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அரைக்கவும்.

    நெய்யில் வாழைப்பூவை வதக்கி மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

    பணியாரக் குழியில் நெய் விட்டு, மாவை ஊற்றி பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான வாழைப்பூ பணியாரம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பது நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    செலரி - 2
    ஆப்பிள் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    பார்ஸ்லே - அரை இன்ச்
    லெமன் ஜூஸ் - அரைடீஸ்பூன்

    ஆப்பிள் செலரி ஜூஸ்  செய்ய தேவையான பொருட்கள்

    செய்முறை:

    செலரி, ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி தோல் நீக்கி கொள்ளவும்.

    நறுக்கிய செலரி, ஆப்பிள், இஞ்சி, பார்ஸ்லே, லெமன் ஜூஸ் அனைத்தையும் ஜூஸரில் அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி பருகவும்.

    ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள்-செலரி ஜூஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பூண்டு கார முறுக்கு. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டுப் பல் - 15,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    அரிசி மாவு - மூன்றரை கப்,
    உளுந்தை வறுத்து அரைத்த மாவு - அரை கப்,
    வறுத்த எள் - 2 டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பூண்டு கார முறுக்கு

    செய்முறை:

    பூண்டுடன் மிளகாய்த்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, பெருங்காயத்தூள், வெண்ணெய், எள், அரைத்த பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான பூண்டு கார முறுக்கு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த அதிமதுரம் தேங்காய் பாலை குடித்தால் நிவாரணம் பெறலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அதிமதுரம் - 5 துண்டுகள்
    தேங்காய்ப் பால் - 1 டம்ளர்
    சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
    தூளாக்கிய வெல்லம் - தேவைக்கு
    ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்

    அதிமதுரம் தேங்காய் பால்

    செய்முறை:

    அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

     நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.

    மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

    இதனை ஆறவைத்து பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காயத்தாள் முட்டை பொரியலை சூடான சாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயத்தாள் - 1 கட்டு
    சின்ன வெங்காயம் -  10
    வரமிளகாய் - 4
    கடுகு - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு -  அரை டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
    முட்டை - 3
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் -  தேவைக்கேற்ப

    வெங்காயத்தாள் முட்டை பொரியல்

    செய்முறை :

    வெங்காயம், வெங்காயத்தாளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

     கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

     பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.

     வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும்.

    பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.

    முட்டை வெந்தது உதிரியாக வந்ததும்  அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெங்காயத்தாள் முட்டை பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கீரையை வைத்து சத்தான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

     முருங்கைக்கீரை - அரை கப்
     தக்காளி - ஒன்று
     எலுமிச்சை - ஒன்று
     மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
     பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
     உப்பு - தேவையான அளவு

     அரைக்க:

    பூண்டு - 3 பற்கள்
    சீரகம் - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 2 இணுக்கு
    பச்சை மிளகாய் - ஒன்று
    கொத்தமல்லித் தழை (காம்புடன்) - சிறிது

    தாளிக்க:

    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை
     காய்ந்த மிளகாய் - ஒன்று

    முருங்கைக்கீரை ரசம்

    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்தெடுக்கவும்.

    பிறகு அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்
     
    பின்பு அத்துடன் தூள் வகைகளைச் சேர்க்கவும்.

    பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவேண்டும் .

    பிறகு தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்கீரையை வேக வைத்த நீருடன் சேர்த்து, தேவையான அளவு சுடு நீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்துவிடவேண்டும்

    நுரை பொங்கி வரும் போது உப்பு சேர்த்து ஒரு கொதிவரவிட்டு இறக்கவும்.

    ஆரோக்கியமான, சுவையான முருங்கைக்கீரை ரசம் தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை தமிழ் புத்தாண்டிற்கு எளிய முறையில் இனிப்பு செய்ய விரும்பினால் ஜவ்வரிசி பாயாசம் செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - 200 கிராம்
    சர்க்கரை - 250 கிராம்
    தண்ணீர் - 500 மி.லி.
    தேங்காய் -  அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)
    முந்திரிபருப்பு - தேவையான அளவு
    ஏலக்காய் - தேவையான அளவு

     ஜவ்வரிசி பாயாசம்

    செய்முறை

    அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.

    ஜவ்வரிசி வெந்ததும், சர்க்கரை,  ஏலக்காய் சேர்க்கவும்.

    பாயாசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும்.

    நெய்யில் முந்தரி வறுத்து பாயாசத்தில் போடவும்.

    சுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார். சூடாக பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யும் இந்த ரொட்டி இலங்கையில் மிகவும் பிரபலம். சத்தானதும் கூட. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - அரை கப்
    கோதுமை மாவு - அரை கப்
    பச்சை மிளகாய் - ஒன்று
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    இலங்கை ரொட்டி

    செய்முறை:

    பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், மைதா மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

    மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கனமாக தட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் திரட்டி வைத்த ரொட்டியை போடவும்.  

    இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து சைட் டிஷ் உடன் பரிமாறவும்.

    சூப்பரான இலங்கை ரொட்டி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் குடல் குழம்பு. இன்று இந்த குழப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆட்டுக் குடல் - ஒன்று,
    சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டை - 4 துண்டு,
    கிராம்பு - 6,
    ஏலக்காய் - 4,
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - 1 கப்,
    வெள்ளைப் பூண்டு - எட்டுப் பல்,
    இஞ்சி - 25 கிராம்,
    சின்ன வெங்காயம் நறுக்கியது - ஒரு கப்
    பெரிய வெங்காயம் - 2,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    தக்காளி - 3,
    மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
    மல்லித் தூள் - 5 டேபிள் ஸ்பூன்,
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு.

    மட்டன் குடல் குழம்பு

    செய்முறை

    மட்டன் குடலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோம்பு, சீரகம், மஞ்சள் தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, தேங்காய்த் துருவல், பூண்டு, இஞ்சி, ஒரு கப் சிறிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

    அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த பொடியாக நறுக்கி குடலை சேர்த்து வதக்க வேண்டும்.

    குடல் வெந்த பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

    தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்து 20 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

    குடல் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.

    சூப்பரான மட்டன் குடல் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு - ஒரு கப்,
    தினை - ஒரு கப்,
    கேழ்வரகு - ஒரு கப்,
    ஏலக்காய் - 4,
    கருப்பட்டி - 2 கப்,
    தேங்காய்த் துருவல் - 1 கப்

    சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை

    செய்முறை

    கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்க வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை கொழுக்கட்டையாக பிடிக்க வேண்டும்.

    பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லித் தட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×