என் மலர்
சமையல்
நூடுல்ஸ் என்றால் சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் - அரை கப்,
நறுக்கிய வெங்காயம் - அரை கப்,
குடைமிளகாய் - 1
கேரட் - அரை கப்,
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
குடைமிளகாய், கேரட்டை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும்.
அடுத்து அதில் கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும்.
நன்கு கலந்து வந்ததும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

உப்பு - தேவையான அளவு.

சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. இன்று தக்காளி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - கால் கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
ஒரு வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, மற்றொரு வெங்காயத்தை பெரிதாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி… அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி… உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.
தக்காளி - கால் கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள், பால், கொத்தமல்லி தழை - தேவையான அளவு

செய்முறை:
ஒரு வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, மற்றொரு வெங்காயத்தை பெரிதாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி… அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி… உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.
சூப்பரான தக்காளி சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவில் சத்தான சுவையான கேசரி செய்யலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 3/4 கப்
நெய் - 1/2 கப்
சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5 அல்லது 6

செய்முறை:
கால் கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத் தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும்.
மாவு சிறிது நேரத்தில், வெல்லப் பாகுடன் சேர்ந்து கெட்டியாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)
ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 3/4 கப்
நெய் - 1/2 கப்
சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5 அல்லது 6
தண்ணீர் - ஒன்றரை கப்

செய்முறை:
கால் கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத் தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும்.
மாவு சிறிது நேரத்தில், வெல்லப் பாகுடன் சேர்ந்து கெட்டியாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)
ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
இதைக் கத்தியால் கீறி, துண்டங்களாக வெட்டி எடுக்கலாம். அல்லது, அப்படியே ஒரு ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி, காய்கறி சேர்த்து செய்யும் இந்த சூப் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது. இந்த சூப் குடித்தால் நீண்ட நேரம் பசிக்காது. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 2 டேபிள் ஸ்பூன்,
(கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, நூல்கோல், கோஸ், நாட்டுக் காய்கறிகள் அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை கொட்டை, சர்க்கரைவள்ளி கிழங்கு, வெள்ளைப் பூசணி) ஏதாவது கலந்த காய்கறிகள் - 1/4 கப் (பொடியாக நறுக்கவும்),
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
புதினா, கொத்த மல்லித்தழை - சிறிது,
தேங்காய்ப்பால் - 1/2 கப்,
வெண்ணெய் 3 டீஸ்பூன் + எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - 1 சிட்டிகை,

செய்முறை
அரிசியை நன்றாக கழுவி வேக வைக்கவும்.
காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் + எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, கரம் மசாலாத்தூள், புதினா, கொத்த மல்லித்தழை போட்டு வதக்கவும்.
பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.
ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்.
சூப்பரான அரிசி காய்கறி சூப் ரெடி.

உப்பு - தேவைக்கு.

கத்தரிக்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காயை உப்பு போட்டு மசிய வேக வைத்து சூப்பில் சேர்க்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நொறுக்குத்தீனிக்கு மாற்றாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புட்டு வகைகளை வீட்டில் தயாரித்து சுவைக்கலாம். இன்று சுவையான வாழைக்காய் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருடகள் :
வாழைக்காய் - 3
பெ.வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - கால் கப்
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு, உளுந்தம்பருப்பு - சிறிதளவு

செய்முறை:
பெரிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைக்காயை இரண்டாக கீறி அகன்ற பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி குழையவிடாமல் வேகவைத்து எடுக்கவும்.
ஆறியதும் தோலை நீக்கி பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்ததும் உதிர்த்து வைத்த வாழைக்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து இடைவிடாமல் கிளறி வாழைக்காய் வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.
வாழைக்காய் - 3
பெ.வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - கால் கப்
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு, உளுந்தம்பருப்பு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
பெரிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைக்காயை இரண்டாக கீறி அகன்ற பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி குழையவிடாமல் வேகவைத்து எடுக்கவும்.
ஆறியதும் தோலை நீக்கி பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்ததும் உதிர்த்து வைத்த வாழைக்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து இடைவிடாமல் கிளறி வாழைக்காய் வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான வாழைக்காய் புட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகள் சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த புட்டு ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - கால் கிலோ
முளைகட்டிய பச்சை பயறு - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 3
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி மாவுடன் பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து புட்டுமாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.
பின்னர் மாவு கலவையை இட்லி தட்டில் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
ஆறியதும் தேங்காய் துருவல், முளைகட்டிய பச்சை பயறு கலந்து சாப்பிடலாம்.

