என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான சீஸை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரைப்பதற்கு :


    புழுங்கல் அரிசி - 4 கப்,
    முழு உளுந்து - 1 கப்,
    துவரம் பருப்பு - கால் கப்,
    வெந்தயம் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    ஊத்தப்பத்துக்கு :

    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 6 பல்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    துருவிய சீஸ் - 1 கப்
    எண்ணெய் - தேவைக்கு
    கேரட் - 3

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
     
    அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக் கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கேரட் தூவவும்.

    கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.

    வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சீஸ் ஊத்தப்பம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள குரோமியம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய வெங்காயம் - 4,
    பூண்டுப் பற்கள் - 4,
    பச்சைமிளகாய் - 2,
    கெட்டியான தேங்காய்ப்பால் - அரை கப்,
    வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,  
    நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது - ஒரு டீஸ்பூன்,
    சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    இதில், மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.

    வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.

    ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு  கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும்.

    சூப்பரான சத்தான வெங்காய சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சைமிளகாய் - 3
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்

    செய்முறை :


    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை இட்லி தட்டில் அரை பாகம் வேகவைத்து தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

    நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் துள், தனியா தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை போட்டு மொறு மொறு என்று பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அரிசியில் புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்
    உளுந்து - கால் கப்
    வெங்காயம் - ஒன்று
    கேரட் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

    சிவப்பு அரிசி

    செய்முறை:


    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவிட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு மணி நேரத்துக்குப் பிறகு... மாவுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை கனமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும்.

    சட்னியுடன் பரிமாறவும்.

    சத்தான சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    தேவையான பொருட்கள் :
     
    பூண்டு - 100 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2 (பெரியது)
    வெந்தய பொடி - 1/2 டீஸ்பூன்
    குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    புளி - 1 எலுமிச்சை அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 50 கிராம்
    சமையல் எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    பூண்டு குழம்பு
     
    செய்முறை :
     
    பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
     
    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
     
    புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
     
    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டுகளை சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கவும்.
     
    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
     
    தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், சிறிது தண்ணீர் (அதிக அளவு ஊற்றி விட வேண்டாம்) மற்றும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
     
    குழம்பானது நன்கு கொதித்ததும், கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
     
    குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி விடவும்.
     
    இப்போது சுவையான பூண்டு குழம்பு தயார்!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த கற்பூரவள்ளி, சுக்கு சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம். இந்த ரசம் விரைவில் நிவாரணம் தரும்.
    தேவையான பொருட்கள் :
     
    கற்பூரவள்ளி இலை - 5
    சுக்கு - ஒரு சிறிய துண்டு
    மிளகு - அரை டீஸ்பூன்
    கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
    துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
    தக்காளி சாறு - 2 கப்
    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கற்பூரவள்ளி சுக்கு ரசம்

    செய்முறை:

    கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக  அரைக்கவும்.

    இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

    சுவையான ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி சுக்கு ரசம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண் போன்ற உணவுகளுக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் ப்ரோக்கோலி கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ப்ரோக்கோலி - கால் கிலோ
    சீரகம் - அரை டீஸ்பூன்
    ஏலக்காய் - 2
    வெங்காயம் - பாதி
    இஞ்சி பூண்டு விழுது - முக்கால் டீஸ்பூன்
    தக்காளி விழுது - அரை கப்
    முந்திரி - 5
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா - கால் டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    ப்ரோக்கோலி

    செய்முறை:

    முதலில் ப்ரக்கோலியை துண்டுகளாக எடுத்து சுடு தண்ணீரில் உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவும்.

    முந்திரியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    தொடர்ந்து, அரைத்து வைத்த தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்.

    அத்துடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.

    பின்னர், அரைத்து வைத்த முந்திரி விழுது, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

    இந்நிலையில், ப்ரக்கோலி சேர்த்து கிளறி மூடிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சுவையான ப்ரக்கோலி கிரேவி ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தட்டப்பயறில் கலோரிகளும் கொழுப்பும் குறைவாகவே உள்ளது. தட்டை பயறுகளில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது.
    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் - 1
    தட்டப்பயறு - 50 கிராம்
    தக்காளி - 1
    சிவப்பு குடைமிளகாய் - 1
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    தட்டப்பயறு காய்கறி சாலட்

    செய்முறை

    தட்டப்பயறை வேக வைத்து கொள்ளவும்.

    வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த தட்டப்பயறை போட்டு அதனுடன் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.

