search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மீன் பிரியாணி
    X
    மீன் பிரியாணி

    சூடான, சுவை நிறைந்த மீன் பிரியாணி

    மீன் பிரியாணி செய்வதும் மிக எளிதான ஒன்றுதான். பிரியாணியை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு மீன் பிரியாணியும் கட்டாயம் பிடிக்கும்.
    தேவையான பொருள்கள்:

    வஞ்சிரம் மீன் துண்டுகள் - 1 கிலோ
    பாஸ்மதி அரிசி - கிலோ (20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்)

    மசாலா பேஸ்ட் செய்யத் தேவையானவை:

    இஞ்சி - பெரிய துண்டு
    பூண்டு - 8 பல்
    பச்சை மிளகாய் - 3
    காய்ந்த மிளகாய் - 3
    துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
    தக்காளி - 3
    மஞ்சள் பொடி - தேக்கரண்டி
    காரப்பொடி - 1 தேக்கரண்டி
    தனியாப்பொடி - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி, புதினா - 1 கட்டு
    தேங்காய் பால் - லிட்டர்

    மீனை ஊறவைக்கத் தேவையான பொருள்கள்:

    மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
    காரப்பொடி - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    வதக்கத் தேவையான பொருள்கள்:

    நெய் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    பிரிஞ்சு இலை - 3
    பட்டை - 2 துண்டுகள்
    கிராம்பு - 10
    ஏலக்காய் - 4
    வெங்காயம் (நடுத்தர அளவு) - 5

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் இவற்றைப் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து மையாக அரைக்க வேண்டும்.

    மீனை ஊறவைக்கத் தேவையான பொருள்களுடன் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    வாய் அகலமாக உள்ள குக்கரை பிரியாணி செய்ய எடுத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரில் நெய் இரண்டு தேக்கரண்டி, எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி அது காய்ந்ததும் அதில் பிரிஞ்சு இலை, பட்டை, கிராம்பு மற்றும் லேசாகத் தட்டிய ஏலக்காயை போட்டு அவை பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு அவை பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த  இஞ்சி, பூண்டு விழுதை வெங்காயத்துடன் சேர்த்து கலந்து பச்சை வாசம் போகும் வரை அடிப்பிடிக்காமல் வதக்க வேண்டும்.

    அடுத்து இத்துடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

    பின்பு மஞ்சள் பொடி, காரப்பொடி, தனியாப்பொடி, உப்பு இவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கழுவி நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளையும் இத்துடன் சேர்த்து வதக்க வேண்டும்.

    மசாலாவானது தயாரானவுடன் வஞ்சிர மீன் துண்டுகளை மசாலாவின் மீது வைத்து மிகவும் கவனமாக மீன் துண்டுகள் உடையாமல் கிளற வேண்டும். பிரியாணி செய்வதற்கு மீன் துண்டுகளை கனமான துண்டுகளாக வாங்கினால் அவை உடையாது. அதேபோல் அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கக் கூடாது.

    ஊற வைத்த பாஸ்மதி அரிசியை முக்கால் வேக்காடு வேகவைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசியை வேகவைக்கும் பொழுது 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றினால் சாதமானது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

    முக்கால் பாகம் வெந்த அரிசியை மீன் துண்டுகளின் மீது பரவலாகப் போட்டு தேங்காய்ப் பாலை ஊற்றி மிகவும் நிதானமாகவும், கவனமாகவும் கிளற வேண்டும். பின்பு குக்கர் மூடியை மூடி மேலே ஆவி வந்தபின் குக்கர் வெயிட்டைப் போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைக்க வேண்டும்.

    பின்பு தீயை அணைத்து விட்டு ஆவி இறங்கிய பிறகு குக்கர் மூடியைத் திறந்து பிரியாணியை வேறு ஒரு அகலமான பாத்திரத்திலோ அல்லது ஹாட் பாக்ஸிலோ மாற்றி விட வேண்டும்.

    இப்பொழுது சூடான, சுவையான மீன் பிரியாணி தயார்.

    மீன் பிரியாணிக்கு வெங்காயத் தயிர் பச்சடி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி மற்றும் கத்தரிக்காய் குழம்பு போன்றவை தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×