என் மலர்
சமையல்
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம்,
பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
சர்க்கரைவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி மீடியமான துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும்.
பாசிப்பருப்பையும் குழையாமல் தனியாக வேக வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு சிறிது வெடித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போட்டு வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் தண்ணீர் வடித்துப் போட்டு, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.
இதனுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: சர்க்கரைவள்ளிக்கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம். கரி அடுப்பைப் பயன்படுத்தி சுட்டும் சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மிளகு சீரக இடியாப்பம் செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இடியாப்பம் - 6
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
நல்லெண்ணெய் - சிறிதளவு

செய்முறை
இடியாப்பத்தை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள்,பெருங்காயத்தூள், சிறிது உப்பு போட்டு இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.

உப்பு - தேவையான அளவு

சூப்பரான மிளகு சீரக இடியாப்பம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சேமியாவில் பாயாசம், உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வறுத்த சேமியா - ஒரு கப்,
கெட்டி தயிர் - ஒரு கப்,
அரிசிமாவு - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,

செய்முறை:
சேமியாவை தயிரில் (தண்ணீர் விடாமல்) 20 நிமிடம் ஊறவிடவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது வதக்கி ஊறும் சேமியாவில் சேர்த்துக் கொள்ளவும்.
இதில் மிளகாய்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து, தோசைக்கல்லில் சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தும் மெதுவாக பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
வறுத்த சேமியா - ஒரு கப்,
கெட்டி தயிர் - ஒரு கப்,
அரிசிமாவு - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை:
சேமியாவை தயிரில் (தண்ணீர் விடாமல்) 20 நிமிடம் ஊறவிடவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது வதக்கி ஊறும் சேமியாவில் சேர்த்துக் கொள்ளவும்.
இதில் மிளகாய்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து, தோசைக்கல்லில் சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தும் மெதுவாக பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான்.. சுவையான சேமியா அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கெட்டி சிவப்பு அவல் - அரை கப்,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.
வறுத்து பொடிக்க:

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும்.
நிலக்கடலையை வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

காய்ந்த மிளகாய் - 4.

தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த மிளகு போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுந்து - ஒரு கப்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பல்லு பல்லாக கீறிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவைக்கேற்ப,

செய்முறை:
உளுந்தை 40 நிமிடம் ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்து கொள்ளவும்.
அரை மாவுடன் பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பெரிய பெரிய போண்டாக்களாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
உளுந்தை 40 நிமிடம் ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்து கொள்ளவும்.
அரை மாவுடன் பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பெரிய பெரிய போண்டாக்களாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான மிளகு போண்டா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக் கூடியது.
தேவையான பொருட்கள்
ஸ்வீட் கார்ன் - 1 கப்
எண்ணெய் - தாளிப்பதற்கு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 1
மாதுளை - 1/4 கப்
லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் -1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஸ்வீட் கார்ன், உப்பு, மாதுளை, தேங்காய் துருவல் என எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்துஅதில் நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்.
இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி பரிமாறுங்கள்.
ஸ்வீட் கார்ன் - 1 கப்
எண்ணெய் - தாளிப்பதற்கு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 1
மாதுளை - 1/4 கப்
லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் -1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகு (நுனிக்கியது) - 1 டீஸ்பூன்

செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஸ்வீட் கார்ன், உப்பு, மாதுளை, தேங்காய் துருவல் என எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்துஅதில் நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்.
இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி பரிமாறுங்கள்.
சுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆலு சாட் எப்படி செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - அரை தேக்கரண்டி

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்றாக
பிறகு, தக்காளி சேர்த்து வேக விடவும்.
கூடவே, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தூள், மிளகுத்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
பின்னர், சாட் மசாலா, தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் விடவும்.
இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பரிமாறும்போது, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிஸ்ச்சர் , கொத்தமல்லித்தழை, சாட் மசாலா தூவி, தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தால் அசத்தலாக இருக்கும்..
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை உப்பு - தேவையான அளவு

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்றாக
பிறகு, தக்காளி சேர்த்து வேக விடவும்.
கூடவே, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தூள், மிளகுத்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
பின்னர், சாட் மசாலா, தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் விடவும்.
இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பரிமாறும்போது, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிஸ்ச்சர் , கொத்தமல்லித்தழை, சாட் மசாலா தூவி, தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தால் அசத்தலாக இருக்கும்..
அசத்தலான சுவையில் ஆலு சாட் ரெடி..!.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஸ்வீட் கார்னில் வைட்டமின் ஏ, பி, சி, இ இருக்கிறது. அதேபோல மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:
பாலக் கீரை - ஒரு கட்டு
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
பிரெட் க்ரம்ப்ஸ் - 5 டீஸ்பூன்

செய்முறை:
ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கு நன்றாக வேகவைத்து மசித்துகொள்ளவும்.
பாலக்கீரையை சுத்தம் செய்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
வேக வைத்த சோளத்தை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சோளத்துடன் பாலக்கீரையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர், பிரெட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் சுமார் 20 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு, சிறிது உருண்டைகளாக எடுத்து வடைப்போல் தட்டிக் கொண்டு மீண்டும் பிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், தட்டி வைத்த கலவையை போட்டு வறுத்து எடுக்கவும்.
பாலக் கீரை - ஒரு கட்டு
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
பிரெட் க்ரம்ப்ஸ் - 5 டீஸ்பூன்
எண்ணெய் உப்பு