    சூப்பரான தட்டப்பயறு காய்கறி சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இது ஒரு சீனநாட்டு உணவு செய்முறையாகும். காரமான அதேநேரத்தில் புளிப்பும் இனிப்புமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - கால் கிலோ
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 1
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    பூண்டு - 10 பல்
    பச்சை மிளகாய் - 4
    சிவப்பு மிளகாய் - 4
    சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - தேவையான அளவு
    ரைஸ் ஒயின் - 5 மில்லி லிட்டர்
    ஓய்ஸ்டர் சாஸ் - 1 டீஸ்பூன்
    சிக்கன் சீஸனிங் - 1 டீஸ்பூன்
    சோள மாவு- 2 டீஸ்பூன்
    எள் - தேவையான அளவு
    வெங்காயத்தாள், - தேவையான அளவு

    மாண்டரின் சிக்கன்

    செய்முறை :

    சிக்கன் நெஞ்சுக்கறியை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், வெங்காய தாள், பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், சோள மாவு, சோயா சாஸ், உப்பு மற்றும் ரைஸ் ஒயின் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஒரு மணிநேரம் நன்றாக ஊறிய பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துகொள்ளவும்.

    கடாயை  அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, வெங்காயம், ஓய்ஸ்டர் சாஸ், மற்றும் சிவப்பு மிளகாய், மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை ஊற்றவும்

    பின் அதில் பொரித்த சிக்கன், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    கடைசியாக எள், வெங்கயாத்தாளை தூவி சூடாக பறிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது ஓட்ஸ். இன்று ஓட்ஸ் வைத்து சூப்பரான சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - அரை கப்
    பாசிப்பருப்பு - அரை கப்
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் தூள் - 1/4 மேஜைக்கரண்டி
    வெங்காயம் - 1 சிறியது
    தக்காளி - 1
    கேரட் - 1
    பச்சை பட்டாணி - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    ப.மிளகாய் - 2
    உப்பு - சுவைக்க
    கூடுதல் விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 1/2 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு

    ஓட்ஸ் பாசிப்பருப்பு கிச்சடி

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி. கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பு வேக வைத்து கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்துகொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.

    பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வேக விடவும்.

    காய்கறிகள் நன்று வெந்ததும வேகவைத்த பாசிப்பருப்பு, ஓட்ஸ், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். 8 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ஓட்ஸ் பாசிப்பருப்பு கிச்சடி தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புரதச் சத்து மற்றும் வைட்டமின்கள் (பருப்பு), நார்ச்சத்து (மொச்சை) ஆகியவை கலந்துள்ள சரிவிகித உணவு இது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்,
    பச்சை மொச்சை - அரை கப்,
    துவரம்பருப்பு - அரை கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 2,
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்.

    மொச்சைப் பருப்பு சாதம்

    செய்முறை:

    அரிசியுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்தபின், சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், மொச்சையைச் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மொச்சை வேகும் வரை வதக்கி, கடைசியில் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு, வேகவைத்த சாதம், நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    சூப்பரான மொச்சைப் பருப்பு சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட், பன்னீரில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன. இன்று இவை இரண்டையும் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 200 கிராம்
    பன்னீர் - 100 கிராம்
    கோஸ் கேரட் - தலா 50 கிராம்
    கெட்டி தயிர் - தேன்
    உப்பு - தேவையான அளவு.

    பீட்ரூட் பன்னீர் சாலட்

    செய்முறை:


    பீட்ரூட்டை தோல் நீக்கி வட்டமாக வெட்டி நீராவியில் 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.

    பன்னீரை அதே அளவுக்கு மிக மெல்லியதாக வெட்டி பீட்ரூட் மேல் அடுக்கவும்.

    ஓர் அடுக்கு பீட்ரூட் எனில் அடுத்த அடுக்கு பன்னீர் என்ற ரீதியில் இருக்க வேண்டும்.

    கேரட் கோஸ் போன்றவற்றைச் சீவி அவற்றுடன் கெட்டி தயிர் தேன் சேர்த்துக் கலக்கி சாலட் மீது வைக்கவும்.

    பலன்கள்: பீட்ரூட்டில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன. இரும்புச் சத்தைக் கிரகிக்க வைட்டமின் சி அவசியம். இந்த சாலட்டில் இவை இரண்டும் நிறைவாக உள்ளன. வைட்டமின் சி நீரில் கரையும் வைட்டமின் என்பதால் இதை முடிந்தவரை சமைக்காமல் எடுத்துக்கொள்வது நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×