என் மலர்tooltip icon

    சமையல்

    மெது வடை என்றால் யாருக்கேனும் பிடிக்காமல் இருக்குமா என்ன? இன்று ரொம்பவும் சுவையான ஆலு மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உளுந்து - 100 கிராம்
    உருளைக் கிழங்கு - 3
    அரிசி மாவு - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 100 கிராம்,
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு
    இஞ்சி - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    உளுந்தினை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    வெங்காயம். ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துகொள்ளவும்.

    அடுத்து மிக்சியில் உளுந்தினை சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்.

    அடுத்து வேகவைத்த உருளைக் கிழங்கினையும் அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து, உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, அரிசி மாவு சேர்த்துவடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு மொறு மொறு என்று பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மொறு மொறு ஆலு மெது வடை ரெடி!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டை கொண்டு விதவிதமான பலகாரங்களை செய்து கொடுத்து அவர்களை குஷிப்படுத்தலாம். இன்று ராகி, டார்க் சாக்லேட் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    டார்க் சாக்லேட் - 100 கிராம் (தூளாக்கவும்)
    ராகி மாவு - அரை கப்
    முட்டை - 2
    சர்க்கரை - தேவைக்கு
    வெண்ணெய் - அரை கப்
    பேக்கிங் பவுடர் - சிறிதளவு

    செய்முறை:

    மைக்ரோ ஓவனை 100 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து அதில் சாக்லேட்டை வைத்து உருக்கி தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

    கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் உருக்கிய சாக்லேட், வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.

    அதனுடன் ராகி மாவு மற்றும் பேக்கிங் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.

    பின்னர் டிரேயில் ஊற்றி மைக்ரோ ஓவனில் 150 டிகிரி வெப்பநிலையில் கால் மணி நேரம் வைத்து எடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ராகி டார்க் சாக்லேட் கேக் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு நலம் சேர்க்கும் சிறுதானிய இனிப்பு பலகாரங்களை தயாரித்து சுவைக்கலாம். இன்று சோளப் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோள மாவு - அரை கப்
    உளுந்து மாவு - கால் கப்
    தூளாக்கிய வெல்லம் - கால் கப்
    பேரிச்சம்பழம் - 6 (சிறிதாக நறுக்கவும்)
    சமையல் சோடா - சிறிதளவு
    ஏலக்காய் - கால் தூள் டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் சோளமாவை போட்டு அதனுடன் உளுந்துமாவையும் ஒன்றாக சேருங்கள்.

    பேரீச்சம்பழத்தையும் கலந்திடுங்கள்.

    அகன்ற பாத்திரத்தில் வெல்லத்தை கொட்டி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.

    அதனுடன் சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும்.

    பின்பு உளுந்து - சோள மாவு - பேரீச்சம் பழம் கலந்த கலவையும் வெல்ல கரைசலுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

    அதனை அரை மணி நேரம் அப்படியே வைத்திருங்கள்.

    பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி மாவு கரைசலை ஊற்றி பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.

    சூப்பரான சோளப் பணியாரம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு கேசரி மோதகம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த மோதகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 200 கிராம்
    தண்ணீர் - 150 மில்லி லிட்டர்
    உப்பு - ஒரு சிட்டிகை
    நெய் - 30 கிராம்
    துருவிய தேங்காய் - 150 கிராம்
    வெல்லம் - 150 கிராம்
    ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
    வறுக்கப்பட்ட முந்திரி - தேவையான அளவு
    உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
    குங்குமப்பூ - சிறிதளவு

    செய்முறை

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். அத்துடன் உப்பு, ஒரு தேக்கரண்டி, குங்குமப்பூ மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறவும்.

    ஒரு ஈரத்துணியால் இந்த மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    ஒரு கடாயில் நெய் சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும்.

    எல்லாவற்றையும் நன்கு கலந்து அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்க்கவும்.

    கையில் எண்ணெய் தடவி கலந்து வைத்த மாவை எடுத்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவை கையில் எடுத்து தட்டி அதில் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்த கலவையை வைத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வைத்து கொள்ளவும்.

    மாவின் உள்ளே இந்த இனிப்பு கலவையை வைத்து அதன் ஓரத்தை மூடிவிட வேண்டும். இந்த மோதகம் காய்ந்து போகாமல் இருக்க ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.

    இட்லி தட்டில் வாழை இலைகளை வைத்து, பிடித்து வைத்த மோதகத்தை அதில் வைத்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும்.

    சூப்பரான கேசரி மோதகம் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 10
    மோர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    ப.மிளகாய் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    புதினா மற்றும் கறிவேப்பிலை பேஸ்ட் - 1/2 tsp

    நெல்லிக்காய் மோர்

    செய்முறை :

    ப.மிளகாய், இஞ்சியை கொரகொரப்பாக தட்டிக்கொள்ளவும்.

    பெரிய நெல்லிக்காய்களை சிறு துண்டுகளாக கொட்டைகளை நீக்கி நறுக்கிக்கொள்ளுங்கள்.

    பின் அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வடிகட்ட ஜூஸ் மட்டும் எடுத்து கொள்ளவும்.

    தற்போது அந்த ஜூஸை மோருடன் கலந்துகொள்ளுங்கள்.

