என் மலர்tooltip icon

    சமையல்

    காபி பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக, புதியவகை ‘டல்கோனா காபி’ சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. வீட்டிலேயே டல்கோனா காபியை எளிமையாக தயாரிக்கலாம்.
    காபி பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக, புதியவகை காபி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ‘டல்கோனா காபி’ என்று பெயர். ஏராளமானோர் அந்த காபியின் புகைப்படங்களையும், காபி தயாரிக்கும் முறையையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார்கள். வீட்டிலேயே டல்கோனா காபியை எளிமையாக தயாரிக்கலாம்.

    தேவையானவை:


    காபி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    சுடுநீர் - 2 டேபிள் ஸ்பூன்
    பால் - அரை டம்ளர்
    ஐஸ் கட்டி - சிறிதளவு

    டல்கோனா காபி

    செய்முறை:

    பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து, பின்னர் குளிர்சாதன பெட்டியில் குளிர வைத்துக்கொள்ளுங்கள்.

    அகன்ற கிண்ணத்தில் காபி தூள், சர்க்கரையை போட்டு அதில் சுடுநீரை ஊற்றி நன்கு அடித்து கலக்குங்கள்.

    காபி தூள் நன்றாக கலந்து கிரீம் பதத்தில் இருக்க வேண்டும்.

    தொடர்ந்து குளிரவைத்த பாலை எடுத்து டம்ளரில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும்.

    அதில் ஐஸ்கட்டியை போடவேண்டும்.

    பின்னர் காபி கிரீமை மேல்பரப்பில் ஊற்றி லேசாக கலக்கி பருகலாம்.

    டல்கோனா காபி தயார் செய்யப்படும் வீடியோவை, சமூகவலைத்தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கிறார்கள். அதனால் குறுகிய காலத்தில் டல்கோனா காபிக்கு தனி மவுசு கிடைத்திருக்கிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மரவள்ளிக்கிழங்கில் சத்தான சுவையான உணவுகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மரவள்ளிக்கிழங்கில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ கிராம்
    பச்சரிசி - 200 கிராம்
    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து) -150 கிராம்
    காய்ந்த மிளகாய் - 6
    இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 6 பல்
    கொத்தமல்லித்தழை - ஒரு கப்
    எண்ணெய் - 500 மில்லி
    உப்பு - தேவைக்கேற்ப

    மரவள்ளிக்கிழங்கு

    செய்முறை:

    மரவள்ளிக்கிழங்கு தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்பு கழுவி வடித்து வைக்கவும்.

    பின்பு இதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி பின்பு எடுத்து நறுக்கிய கொத்த மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    தோசை தவாவில் எண்ணெய்விட்டு கொஞ்சம் மாவை கனமான அடைகளாக வார்த்து பொன்னிறமாகத் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

    சூப்பரான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மரவள்ளிக்கிழங்கில் புட்டு, கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மரவள்ளிக்கிழங்கை வைத்து அருமையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துருவிய மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
    சர்க்கரை - 300 கிராம்
    நெய் - 300 கிராம்
    முந்திரி, பாதாம் - தலா 40
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை

    மரவள்ளிக்கிழங்கு

    செய்முறை:

    அடிகனமான கடாயில் 4 ஸ்பூன் நெய்விட்டு முந்திரி, பாதாம் வறுத்தெடுத்து வைக்கவும்.

    பின் வாணலியில் 4 ஸ்பூன் நெய்விட்டு துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

    அதே வாணலியில் சர்க்கரையைப் போட்டு, 50 மில்லி தண்ணீர்விட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

    பின்பு அதில் வதக்கி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறவும்.

    நெய் பிரிந்து வந்தவுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து கிளறி எடுக்கவும்.

    சுவையான மரவள்ளிக்கிழங்கு அல்வா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பப்பாளி பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பப்பாளி பழம், தேங்காய்ப்பால் சேர்த்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பழுத்த பப்பாளிப்பழம் - 1/2,
    தேங்காய்ப் பால் - 1 கப்,
    வெல்லம் - 1/4 கப்,
    ஏலக்காய் தூள் - சிறிதளவு.

    செய்முறை

    பப்பாளிப்பழத்துடன் வெல்லம், தேங்காய்ப் பால் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும்.

    நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும்.

    சூப்பரான பப்பாளிப்பழ மில்க் ஷேக் ரெடி.
    இந்த முட்டை பிரியாணியை செய்வது மிகவும் சுலபம். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரியாணி அரிசி - 1/2 கிலோ
    முட்டை - 5
    பட்டை பொடி - 1/4 டீஸ்பூன்
    கிராம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 2
    தயிர் - 1/2 கப்
    வெங்காயம் -  3
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி, புதினா - 1 கப்
    எலுமிச்சம்பழம் - 1
    நெய் எண்ணெய் - 1 கப்
    உப்பு - தேவைக்கு.

    முட்டை பிரியாணி

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விடவும்.

    குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை பொடி, கிராம்பு பொடி, சோம்பு சேர்த்த பின் பிரியாணி இலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

    பின் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    பின் பிரியாணி மசாலா, பச்சை மிளகாய், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் பிரியாணி அரிசியை சேர்த்து வேக வைத்த முட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கினால் சூப்பரான முட்டை பிரியாணி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று கேழ்வரகு, வெங்காயம் சேர்த்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு  மாவு - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 3,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - தேவைக்கேற்ப,
    மிளகாய்வற்றல் - 3,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    தண்ணீர் - தேவைக்கேற்ப.

    தாளிப்பதற்கு…

    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

    கேழ்வரகு வெங்காய ரொட்டி

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சிறிது இளக்கமாகப் பிசையவேண்டும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், ப. மிளகாய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    வதக்கிய பொருள்களை கேழ்வரகு மாவுடன் சேர்த்து பிசைந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை கையில் எடுத்து, கல்லில் தட்டி இரு புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    சூப்பரான கேழ்வரகு வெங்காய ரொட்டி ரெடி.

