என் மலர்tooltip icon

    சமையல்

    இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு குருமா. எளியமுறையில் செய்யக்கூடிய இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2

    அரைக்க வேண்டிய பொருட்கள்:

    சோம்பு - அரை ஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - அரை கப்
    இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    தாளிக்க ::

    எண்ணெய் - தேவையான அளவு
    பட்டை - 2 கிராம்பு-2

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த, பின்னர் அதில் பச்சை மிளகாய் , வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    உருளைக்கிழங்கு குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சிறுதானியங்களில் சிறப்புமிக்க சாமையில் கஞ்சி தயாரிப்பது எளிது. இதில் காய்கறிகளும், மசாலாவும் கலந்தால், சுவை இரட்டிப்பாகும். காரசாரமான சுவைமிக்க சாமை கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சாமை -  அரை கப்
    பயத்தம் பருப்பு  -  அரை கப்
    வெங்காயம் -  2
    பச்சை மிளகாய்  -  2
    கேரட், பீன்ஸ் -  1/4 கப்
    இஞ்சி-பூண்டு விழுது -  1/2 டீஸ்பூன்
    தேங்காய் பால்  -  100 மில்லி
    மஞ்சள் தூள்  -  1/4 டீஸ்பூன்
    மிளகுத் தூள்  -  1/2 டீஸ்பூன்
    தனியாத்தூள்  -  1/4 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு  -  1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய்  -  தேவைக்கேற்ப

    தாளிக்க -  பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு  -  சிறிதளவு

    செய்முறை:

    சாமை அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.

    பயத்தம் பருப்பை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியபின், அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு பயத்தம்பருப்பு, சாமை, மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

    பிரஷர் குறைந்தும், மூடியைத் திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து, உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான சாமை கஞ்சி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் ஃபார்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    போன்லெஸ் சிக்கன் (தோல் நீக்கியது) - 250 கிராம்

    மசாலா தயாரிக்க:

    எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
    பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 மேஜைக்கரண்டி
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    சுவைக்க - உப்பு

    கோட்டிங் செய்ய:

    பிரெட் க்ரம்ப் - 1/2 கப்
    முட்டை - 2
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - வறுக்க

    செய்முறை

    சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும். ஒவ்வொரு சிக்கன் துண்டும் 50 கிராம் அளவு இருக்க வேண்டும்.

    ஒரு பௌலில் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.

    இந்த மசாலா கலவையை சிக்கனில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.

    அதேநேரம் மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

    மசாலா தடவிய சிக்கனை எடுத்து பிரெட் க்ரம்ப் மற்றும் முட்டையில் தொட்டு எடுத்து வைக்கவும்.

    பின் இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறி சேர்த்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை அரிசி  - 1 கப்
    துவரம் பருப்பு - 1 கைப்பிடி, 
    மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1
    காய்கறிக் கலவை - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி), 
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1 , 
    கறிவேப்பிலை - 1 இனுக்கு,
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    கடுகு - 1/2 டீஸ்பூன், 
    உளுந்து - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    ப.மிளகாய், வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம் பருப்பை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    தினை அரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும் மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை சேர்த்து வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.

    தண்ணீர் கொதிக்கும்போது தினை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான தினை அரிசி காய்கறி கிச்சடி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சாக்லேட் பிரியர்களுக்கு சாக்லேட் மார்குயுஸ் மிகவும் பிடித்தமானது. கடையில் வாங்கி சாப்பிட்ட சாக்லேட் மார்குயுஸை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டார்க் சாக்லேட் - 600  கிராம்
    சர்க்கரை -  175 கிராம்
    முட்டையின் மஞ்சள் கரு -  6 துண்டுகள்
    முட்டை -  6 துண்டுகள்
    கோகோ பவுடர் -  70 கிராம்
    லிட்டர் காபி -  10 மில்லி
    கிரீம் -  500 கிராம்
    பெர்ரீஸ் -  50 கிராம்
    டார்க் சாக்லேட் -  200 கிராம்
    ஃப்ரஷ் கிரீம் -  100 மில்லி லிட்டர்

    செய்முறை


    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அதனுடன் முட்டை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதனுள் கோகோ பவுடர் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.

    அடுத்து அதில் கிரீம் மற்றும் காபியை சாக்லேட் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    இந்த கலவையை ஒரு மோல்டில் ஊற்றி இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைக்கவும்.

    சாக்லேட் மற்றும் கிரீம் கொண்டு சாக்லேட் ட்ரஃபில் தயார் செய்யவும்.

    மோல்டில் இருப்பதை அகற்றி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்த சாக்லேட் ட்ரஃபிலை ஊற்றவும்.

    அதன்மேல் ராஸ்பெர்ரி மற்றும் ப்ளேட்டிங் வைத்து அலங்கரிக்கவும்.

    சூப்பரான சாக்லேட் மார்குயுஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி எளிமையாக செய்யக்கூடியது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பருப்பு கீரை  - 1 கட்டு
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    அரிசி - 1 1/2 கப்
    பருப்பு - 1 கப்
    சீரகம் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய் - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1 டம்ளர்

    செய்முறை

    தக்காளி, ப.மிளகாய், வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

    அடுப்பில் ப்ரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

    அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும்.

    இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.

    இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பருப்பு கீரை கிச்சடி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கத்தரிக்காய் - கால் கிலோ
    கேரட் - 2
    குடை மிளகாய் - 2
    பச்சை பட்டாணி - 2/4 கப்
    பெரிய அளவு வெங்காயம் - 1
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
    தயிர் - 2 மேஜைக்கரண்டி
    பட்டை - 2
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
    தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    தேங்காய் பால் - அரை கப்
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - 1 அரை தேக்கரண்டி

    செய்முறை:

    காய்களை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

    பட்டை, கிராம்பு, ஏலக்காயை மிக்ஸியில் பொடி செய்துக் கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.

    பிறகு கத்தரிக்காய், கேரட் சேர்த்து வதக்கவும்.

    தயிர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் வற்றியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    பிறகு தனியாத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

    இப்போது குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

    காய்கள் வெந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்ட செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 6,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - சிறிதளவு. 

    செய்முறை:

    பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

    இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

    உடலுக்கும் மிகவும் நல்லது இந்த நெல்லிக்காய் சட்னி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் விரும்பும் ஹோட்டல் ஸ்டைல் சில்லி பிரெட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரெட் ஸ்லைஸ் - 10
    தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
    சிவப்பு கேசரி கலர் - சிறிதளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    எலுமிச்சை ஜுஸ் - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கீறிய பச்சை மிளகாய் - 3
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    நெய் - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :


    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிரெட்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வாணலியில் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவேண்டும்.

     வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    பின்னர் வறுத்த பிரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

    பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான சில்லி பிரெட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இயற்கை முறையிலேயே எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொப்பையை குறைக்க உதவும் டீ எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    தண்ணீர் - 250 மில்லி
    பட்டை - ஒரு துண்டு
    மிளகு - 10
    மஞ்சள் - சிறிதளவு
    இஞ்சி - ஒரு துண்டு

    செய்முறை:

    250 மில்லி தண்ணீர் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். அதன் பின் எடுத்து வைத்திருக்கும் மிளகை இடித்து தண்ணீரில் போடுங்கள்.

    அதன்பின் சிறிதளவு பட்டையை இந்த தண்ணீரில் பொடித்து போடுங்கள்.

    இவற்றை தண்ணீரில் போட்டு சிறு தீயில் வைத்து தண்ணீரை கொதிக்க விடுங்கள்.

    அதன் பின் மஞ்சள் தூளை எடுத்து நன்கு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் போடுங்கள்.

    இந்த மஞ்சளை தண்ணீரில் போட்ட பிறகு ஒரு சிறு துண்டு இஞ்சி எடுத்து நீங்கள் இந்த டீயை குடிக்க இருக்கும் டம்ளரில் சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள்.

    அதன்பின் கொதிக்க வைத்த தண்ணீரை இந்த டம்ளரில் ஊற்றி விட்டு பத்து நிமிடம் களித்து இந்த தண்ணீரை அருந்துங்கள்.

    இதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். அப்படி முடியாதவர்கள் இரவு தூங்க செல்லும் முன் கூட அருந்தலாம்.

    அதுமட்டுமல்லாமல் இடுப்பு, கால், கழுத்து பகுதிகளில் இருக்கும் வலி குறையும். இதனை பால் கொடுக்கும் தாய்மார்களும் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு குடிக்கலாம். நீரழிவு நோயாளிகளும் இதனை குடிக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டனில் குழம்பு, கிரேவி, வறுவல், பிரியாணி என பலவகையான ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இன்று சுவையான மட்டன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 1/4 கிலோ
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 10 பல்
    தேங்காய் துருவல் - கால் கப்
    பொட்டுக்கடலை - 1/2 கப்
    சோம்பு - 1 ஸ்பூன்
    கசகசா - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1ஸ்பூன்
    மல்லி தூள் - 1/4 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
    பட்டை - 4 துண்டு
    கிராம்பு - 6
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கறியுடன் உப்பு, மஞ்சள், தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

    பெரிய வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுத்து வாணலியில் சோம்பு , பொட்டுக்கடலை, கசகசா சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்

    வேக வைத்த மட்டனை உதிர்த்து, பொட்டுக்கடலை பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிய பின்னர் அதில் பிசைந்து வைத்த மட்டனை சேர்த்து கிளறவும்.

    நன்கு உதிரியாக வந்ததும்  எலுமிச்சை சாறி பிழிந்து இறக்கினால் சுவையான மட்டன் பொடிமாஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் பி, சி, கால்சியம், இரும்புச்சத்து என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்து இருப்பதால் எலும்பு வலுவடையும், உடல் ஆரோக்கியம் உயரும்.
    தேவையான பொருட்கள்

    பூசணிக்காய் - சிறிய துண்டு
    தேங்காய் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி - சிறிய துண்டு
    இந்துப்பு - தேவையான அளவு

    செய்முறை


    பூசணிக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய பூசணிக்காய், தேங்காய், கறிவேப்பிலை, இஞ்சி, இந்துப்பு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பருகவும்.

    சத்தான பூசணிக்காய் ஜூஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×