என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகள் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    பச்சைப் பட்டாணி - கால் கப்
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    கடுகு - அரை டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    உருளைக்கிழங்கு பட்டாணி சாதம்

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்துதோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை  வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை  அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து இதனுடன் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு அதில் உதிரியாக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை, துளசி சேர்த்து சூப் தயாரித்து பருகலாம், இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தண்ணீர் - 1 கப்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள்ப் பொடி - 1 டீஸ்பூன்
    துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
    வெற்றிலை - 6 இலைகள்
    தூதுவளை இலை - ஒரு கைப்பிடி அளவு
    புளி கரைசல் - ஒரு டீஸ்பூன்
    இஞ்சி - ஒரு துண்டு
    தக்காளி - ஒன்று
    சிவப்பு மிளகாய் - ஒன்று
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    துளசி, வெற்றிலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை இலை, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வைக்கவும்.

    நன்றாக கொதித்து சாறு நன்றாக இறக்கியதும் வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.

    சூப்பரான வெற்றிலை துளசி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலுடன் கறிவேப்பிலை, தேன் சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 100 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    சர்க்கரை - கால் டீஸ்பூன்
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு (பொரிக்க)
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
    சில்லி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - அரை டீஸ்பூன்
    கார்ன்ஃப்ளேக்ஸ் - 50 கிராம் (நொறுக்கியது)

    பேட்டர் செய்ய:

    கார்ன்ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
    மைதா - 1 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை

    இறால் கறிவேப்பிலை தேன் வறுவல்

    செய்முறை

    இறாலைக் கழுவி சுத்தம் செய்து, அதன் நடுவே நன்கு கீறி விடவும்,  ஆனால், இறாலை இரண்டாகப் பிளக்கக் கூடாது.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேட்டர் செய்ய கொடுத்தவற்றை ஒரு பவுலில் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைக்கவும்.

    இறாலை ஒவ்வொரு பீஸாக எடுத்து பேட்டரில் புரட்டி எடுத்து நொறுக்கிய கார்ன் ஃப்ளேக்ஸில் போட்டு புரட்டவும்.

    இப்படி அனைத்து பீஸ்களையும் கார்ன்ஃப்ளாரில் புரட்டி தனியாக வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டுக்கு வந்ததும் இறாலைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இதில் கறிவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் தண்ணீர் ஊற்றி சில்லி பேஸ்ட், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் ஊற்றி சாஸ் பதத்துக்குக் கொதித்ததும் அதில் பொரித்த இறாலைச் சேர்த்துப் புரட்டி தேன் ஊற்றிப் பரிமாறவும்.

    இறாலை மட்டும் பொரித்தெடுத்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து, மேலே தூவியும் சாப்பிடலாம்.

    இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்,
    வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்,
    மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) - அரை டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்,
    நெய் - 4 டேபிள் ஸ்பூன்,
    இஞ்சி - ஒரு துண்டு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    ப.மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு.

    கோதுமை ரவை மிளகு பொங்கல்

    செய்முறை:

    இஞ்சி துருவிக்கொள்ளவும்

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

    இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு… சீரகம், மிளகு. இஞ்சி துருவல், ப.மிளகாய், சீரகம், கறிவேப்பிலை போட்டு வறுத்து கோதுமை கலவையில் கலந்து, மீதமுள்ள நெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

    சூப்பரான கோதுமை ரவை மிளகு பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாட்டுக்கோழியில் சூப்பரான காரசாரமான கொத்துக்கறி மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - 1 கிலோ
    பெரியவெங்காயம் - 3
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5
    மிளகுதூள் - 4 டீ ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - 2 டீ ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த கறியை எலும்பு இல்லாமல் எடுத்து கொத்துக் கறியாக வெட்டிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

    அடுத்து சிக்கனை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் சீரகத்தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    மசாலா கறியில் சேர்ந்தவுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.
    தேவையான பொருட்கள்

    கேரட் - 2
    தக்காளி - 1
    சின்ன வெங்காயம் - 10
    இஞ்சி - 2 துண்டு
    பூண்டு - 5 பற்கள்
    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 4
    கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து

    தக்காளி கேரட்

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், இஞ்சி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

    பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், தக்காளி சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும்.

    வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்கு மிருதுவாக வரும் வரை அரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    சுவையான சத்தான தக்காளி கேரட் சட்னி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் பிடிக்காத அசைவப் பிரியர்கள் என யாரேனும் உள்ளனரா? அவர்களுக்காகவே ஒரு புதுவித ரெசிப்பியைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 4 மார்பு துண்டங்கள்
    எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
    எலுமிச்சை தோல் - சிறிதளவு
    சிக்கன் ஸ்டாக் - 2 கப்
    கார்ன்ஃப்ளவர் - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் -5
    வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    ஜாதிக்காய் - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    லெமன் சிக்கன்

    செய்முறை

    சிக்கனை நன்றாக கழுவி அதில் உள்ள எலும்புகளை நீக்கி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு தடவி ஊற விடவும்.

    அடுத்து 2 ஸ்பூன் கார்ன்ப்ளவரை நீரில் கரைத்துக் கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    எலுமிச்சைத் தோலினை துருவிக் கொள்ளவும்.

    சிக்கனை கார்ன்ஃப்ளவர் மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    அடுத்து தவாவில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், வெள்ளை மிளகுத் தூள், உப்பு, ஜாதிக்காய், துருவியஎலுமிச்சைத் தோல், சிக்கன் ஸ்டாக் போன்றவற்றினைப் போட்டு வேகவிடவும்.

