search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட்
    X
    மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட்

    மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட்

    கொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக் கூடியது.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் கார்ன் - 1 கப்
    எண்ணெய் - தாளிப்பதற்கு
    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடியளவு
    பச்சை மிளகாய் - 1
    மாதுளை - 1/4 கப்
    லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் துருவல் -1/2 கப்
    உப்பு - சுவைக்கேற்ப
    மிளகு (நுனிக்கியது) - 1 டீஸ்பூன்

    மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட்

    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஸ்வீட் கார்ன், உப்பு, மாதுளை, தேங்காய் துருவல் என எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்துஅதில் நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்.

    எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்.

    இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி பரிமாறுங்கள்.

    சுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×