சூப்பரான புட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை பொடிமாஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சிக்கனை வைத்து சூப்பரான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம்.
தேவையானப் பொருட்கள் :
சிக்கன் துண்டுகள் - அரை கிலோ,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 6,
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகு தூள் - தேவையான அளவு
கரம்மசாலா - தேவையான அளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.
கொத்தமல்லி, ன்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து சூடு ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப,மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், உப்பு போட்டு வதக்கவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் தேங்காய்த் துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சிக்கன் பொடிமாஸ் ரெடி.

தேங்காய் துருவல் விருப்பம் இல்லாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசிப்பருப்பு, பாலக்கீரை சேர்த்து சேர்த்து செய்யும் இந்த ரெசிபியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் சப்பாத்திக்கும் சிறந்த சைடிஷ் இது.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - ஒரு கப்
தயிர் - 2 டீஸ்பூன்
பாலக் கீரை (பசலைக்கீரை) - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை:
பாசிப்பருப்பை மலர வேக வைத்துகொள்ளவும்.
பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் சுத்தம் செய்த கீரை, துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும்.
பின்பு தயிரைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
பாசிப்பருப்பு - ஒரு கப்
தயிர் - 2 டீஸ்பூன்
பாலக் கீரை (பசலைக்கீரை) - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை மலர வேக வைத்துகொள்ளவும்.
பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் சுத்தம் செய்த கீரை, துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும்.
பின்பு தயிரைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
இது சப்பாத்திக்கு சிறந்த சைட்டிஷ்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாதம், நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தனியா தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலந்து, ஃபிரிட்ஜில் 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்ததாக பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டுங்கள்.
அடுத்ததாக தனியா பொடி, இடித்த மிளகுப் பொடி சேர்த்து சிறு தீயில் கிளறி விடவும்.
இறுதியாக 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.
பின் தண்ணீர் வற்றி சிக்கன் மென்மையாக வேகும் வரை கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.
பரிமாறும்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை தூவி பிரட்டிவிட்டுப் பரிமாறுங்கள்.

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுக்கும். அவர்களுக்கு கீரையை இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
பருப்புக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
பூண்டுப் பல் - 4

செய்முறை:
பருப்பு கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் வாணலியில் தனியா பட்டை கிராம்பு பூண்டு சேர்த்து வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கீரை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் உப்பு, அரைத்த பொடி சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
சூப்பரான பருப்பு கீரை ஃப்ரைடு ரைஸ் ரெடி.

எந்த கீரையிலும் இந்த ரெசிபியை செய்யலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் குடைமிளகாய் பொரியல். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
குடைமிளகாய் - 1
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாய், காளாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்கு வெந்தது தண்ணீர் வற்றியதும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
காளான் - 250 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
குடைமிளகாய் - 1
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாய், காளாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்கு வெந்தது தண்ணீர் வற்றியதும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான காளான் குடைமிளகாய் பொரியல் ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையில் இந்த சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியும் இருக்கலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆலிவ் - 1/2 கப்
சிவப்பு குடைமிளகாய் - 1
பச்சை குடைமிளகாய் - 2
வெள்ளரிக்காய் - 1
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்க
ஆலிவ் ஆயில் - சிறிதளவு

செய்முறை :
வெள்ளரிக்காய், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு தட்டில் வட்டமான வெட்டிய குடைமிளகாயை வைத்து கொள்ளவும்.
அதன் மேலே வெள்ளரியையும் அதே போல வைக்கவும்.
அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை தூவி விடவும்.
அதன்மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.
ஆலிவ் - 1/2 கப்
சிவப்பு குடைமிளகாய் - 1
பச்சை குடைமிளகாய் - 2
வெள்ளரிக்காய் - 1
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்க
ஆலிவ் ஆயில் - சிறிதளவு
மிளகு - சுவைக்க

செய்முறை :
வெள்ளரிக்காய், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு தட்டில் வட்டமான வெட்டிய குடைமிளகாயை வைத்து கொள்ளவும்.
அதன் மேலே வெள்ளரியையும் அதே போல வைக்கவும்.
அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை தூவி விடவும்.
அதன்மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.
பரிமாறுவதற்கு முன் அதன் மேல் கலந்து வைத்த ஆலிவ் கலவையை சேர்த்து பரிமாறவும்.