என் மலர்

  ஆரோக்கியம்

  சில்லி கார்லிக் நூடுல்ஸ்
  X
  சில்லி கார்லிக் நூடுல்ஸ்

  ஹோட்டல் ஸ்டைல் சில்லி கார்லிக் நூடுல்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நூடுல்ஸ் என்றால் சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  நூடுல்ஸ் - அரை கப்,
  நறுக்கிய வெங்காயம் - அரை கப்,
  குடைமிளகாய் - 1
  கேரட் - அரை கப்,
  இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
  கொத்தமல்லி - சிறிதளவு,
  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
  உப்பு - தேவையான அளவு.

  சில்லி கார்லிக் நூடுல்ஸ்

  செய்முறை:

  நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

  குடைமிளகாய், கேரட்டை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

  கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும்.

  அடுத்து அதில் கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  அனைத்தும் நன்றாக வதங்கியதும் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும்.

  நன்கு கலந்து வந்ததும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

  சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×