என் மலர்tooltip icon

    சமையல்

    மீனில் வறுவல், பிரியாணி, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    புலா‌வ் அரிசி - ½ கிலோ
    துண்டு மீன் - கால் கிலோ
    வெங்காயம் - 4
    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
    மல்லித்தூள்,
    ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - ½ ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்,
    சீரகம் -1 ஸ்பூன்
    எலுமி‌ச்சை - 1
    கொத்தமல்லி இலை - 1 சிறிதளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - சிறிதளவு

    செய்முறை

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு இதனுடன் மல்லித்தூள், சோம்பு, ‌சீரகத்தூள், எலுமிச்சம் சாற்றை ஊற்றி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்த மீன் துண்டுகளைப் எண்ணெயில் போட்டு வேகவிட்டு  எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் ஊற வைத்த அரிசி, உ‌ப்பு, ‌மிளகா‌ய்த் தூள், கொத்தமல்லி இலை மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு மேலாக மீனை வைத்து தம் போட்டு இறக்கினால் மீன் புலாவ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வாழைப்பூவில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இன்று நாம் வாழைப்பூவில் சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பூ - 1
    உளுத்தம் பருப்பு - 100 கிராம்
    பச்சை பயறு - 100 கிராம்
    புழுங்கல் அரிசி - 200 கிராம்
    காய்ந்த மிளகாய் - 3
    உப்பு - தேவைக்கு
    பெருங்காய பொடி - 1/2 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உளுத்தம் பருப்பு, பச்சைபயறு, அரிசி போன்றவைகளை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள்.

    பின்பு அத்துடன் காய்ந்த மிளகாயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.

    நறுக்கிய வாழைப்பூவை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்திடுங்கள்.

    அத்துடன் உப்பு, பெருங்காய பொடி கலந்து தேவையான அளவு நீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வாழைப்பூ அடை தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வாழைப்பூ நோய் தொற்று வராமல் பாதுகாக்கும். சர்க்கரை நோய், ரத்தசோகை ஏற்படாமலும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பூ - 1
    சின்ன வெங்காயம் - 1 கப்
    மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்
    கல் உப்பு - தேவைக்கேற்ப
    நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
    நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
    கடுகு - ½ ஸ்பூன்
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
    உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - ½ ஸ்பூன்
    கடலை பருப்பு - ½ ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    தனியா தூள் - ½ ஸ்பூன்

    செய்முறை:

    வாழைப்பூவின் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து பருப்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    பின்பு கடலை பருப்பு, தனியா தூள், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் பி.மிளகாய், சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை கிளறவும்.

    அதன் பின்னர் வேகவைத்த வாழைப்பூவை போட்டு நன்றாக கிளறி 5 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வீட்டிலேயே விதவிதமாக தயாரித்து ருசிக்கலாம். இன்று அரிசி ரவையில் சத்தான கொத்தமல்லி உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
    தேவையான பொருட்கள் :

    அரிசி ரவா - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    புளி - நெல்லிக்காய் அளவு
    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -1 டீஸ்பூன் வீதம்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், புளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் அரைத்த விழுதை கொட்டவும்.

    அதுபோல் நெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து அரிசி ரவாவை கொட்டி லேசாக கிளறி, கால் மணி நேரம் மூடி வைத்து வேகவிட்டு இறக்கவும்.

    ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து ருசிக்கலாம்.

    சூப்பரான கொத்தமல்லி கார உருண்டை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வருவது கடலை மிட்டாய். இன்று இந்த கடலை மிட்டாயை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெல்லம் - 1 கிலோ
    நிலக்கடலை - 200 கிராம்
    தண்ணீர் - வெல்லப் பாகை எடுக்க
    உப்பு சிறிதளவு
    தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி - தேவைப்பட்டால்

    செய்முறை

    நிலக்கடலையை வெறும் சட்டியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

    வெல்லப்பாகை எடுக்க, வெல்லத்தை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகை ஆற விடவும்.

    பாகு நன்றாக திக்காக இருக்கவேண்டும். அதனால், காய்ச்சிய பாகை மீண்டும் காய்ச்சவேண்டும்.

    இதனுடன் வறுத்த கடலையை சேர்த்து கிளறவும்.

    தேவைப்பட்டால், இதில் ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக்கொள்ளலாம்.

    மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை தட்டையான தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

    அசத்தலான கடலை மிட்டாயை சுவைக்கத் தயாராகுங்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும், எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது என்பது நம்மில் பலபேருக்குத் தெரிவதில்லை. வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும் பல உணவுகளைத் தயாரிக்கலாம். சரி, சப்பாத்தி செய்வது எப்படி? பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    தினை மாவு - ஒரு கப்
    கோதுமை மாவு - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள்.

    சத்தான தினை மற்றும் கோதுமை மாவு இணைந்த சப்பாத்தி தயார்!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மதுரை எனறால் நினைவுக்கு வருபவையில் ஜிகர்தண்டாவும் ஓன்று. இன்று வீட்டிலேயே சுவையான மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பால் - 1 தேக்கரண்டி
    பாதாம் பிசின் - 2 தேக்கரண்டி
    கடல் பாசி / பாலாடை - தேவையான அளவு
    சர்பத் - 4 தேக்கரண்டி
    சர்க்கரை - தேவையான அளவு
    ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்
    ஐஸ்கட்டி - தேவையான அளவு

    ஜிகர்தண்டா தேவையான பொருட்கள்

     செய்முறை

    பாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும்.

    பின்னர் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும்.

    பாதாம் பிசினை கழுவி முதல் நாள் இரவே அது முழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

    ஒரு கண்ணாடி தம்ளரில் குளிரவைத்த பால் கலவையை ஊற்ற வேண்டும்.

    அதன் பிறகு, ஊறி இருக்கும் பாதாம் பிசினை அதில் ஒரு தேக்கரண்டி விட வேண்டும்.

    அதில் வேண்டிய அளவு சர்பத் ஊற்றி, நமக்குத் தேவையான ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம் போட வேண்டும்.

    அதன்மேல் கொஞ்சம் பாலாடையினை மிதக்க விட்டால், ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
    தேவையான பொருட்கள்:

    சிவப்பு குடை மிளகாய் - 2
    லக்சா பேஸ்ட் (laksa paste) - 150 கிராம்
    மிளகு - தேவையான அளவு
    மிளகு தூள்- தேவையான அளவு
    உப்பு -  சுவைக்கேற்ப
    வெங்காயம் - 100 கிராம்
    பூண்டு - 25 கிராம்
    சமையல் கிரீம் (Cooking Cream) - 200 மிலி
    தேங்காய் பால் பவுடர் - 200 கிராம்
    வெண்ணெய் - சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடை மிளகாய்களை உப்பு, மிளகு மற்றும் கிரீம் ஆகியவற்றால் சீசன் செய்து, 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.

    அதன் தோல் மற்றும் விதைகளை அகற்றி விட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    சூப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருக்கியதும், வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் அரைத்த குடைமிளகாயைச் சேர்த்து, அதனுடன் லக்சா பேஸ்ட், தேங்காய் பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து, கொதிக்க வைத்து, மிதமானச் சூட்டில் வைக்கவும்.

    உப்பு, மிளகு தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு வித்தியாசமான வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் தக்காளி பாத் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ
    அரிசி - 2 கப்
    பெரிய வெங்காயம் - 5
    இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சோம்பு பிரியாணி இலை - தாளிக்க
    கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
    பிரியாணி மசாலா - ஒரு ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
    கொத்தமல்லி மற்றும் புதினா - ஒரு கைப்பிடி அளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டுதாளித்த பின்னர்  வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்

    இப்போது நறுக்கி வைத்திருக்கும் தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி நன்கு குழைய வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

    இப்போது இதில் மிளகாய்த்தூள், கரம்மசாலா, பிரியாணி மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்

    மசாலா நன்கு வதங்கியதும் இப்போது அரிசியை இதில் சேர்த்து கிளற வேண்டும்

    இப்போது அரிசி வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீதமுள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.