    இதில் கார்ன்ஃப்ளவரை ஊற்றிக் கலந்து வேகவிட்டு இறக்கி, சிக்கனைப் போட்டு மீண்டும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி இறக்கினால் லெமன் சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட் அதிக இரத்தத்தினை உற்பத்தி செய்யக் கூடியது, இதனை பொரியலாக சாப்பிடப் பிடிக்காதவர்கள் இட்லி, தோசைக்கு ஏற்ற வகையில் சட்னி செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 2
    வரமிளகாய் - 4
    கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கீற்று
    தேங்காய் - ஒரு துண்டு
    சின்ன வெங்காயம் - 4
    புளி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு- தேவையான அளவு
    கடுகு- தேவையான அளவு
    உளுந்து- தேவையான அளவு

    பீட்ரூட்

    செய்முறை

    பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    தேங்காயை சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.

    அடுத்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை போட்டு வதக்கி நீர் தெளித்து வேகவைக்கவும்.

    வதக்கிய பொருட்களை புளி மற்றும் உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    இறுதியில் பீட்ரூட்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பீட்ரூட் சட்னியில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ராகி நூடுல்ஸ் - ஒரு கப்,
    வெங்காயம் - கால் கப்,
    வெங்காயத் தாள் - தேவையான அளவு
    ப.மிளகாய் - 3
    நெய் - தேவையான அளவு
    கேரட் - 1
    கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
    குடை மிளகாய் - 1,
    கோஸ் - சிறிய துண்டு
    எண்ணெய் - தேவையான அளவு

    ராகி வெஜ் நூடுல்ஸ்

    செய்முறை

    வெங்காயத்தாள், கேரட், ப.மிளகாய், வெங்காயம், குடை மிளகாய், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ராகி நூடுல்ஸ்ஸை சிறிது உப்பு நீர் தெளித்து பிசறி, ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து குடைமிளகாய், கேரட், கோஸ், உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து வேக வைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்.

    மசாலா அனைத்தும் நூடுல்ஸில் சேர்ந்ததும் ஒரு டீஸ்பூன் நெய், வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    சூப்பரான ராகி வெஜ் நூடுல்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சைப்பயறில் இரும்புச் சத்தும் புரதச்சத்தும் அதிக அளவு உள்ளது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்த சோகை வராமல் காத்துக் கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப்பயறு - ஒரு கப்
    கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - முக்கால் கப்
    முந்திரி - 30 கிராம்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் தூள் , ஜாதிக்காய் தூள் - தலா கால் டீஸ்பூன்
    உப்பு - அரை டீஸ்பூன்

    பச்சைப்பயறு புட்டு

    செய்முறை :

    பச்சைப்பயறை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும்.

    நன்கு சூடு ஆறியதும் 2 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.

    இட்லிக்கு உளுந்து அரைப்பது போன்று நீர் சேர்த்து பொங்க அரைக்கவும்.

    அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த இட்லியை ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.

    அரை கப் நீரில் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை போட்டு சூடாக்கி கரைந்ததும் வடிகட்டவும்

    வடிகட்டிய கரைசலை அடுப்பில் வைத்து கெட்டிப்பாகு செய்து உதிர்த்த பச்சைப்பயறு இட்லியை நெய் , தேங்காய் துருவல் , ஏலக்காய் தூள் , ஜாதிக்காய் தூள் , சேர்த்து நன்றாக கலக்கவும்.

    நெய்யில் முந்திரி வறுத்து இறுதியாக சேர்த்துக்கொள்ளவும்.

    உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய பச்சைப்பயறு புட்டு ரெடி.. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிட அருமையான சிற்றுண்டி ஆலு போஹா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு -  1
    கேரட்  - 1
    வெங்காயம் - ஒன்று,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - தேவையான அளவு.

    ஆலு போஹா

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயம், கேரட், இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஊற வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உருளைகிழங்கு, கேரட் துண்டுகள், உப்பு சேர்த்து, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதில் பிசிறிய அவலை போட்டு (உதிர்த்து போட்டு) கலக்கவும்.

    நன்கு சூடானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கினால்…. சூப்பரான ஆலு போஹா தயார்.

    குறிப்பு: இதை அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் சட்னி தொட்டும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கல் அரிசி - ஒரு கப்,
    துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு (மூன்றும் சேர்ந்து) -  ஒரு கப்,  
    சின்ன வெங்காயம் - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 4,
    இஞ்சி - ஒரு துண்டு
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - கால் கப்,
    உப்பு - தேவையான அளவு.

    சின்ன வெங்காயம்

    செய்முறை:

    சின்னவெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை கலந்து ஊற வைக்கவும். தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய்  சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

    மாவில் நறுக்கிய  இஞ்சி, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்துக் கலக்கவும்.

    பிறகு, உப்பு போட்டு கலக்கவும்.

    சூடான தவாவில் எண்ணெய் தடவி, மாவை கரண்டி அளவு விட்டு வட்டமாக, கொஞ்சம் கனமாக தேய்க்கவும்.

    சுற்றிலும் எண்ணெய் விடவும். நடுவில் துளை செய்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் திருப்பி போடவும். நன்கு வெந்து பொன் முறுவலாக வந்ததும் எடுக்கவும்.

    சத்தான சுவையான சின்ன வெங்காய அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×