search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோவில்பட்டி கடலை மிட்டாய்
    X
    கோவில்பட்டி கடலை மிட்டாய்

    வீட்டிலேயே செய்யலாம் கோவில்பட்டி கடலை மிட்டாய்

    கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வருவது கடலை மிட்டாய். இன்று இந்த கடலை மிட்டாயை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெல்லம் - 1 கிலோ
    நிலக்கடலை - 200 கிராம்
    தண்ணீர் - வெல்லப் பாகை எடுக்க
    உப்பு சிறிதளவு
    தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி - தேவைப்பட்டால்

    செய்முறை

    நிலக்கடலையை வெறும் சட்டியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

    வெல்லப்பாகை எடுக்க, வெல்லத்தை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகை ஆற விடவும்.

    பாகு நன்றாக திக்காக இருக்கவேண்டும். அதனால், காய்ச்சிய பாகை மீண்டும் காய்ச்சவேண்டும்.

    இதனுடன் வறுத்த கடலையை சேர்த்து கிளறவும்.

    தேவைப்பட்டால், இதில் ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக்கொள்ளலாம்.

    மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை தட்டையான தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

    அசத்தலான கடலை மிட்டாயை சுவைக்கத் தயாராகுங்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×