search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தக்காளி பாத்
    X
    தக்காளி பாத்

    சூப்பரான மதிய உணவு தக்காளி பாத்

    குழந்தைகளுக்கு வித்தியாசமான வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் தக்காளி பாத் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ
    அரிசி - 2 கப்
    பெரிய வெங்காயம் - 5
    இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சோம்பு பிரியாணி இலை - தாளிக்க
    கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
    பிரியாணி மசாலா - ஒரு ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
    கொத்தமல்லி மற்றும் புதினா - ஒரு கைப்பிடி அளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டுதாளித்த பின்னர்  வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்

    இப்போது நறுக்கி வைத்திருக்கும் தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி நன்கு குழைய வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

    இப்போது இதில் மிளகாய்த்தூள், கரம்மசாலா, பிரியாணி மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்

    மசாலா நன்கு வதங்கியதும் இப்போது அரிசியை இதில் சேர்த்து கிளற வேண்டும்

    இப்போது அரிசி வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீதமுள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.

    இப்போது சுவையான தக்காளி பாத் தயார்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×