செய்முறை:
ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கு நன்றாக வேகவைத்து மசித்துகொள்ளவும்.
பாலக்கீரையை சுத்தம் செய்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
வேக வைத்த சோளத்தை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சோளத்துடன் பாலக்கீரையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர், பிரெட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் சுமார் 20 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு, சிறிது உருண்டைகளாக எடுத்து வடைப்போல் தட்டிக் கொண்டு மீண்டும் பிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், தட்டி வைத்த கலவையை போட்டு வறுத்து எடுக்கவும்.
சுவையான ஸ்வீட் கார்ன் பாலக்கீரை கட்லெட் ரெடி..!.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வித்தியாசமான முறையில் செய்யும் இந்த பாறை மீன் குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாறை மீன் - அரை கிலோ
துருவிய தேங்காய் - அரைக் கப்
மஞ்சள்தூள் - 1டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2டேபிள்ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
நல்ல மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1
புளி தண்ணீர் - அரை கப்
பூண்டு - 10 பல்
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
மீனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் அதில் புளித்தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய், நல்ல மிளகு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள், மிளகாய் தூள், பூண்டு, சின்னவெங்காயம், மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த மசாலாவை புளித்தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மீனோடு சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இப்பொழுது இந்த கலவையோடு தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதித்த பின்பு மிதமான சூட்டில் மீதி 10 நிமிடம் வேகவிடவும்.
கடைசியாக சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.

இப்போது சுவையான பாறை மீன் குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளும் வயதானவர்களும் சாப்பிடலாம். சத்தானது. வெந்தயம் சேர்ப்பதால் வயிற்றுக்குக் குளிர்ச்சி. முடக்கத்தான் கீரை, மூட்டு வலி, முழங்கால் வலிகளை நீக்கும். சீறுநீர் தடையின்றி வெளியேறும். எலும்புக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 3 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு கைப்பிடி,
முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) - 2 கப்,
வாழை இலை - 1,
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும்.
இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிவைத்து ஆவியில் வேகவிடவும்.

10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்... சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் வாழை இலை இட்லி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு கொள்ளு மிகவும் நல்லது. இன்று கொள்ளுவை வைத்து சுவையான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 3 கப்
கொள்ளு - ஒரு கப்
நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - ஒரு கப்
பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை - தலா ஒன்று
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
தயிர் - ஒரு கப்
பிரியாணி மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை :
கொள்ளு மற்றும் பாஸ்மதி அரிசியை ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வதக்கவும்.
அடுத்து அதில் பிரியாணி மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கிய பின் தக்காளி, கொத்தமல்லி தழை, கொள்ளு, காய்கறி கலவை தயிர் உப்பு சேர்க்கவும்.
அரை கப் தண்ணீர் விட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை விட 3 மடங்கு தண்ணீர் வைத்து கொதி வந்ததும் ஊறிய அரிசியை வடித்து கொதிக்கும் நீரில் போடவும்.
4 நிமிடம் கொதித்த பின் அரிசியை வடித்து கொள்ளு குருமாவில் போட்டு 15 நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.

எண்ணெய், நெய் - தலா 2 மேசைக்கரண்டி

சூடான கொள்ளு புலாவ் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரத்தசோகையை போக்குவதற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொண்டாலும் சத்துணவுகளை சாப்பிடுவதே சிறந்தது. ரத்தசோகைக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும் உணவுகளில் ‘முட்டை முருங்கை கீரை ஆம்லெட்’ குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெண்களும், சிறுவர்- சிறுமியர்களும் ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அதிக சோர்வு, உற்சாகமின்மை, எதிலும் கவனமற்றபோக்கு போன்றவை தோன்றும். ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது அன்றாட வேலைகளைகூட செய்யமுடியாமல் தடுமாறிப்போகிறார்கள். அவர்களது உடலில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாததால் பல்வேறு நோய்கள் தாக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. ரத்தசோகையை போக்குவதற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொண்டாலும் சத்துணவுகளை சாப்பிடுவதே சிறந்தது. ரத்தசோகைக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும் உணவுகளில் ‘முட்டை முருங்கை இலை ஆம்லெட்’ குறிப்பிடத்தக்கது. அதனை தயார்செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
முருங்கை கீரை - 1 கைப்பிடி
பால் - 2 மேஜைகரண்டி
பெரிய வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 3 மேஜைகரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள், மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
பாலில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைவரும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்குங்கள்.
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவைகளை சிறிதாக நறுக்குங்கள்.
நறுக்கிய பொருட்களோடு தேங்காய் துருவல், சீரகம் போன்றவைகளை சேர்த்து மிக்சியில் போட்டு அரையுங்கள்.
அரைத்த மசாலாவில் முருங்கை இலை, மசாலா தூள் சேருங்கள். அத்துடன் மீதமிருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து மீண்டும் லேசாக மிக்சியில் ஓடவிடுங்கள். அதில் முட்டை கூழையும், உப்பையும் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.

*தோசைக் கல்லை சூடாக்கி கலவையை ஊற்றி ஆம்லெட்டாக சுட்டு சுவையுங்கள்.