search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடை மிளகாய் சமையல்"

    காலையில் சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கான ரெசிபி இது. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 6 துண்டுகள்
    புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
    பெரிய வெங்காயம் - 1
    குடைமிளகாய் - பாதி
    கேரட்  - சிறியது 1
    தக்காளி - 1
    பச்சைமிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், கேரட், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும்.

    ஒரு மெல்லிய துணியில் தயிரை போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், தக்காளி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும்.

    பின்னர் முக்கோணம், சதுரம் என விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும்.

     குறிப்பு:

    * விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம்.

    * தயாரித்து நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் தயிர் பிரெட்டுடன் நன்கு ஊறிவிடும் என்பதால், பரிமாறுவதற்கு சற்று நேரம் முன்பாக தயிர் சாண்ட்விச்சைத் தயாரிக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான செஸ்வான் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 250 கிராம்,
    மைதா - 3 டீஸ்பூன்,
    கார்ன் பிளவர் - 2 டீஸ்பூன்,
    முட்டை - ஒன்று,
    காய்ந்த மிளகாய் - 50 கிராம்,
    வெங்காயம் -1,
    குடைமிளகாய் - 1,
    தக்காளி - 1,
    பூண்டு - 1,
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவைக்கு,
    தக்காளி சாஸ் - சிறிது.



    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு அதனுடன் மைதா, உப்பு, கார்ன் பிளவர், முட்டை (பாதி) சற்று நீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், தக்காளி, கேப்சிகம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.

    பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அரைத்த காய்ந்த மிளகாய், தக்காளி சாஸ் சேர்க்கவும்.

    கொஞ்சமாக கார்ன் பிளவர் கரைத்து வாணலியில் ஊற்றவும்.

    கடைசியாக பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான செஸ்வான் சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் சேர்த்து சூப்பரான பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மக்ரோனி பாஸ்தா - 1 கப்
    சீஸ் - 1/2 கப்
    உருளைக்கிழங்கு - 1
    குடை மிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூ
    சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    பிரெட் க்ரெம்ப்ஸ் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மக்ரோனி பாஸ்தாவை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேவையான உப்பு சேர்த்து வேக வைத்து, வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிய வேண்டும். வெந்த பாஸ்தாவை கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில், சீஸ், தக்காளி சாஸ், மிளகாய் தூள் / சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, நறுக்கிய குடை மிளகாய், ஒரிகானோ, மைதா மாவு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக அதனுடன் மசித்த பாஸ்தாவை போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கைகளால் பிசையவும்.

    இதை சிறு உருண்டைகளாக உருட்டி பிரெட் க்ரெம்ப்ஸில் புரட்டி எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை பொன் நிறம் ஆகும் வரை வேக விட்டு பொரித்து எடுக்கவும். தீயை குறைத்து வைத்து பொரிக்கவும்.

    சுவையான பாஸ்தா சீஸ் பால்ஸ் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - ஒன்று,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    உருளைக்கிழங்கைத் தோல் சீவி குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    குடைமிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுச் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் குடைமிளகாயைச் சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வேகக்கூடாது.

    உருளைக்கிழங்கு நன்கு பொன்னிறமாக வதங்கியதும் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா ரெடி.

    குறிப்பு: குடமிளகாயை மற்ற காய்கறிகளைப் போல் அதிக நேரம் சமைக்காமல் லேசாக வதக்கினால் அதன் சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.

    இந்தப் பொரியல் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற சைடிஷ். மிளகுத்தூளுக்குப் பதிலாக, சாம்பார் பொடி சேர்த்து இதைச் செய்து எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு சைடிஷ்ஷாகப் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×