search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பருப்பில்லாத திடீர் சாம்பார்
    X
    பருப்பில்லாத திடீர் சாம்பார்

    பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல்

    திடீரென விருந்தாளிகள் வந்தாலோ அல்லது சாம்பார், சட்னி போதவில்லை என்றால் சட்டென பருப்பில்லாமல் திடீர் சாம்பாரை வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஐந்து
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தக்காளி - நான்கு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைகேற்ப
    தண்ணீர் - தேவையான அளவு
    கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்

    பருப்பில்லாத திடீர் சாம்பார்

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.

    பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் .

    நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.

    பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×