என் மலர்tooltip icon

    சமையல்

    சிக்கன், காளான் பெப்பர் பிரை சாப்பிட்டிருப்பீர்கள். அந்த வகையில் இன்று பன்னீரை வைத்து அட்டகாசமான பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்
    சோளமாவு - 25 கிராம்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு நறுக்கியது - 25 கிராம்
    வெங்காயம் - 1 பெரியது
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    நொறுக்கிய மிளகு - 20 கிராம்
    உப்பு - சுவைக்கேற்ப
    கொத்தமல்லி - ஒரு கட்டு
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை


    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீர் துண்டுகளை, சோளமாவில் நனைத்து, எண்ணெயில் போட்டு நன்குப் பொரித்து கொள்ளவும். எண்ணெயில் இருந்து எடுத்து, கிச்சன் டவலில் வைத்து, எண்ணெயை வடிக்கவும்.

    வேறொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

    வெங்காயம், கறிவேப்பிலைகள், பச்சை மிளகாய் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வறுத்த பன்னீர் துண்டுகள், மிளகு தூள், எலுமிச்சை சாறு சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான பன்னீர் பெப்பர் பிரை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    இஞ்சி ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்தாக பயன்பட்டு வருகிறது. இந்த இஞ்சியில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இஞ்சி - 1/2 கப்
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 5
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    புளி - ஒரு கோலி அளவு
    வெல்லம் - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    கடுகு - சிறிதளவு

    செய்முறை

    இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீல் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அதே கடாயில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

    ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

    சுவையான இஞ்சி சட்னி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நாண், சப்பாத்தி, பூரி, புலாவ், இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காளான் குருமா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    காளான் - 250 கிராம்
    சின்ன வெங்காயம் - 150
    தக்காளி - 2
    தேங்காய் - 1/2 மூடி
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    மல்லிதூள், மிளகாய்தூள் - தலா 2 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
    சோம்பு - கால் ஸ்பூன்
    கசகசா - கால் ஸ்பூன்
    பட்டை இலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு,எண்ணை - தேவைக்கேற்ப

    செய்முறை  :

    காளான்களைக் கழுவிச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கசாகசா-சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    தேங்காய், மிளகு, சீரகம் முன்றையும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை போட்டுதாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி நன்கு குழை வதங்கியதும் அரைத்த பட்டை கசாகசா சேர்த்து நன்க வதக்கி அதனுடன் மசாலா தூள்களையும் போட்டு வதக்கி காளான் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் சேர்த்து குக்கரில் 2 விசில் போட்டு இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.        

    சூப்பரான காளான் குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் தினை, பாசிப்பருப்பு சேர்த்து பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - ஒரு கப்,
    தினை அரிசி - முக்கால் கப்,
    சின்ன வெங்காயம் - 10,
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப),
    கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும்.

    மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும்.

    தோசைக்கல்லை சூடாக்கி,  அரைத்து வைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுத்தால்... சத்தான தினை பெசரட் தயார்!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு சாக்லேட் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். கடையில் கிடைக்கும் ரிச் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்
    கோக்கோ பவுடர் - 2/3 கப்
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    வெண்ணெய், அடித்தது - 3/4 கப் 
    பொடித்த சர்க்கரை -  1 3/4 கப்
    வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - 2 தேக்கரண்டி
    பெரிய முட்டை - 1
    சூடான நீர் - 1 கப்

    செய்முறை:

    மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போடவும்.

    வெண்ணெயை நன்கு அடித்து, சர்க்கரை, வெணிலா எக்ஸ்ட்ராக் ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து, கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கவும்.
    அடுத்து அதில் முட்டையைச் சேர்த்து, மீண்டும் அடித்து கலக்கவும்.

    மாவு கலவையை மெதுவாக சேர்த்து, தொடர்ந்து அடித்துக் கலக்கவும், தேவையான பதம் கிடைக்க அவ்வப்போது சுடுநீரைச் சேர்க்கவும். தனித்தனி பாத்திரத்தில் பரப்பி வைக்கவும்.

    சுமார் 25 முதல் 35 நிமிடங்களுக்கு அல்லது மரக்குச்சியை நுழைத்து எடுக்கும்போது, ஒட்டாமல் வரும் வரைக்கும் பேக் செய்யவும். 15 நிமிடங்களுக்கு குளிர வைக்கவும்.

    முழுமையாக ஆறிய பிறகுதான் ரிச் சாக்லெட் கேக் சரியான பதத்தில் இருக்கும்.

    ஆறிவிட்டதை உறுதி செய்வதற்காக திருப்பி வைத்து சிறிது நேரம் வைத்திருக்கவும். இதோ யம்மியான கேக் தயார்.

    குறிப்பு: க்ரீம் பதம் வரும் வரை நன்கு கலக்க மறக்க வேண்டாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வெண்டைக்காயில் கலோரி குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதனால் கொழுப்பை குறைக்க விரும்புகிறவர்களும், வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    பிஞ்சு வெண்டைக்காய் - 7,
    உப்பு - சிறிது,
    இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டீஸ்பூன்,
    துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்.