    எவ்வளவு அதிகம் வெங்காயம் போடப்படுகிறதோ அந்த அளவுக்கு வாசனையும் சுவையும் நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று வாயில் வைத்தாலே கரையும் வாழைப்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். ..
    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 8
    சர்க்கரை - ஒரு கப்
    நெய் - 6 டேபிள் ஸ்பூன்
    பாதாம் - 5
    முந்திரி - 5
    சோள மாவு - 5 டீஸ்பூன்

    வாழைப்பழ அல்வா

    செய்முறை:

    முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரியை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

    அதே வாணலியில் நெய்விட்டு உருகியதும், வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.

    வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வாழைப்பழ கலவையுடன் சேர்த்து கிளறவும். இடை இடையே நெய் சேர்க்கவும்.

    அல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்து வைத்து பாதாம், முந்திரியை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறலாம்.

    சுவையான வாழைப்பழ அல்வா ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மிகவும் சத்து நிறைந்தது மரவள்ளிக்கிழங்கு. இன்று இந்த கிழங்கை வைத்து சுவையான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மரவள்ளிக் கிழங்கு - அரை கிலோ
    தேங்காய் துருவல் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு அதனை துருவிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் துருவிய மரவள்ளிக்கிழங்கை போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். 15 நிமிடம் கழித்து அதனை பிழிந்து, அதிலுள்ள பாலை வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

    புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

    புட்டு குழலை எடுத்துக் கொண்டு, அதனுள் சிறிய ஓட்டையுள்ள தட்டை வைத்து, முதலில் சிறிது துருவிய தேங்காயைப் போட்டு, பின் சிறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என அடுத்தடுத்து போட்டு குழலை நிரப்ப வேண்டும்.

    பிறகு அந்த குழலை புட்டு பாத்திரத்துடன் இணைத்து, 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை. இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
    ஊறவைத்த கடலைப்பருப்பு - 150 கிராம்
    பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பட்டை - சிறு துண்டு
    கிராம்பு - 1
    பச்சை மிளகாய் - 5
    காய்ந்த மிளகாய் - 4
    புதினா - ஒரு கைப்பிடி அளவு
    வெங்காயம் - 100 கிராம்
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு

    மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை

    செய்முறை:


    மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

    புதினா, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    மரவள்ளிக்கிழங்கு மசால் பருப்பு வடை தயார்.

    குச்சிக்கிழங்கு, குச்சிவள்ளிக்கிழங்கு, மரச்சினிக்கிழங்கு என்றும் மரவள்ளிக்கிழங்கு அழைக்கப்படுகிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இதில் ஜூஸில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் ஏ, சி,இ நிறைந்துள்ளது. இது சரும அழகுக்கும் தேவையானது. இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆரஞ்சு பழம் . 3
    நறுக்கிய கீரை - 1 கப்
    முட்டை கோஸ் -   100 கிராம்
    வெள்ளரிக்காய் - 1
    ஆப்பிள் - 1

    கிரீன் வைட்டமின் ஜூஸ்

    செய்முறை

    முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி பிழிந்து ஜூஸாக்கி கொள்ளவும்.

    மிக்சியில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் கீரை, முட்டைக்கோஸை போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் ஆப்பிள், வெள்ளரிக்காயை கொட்டி மீண்டும் அரைக்கவும்.

    ஜூஸ் பதத்துக்கு வந்ததும் டம்ளரில் ஊற்றி ருசிக்கலாம்.

    இதில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் ஏ, சி,இ நிறைந்துள்ளது. இது சரும அழகுக்கும் தேவையானது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருவாட்டில் தொக்கு, வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் கருவாடு வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - அரை கிலோ
    வஞ்சிரம் கருவாடு - அரை கிலோ
    வெங்காயம் - அரை கிலோ
    பழுத்த தக்காளி - அரை கிலோ
    பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
    காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
    தயிர் - ஒரு கோப்பை
    கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    புதினா - ஒரு கொத்து
    பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
    பிரியாணி இலை - இரண்டு
    உப்பு தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - 200 மில்லி
    நெய் - 50 மில்லி
    எலுமிச்சை - அரை பழம்

    கருவாட்டு பிரியாணி

    செய்முறை :

    அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.

    கருவாட்டை நன்றாக கழுவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.

    அடுத்து உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு வேக விடவும்.

    அடுத்து அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

    தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

    பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.

    சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  
    பாலக்கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. இதில் பொதுவான பருப்புக்கூட்டு மசியல் என செய்வோம். ஆனால் பாலக் கீரையில் சுவையான சாம்பாரும் செய்ய முடியும்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை -  1 கட்டு
    வேகவைத்த துவரம் பருப்பு -  1 கப்
    சின்ன வெங்காயம் -  1 டேபிள்ஸ்பூன்
    தக்காளி -  1
    சாம்பார் பொடி -  1 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் -  1 டீஸ்பூன்
    புளி -  1 எலுமிச்சை அளவு
    கடுகு -  1 டீஸ்பூன்
    உளுந்து -  1 டீஸ்பூன்
    சீரகம் -  1 டீஸ்பூன்
    வெந்தயம் -  1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் -  1/2 டீஸ்பூன்
    கொத்துமல்லித்தழை -  சிறிது

    பாலக்கீரை சாம்பார்

    செய்முறை. :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை வேகவைத்து கொள்ளவும்.

    நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    புளியை கரைத்து வடிகட்டி ஊற்றவும்.

    வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும்.

    இறுதியில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×