    இப்போது சுவையான தக்காளி பாத் தயார்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்த வகையில் இன்று கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கேரட் - 2
    ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
    வெங்காயம் - 1
    சோள மாவு - 2 ஸ்பூன்
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    முட்டை - 3
    மிளகுத்தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 4 கப்

    செய்முறை

    முதலில் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    கேரட், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கேரட், வெங்காயம், ஸ்வீட் கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

    அனைத்தும் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்பு உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

    இப்போது அதில் முட்டைகள் உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்

    கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மீன் பிரியாணி செய்வதும் மிக எளிதான ஒன்றுதான். பிரியாணியை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு மீன் பிரியாணியும் கட்டாயம் பிடிக்கும்.
    தேவையான பொருள்கள்:

    வஞ்சிரம் மீன் துண்டுகள் - 1 கிலோ
    பாஸ்மதி அரிசி - கிலோ (20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்)

    மசாலா பேஸ்ட் செய்யத் தேவையானவை:

    இஞ்சி - பெரிய துண்டு
    பூண்டு - 8 பல்
    பச்சை மிளகாய் - 3
    காய்ந்த மிளகாய் - 3
    துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
    தக்காளி - 3
    மஞ்சள் பொடி - தேக்கரண்டி
    காரப்பொடி - 1 தேக்கரண்டி
    தனியாப்பொடி - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி, புதினா - 1 கட்டு
    தேங்காய் பால் - லிட்டர்

    மீனை ஊறவைக்கத் தேவையான பொருள்கள்:

    மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
    காரப்பொடி - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    வதக்கத் தேவையான பொருள்கள்:

    நெய் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    பிரிஞ்சு இலை - 3
    பட்டை - 2 துண்டுகள்
    கிராம்பு - 10
    ஏலக்காய் - 4
    வெங்காயம் (நடுத்தர அளவு) - 5

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் இவற்றைப் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து மையாக அரைக்க வேண்டும்.

    மீனை ஊறவைக்கத் தேவையான பொருள்களுடன் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    வாய் அகலமாக உள்ள குக்கரை பிரியாணி செய்ய எடுத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரில் நெய் இரண்டு தேக்கரண்டி, எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி அது காய்ந்ததும் அதில் பிரிஞ்சு இலை, பட்டை, கிராம்பு மற்றும் லேசாகத் தட்டிய ஏலக்காயை போட்டு அவை பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு அவை பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த  இஞ்சி, பூண்டு விழுதை வெங்காயத்துடன் சேர்த்து கலந்து பச்சை வாசம் போகும் வரை அடிப்பிடிக்காமல் வதக்க வேண்டும்.

    அடுத்து இத்துடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

    பின்பு மஞ்சள் பொடி, காரப்பொடி, தனியாப்பொடி, உப்பு இவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கழுவி நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளையும் இத்துடன் சேர்த்து வதக்க வேண்டும்.

    மசாலாவானது தயாரானவுடன் வஞ்சிர மீன் துண்டுகளை மசாலாவின் மீது வைத்து மிகவும் கவனமாக மீன் துண்டுகள் உடையாமல் கிளற வேண்டும். பிரியாணி செய்வதற்கு மீன் துண்டுகளை கனமான துண்டுகளாக வாங்கினால் அவை உடையாது. அதேபோல் அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கக் கூடாது.

    ஊற வைத்த பாஸ்மதி அரிசியை முக்கால் வேக்காடு வேகவைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசியை வேகவைக்கும் பொழுது 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றினால் சாதமானது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

    முக்கால் பாகம் வெந்த அரிசியை மீன் துண்டுகளின் மீது பரவலாகப் போட்டு தேங்காய்ப் பாலை ஊற்றி மிகவும் நிதானமாகவும், கவனமாகவும் கிளற வேண்டும். பின்பு குக்கர் மூடியை மூடி மேலே ஆவி வந்தபின் குக்கர் வெயிட்டைப் போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைக்க வேண்டும்.

    பின்பு தீயை அணைத்து விட்டு ஆவி இறங்கிய பிறகு குக்கர் மூடியைத் திறந்து பிரியாணியை வேறு ஒரு அகலமான பாத்திரத்திலோ அல்லது ஹாட் பாக்ஸிலோ மாற்றி விட வேண்டும்.

    இப்பொழுது சூடான, சுவையான மீன் பிரியாணி தயார்.

    மீன் பிரியாணிக்கு வெங்காயத் தயிர் பச்சடி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி மற்றும் கத்தரிக்காய் குழம்பு போன்றவை தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மூக்கிரட்டை கீரை கொண்டு செய்யப்படும் சூப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை குடிப்பது மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள்:

    மூக்கிரட்டை கீரை - 2 கையளவு
    பூண்டு - 2 பல்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பூண்டை தட்டிக்கொள்ளவும்.

    மூக்கிரட்டை கீரையை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    கீரையானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    கடைசியில் அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.

    மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×