    அலங்கரிக்க

    கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் - சிறிது,

    செய்முறை

    கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கிய பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான வெண்டைக்காய் சூப் ரெடி.

    முதுகுவலி, மூட்டுவலி, வாத நோய், உடல் சோர்வுகளுக்கு நிவாரணமாக அமைவது வெண்டைக்காய் சூப். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இது ஏற்றது. வெண்டைக்காயில் கொழுப்பு இல்லை. பெருமளவு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் வயதானவர்களும் இந்த சூப்பை பருகலாம்.

    உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை வெண்டைக்காய் அதிகரிக்கிறது. வயிற்றுப் புண்ணால் அவதிப்படுகிறவர்கள் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட வேண்டும். கரைந்து போகாத நார்ச்சத்து வெண்டைக்காயில் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதில் இருக்கும் பீட்டாகரோட்டின் சத்தால் கண் பார்வைத் திறனும் மேம்படும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    புழுங்கல் அரிசி - கால் கப்
    உளுந்து - அரை கப்
    ஆய்ந்த முருங்கை இலை - 1 கைப்பிடி
    எள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    உளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
    தேவையான பொருட்கள்:

    பேபி உருளைக்கிழங்கு - 2 கப்
    தயிர் - 2 கப்
    ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    செய்முறை:

    பேபி உருளைக்கிழங்கை 2 ஆக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்ட அதனோடு மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் (வெங்காயத்தாள், கொத்தமல்லி தவிர) கலந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    பரிமாறும் போது வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    சுவையான பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    அசைவ உணவு வகைகளில் மீன் தனக்கென நீங்கா இடம் பிடித்திருக்கும் மிகச்சிறந்த உணவு. மீன் வகைகளில் ஒன்றான கணவாய் மீனை பயன்படுத்தி யாழ்ப்பாண முறையில் பிரட்டல் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    கணவாய் மீன் - 1 கிலோ
    வெங்காயம் - 2
    பூண்டு - 10 பல்
    தக்காளி - 2
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    தேங்காய் பால் - 1 கப்
    ப.மிளகாய் - 5
    கடுகு - 2 தேக்கரண்டி
    சோம்பு  - 2 தேக்கரண்டி
    வெந்தயம் - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கணவாய் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளி இரண்டையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு, வெந்தயம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் ப .மிளகாய், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் சிறிய துண்டுகளாக வெட்டிய கணவாய் மீன், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி பின் 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் வேகவைத்து தேங்காய் பால் வற்றியதும் இறக்கினால் சுவையான கணவாய் பிரட்டல் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சம்பா கோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சம்பா கோதுமையில் சத்தான சுவையான பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சம்பா ரவை - 1/2 கப்,
    கருப்பு உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
    வெந்தயம் - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    வெங்காயம் - 1,
    ப.மிளகாய் - 2,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
    எண்ணெய் - 2 டீஸ்பூன் மற்றும் பணியாரம் செய்வதற்கு தேவையான அளவு.

    செய்முறை

    ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சம்பா கோதுமை, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.

    உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் புளிக்க விடவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

    பணியார கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக விடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பி விடவும். இரண்டுபுறமும் வெந்தவுடன் சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சம்பா கோதுமை பணியாரம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ப்ரோக்கோலியில் சூப், பொரியல், சாலட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான வித்தியாசமான சுவையில் ப்ரோக்கோலி பகோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ப்ரோக்கோலி - 1 மற்றும் 1\2 கப்
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு- 1 மேசைக்கரண்டி
    மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
    பெருங்காயப் பொடி -1 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா -1\4 தேக்கரண்டி
    சுவைக்கேற்ப உப்பு
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை:

    ப்ரோக்கோலிia சுத்தம் செய்து, வெட்டி, பூக்களாகப் பிரிக்கவும். பூக்கள் பெரியதாக இருந்தால், சிறிதாக வெட்டவும்.

    இதனை சூடான நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீரைச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    வறுப்பதற்கு தேவையான எண்ணெயை கடாயில் ஊற்றி சூடாக்கவும்.

    ஒவ்வொரு பூவாக மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். நன்றாகப் பொரித்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ப்ரோக்கோலி பகோடா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    துளசியை நாம் தினமும் சாப்பிடுவதின் மூலம் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
    தேவையான பொருட்கள்

    துளசி - 1 கப்
    புதினா - ½ கப்
    புளி - எலுமிச்சை அளவு
    பச்சைமிளகாய் - 2
    காய்ந்த மிளகாய்  - 2
    மிளகு - சிறிதளவு
    உளுத்தம்பருப்பு - ½ ஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    பாதம் பருப்பு  - 5
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை 

    முதலில் துளசியையும் புதினாவையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுத்தம்பருப்பு ,பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் பூண்டு, மிளகு, புளி,பாதாம் சேர்த்து வதக்கவும்.

    நன்கு வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள புதினாவை சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அடுப்பை அனைத்து வதக்கிய பொருட்கள் சிறிது ஆறியவுடன் அதில் துளசியை சேர்த்து வதக்கவும்.

    பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் ஆரோக்கியம் தரும் துளசி துவையல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×