    பின் அதனுடன் கொரகொரப்பாக தட்டிய ப.மிளகாய், இஞ்சி, புதினா, கறிவேப்பிலை பேஸ்டை கலந்து , உப்பு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

    தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் போட்டு குடிக்கலாம்.

    ஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள். அளவுக்கு அதிகமாக குடித்தால் இதுவும் நஞ்சுதான்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் மீதமான இட்லியை வைத்து மாலையில் சுவையான மசாலா இட்லி செய்யலாம். இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    இட்லி - 8
    பட்டை, சோம்பு, ஏலக்காய் - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    சிவப்பு நிறமூட்டி- சிறிதளவு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    வெள்ளை உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - 9

    செய்முறை:

    இட்லிகளை ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, பச்சைமிளகாய் இஞ்சி, பட்டை சோம்பு மசாலாப் பொருட்களைச் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.

    தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்து பின் அரைத்தக் கலவையை போட்டு பச்சை வாடை போக வதக்கவும்.

    இதனுடன் நறுக்கிய இட்லித்துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்க சுவையான மசாலா இட்லி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க விரும்பினால் பேபி கார்ன், காளான் சேர்த்து சூப் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பேபி கார்ன் - 1 கப்
    தண்ணீர் - 4 கப்
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    முட்டைக்கோஸ் - சிறிதளவு
    காளான் - 10
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
    சோள மாவு கரைசல் - 4 மேஜைக்கரண்டி
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    உப்பு - சுவைக்க

    பேபி கார்ன் காளான் சூப்

    செய்முறை

    பேபி கார்னை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    காளானை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும்.

    அடுத்து அத்துடன் பேபி கார்ன் மற்றும் காளான், உப்பு மற்றும் மிளகு சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளவும்.

    அதில் சோயா சாஸ், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் சேர்க்கவும்.

    இந்த கலவை கெட்டியாக வரும்வரை கிளறி பின் அதில் கொத்தமல்லி இலை, முட்டைக்கோஸ் சேர்க்கவும்.
    .
    அடுப்பை நிறுத்திவிட்டு பின் சூடாக பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் 65, கோபி மஞ்சூரியனுக்கு மாற்றாக பன்னீர், முட்டை, பேபி கார்ன், சோயா ஆகியவற்றை பயன்படுத்தி ‘65’ ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் பேபி கார்ன் - 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபி கார்ன் - 10 கதிர்கள்
    சாட் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் -கால் கப்
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
    சமையல் சோடா - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    பேபி கார்ன்

    செய்முறை:

    பேபி கார்னை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, சோள மாவு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சமையல் சோடா, எலுமிச்சை சாறு போன்றவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்

    இந்த கலவைக்குள் பேபி கார்னை புரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

    அதன் மீது சாட் மசாலாவை தூவி ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் - 65 ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும்.
    தேவையான பொருட்கள்

    மணத்தக்காளி கீரை- 1 கப்
    மணத்தக்காளி விதை- 2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம்-6
    தக்காளி - 1
    பூண்டு- 1
    தேங்காய் பால் - 1 கப்

    மணத்தக்காளி கீரை

    செய்முறை :

    மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், இடித்து வைத்த பூண்டு போட்டு வதக்கவும்.

    பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
     
    அனைத்து லேசாக வதக்கினால் போதும்.

    வதங்கியதும் தேங்காய்பால் சேர்த்து கொதி வந்ததும் விதை, கீரையை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு போதுமான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக சாப்பிடலாம்.

    சூடான சத்தான மணத்தக்காளி கீரை சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான வால்நட் பிரவுனியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 500 மிலி
    மைதா மாவு - 750 கிராம்
    பேக்கிங் பவுடர் - 10 கிராம்
    பேக்கிங் சோடா - 10 கிராம்
    வால்நட் - 220 கிராம்
    டார்க் சாக்லேட் - 360 கிராம்
    வெண்ணெய் - 360 கிராம்
    சர்க்கரை - 260 கிராம்
    பிரவுன் சுகர் - 260 கிராம்

    வால்நட் பிரவுனி

    செய்முறை

    வெண்ணெய், சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கிரீம் பதத்தில் நன்றாக கலந்து கொள்ளவும்.

    சாக்லேட்டை உருக்கி, அதை இந்தக் கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மாவு, வால்நட், பேக்கிங் சோடா ஆகியவற்றை இதில் கலந்து, நன்றாக பிசையும்.

    இந்தக் கலவையை, பேக்கிங் டிரேவில் வைத்து, 35 நிமிடங்களுக்கு 175 டிகிரி செல்சியசில் சமைக்கவும்.

    விருப்பமான வடிவங்களில், வால்நட் பிரவுனியை வெட்டி, வெனிலா ஐஸ்கிரீமுடன் பரிமாறவும்.

    சூப்பரான வால்நட் பிரவுனி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவகேடோ பழமானது மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகளைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது கொழுப்பினைக் குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்போது நாம் அவகேடோ மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவகேடோ பழம் - 3
    தேன் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    குளிர்ந்த பால் - 2 டம்ளர்
    ஐஸ் கட்டிகள் - 3

    அவகோடா

    செய்முறை:

    அவகேடோ பழத்தை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும்.

    அடுத்து மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன் அல்லது நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

    டேஸ்ட்டியான அவகேடோ மில்க் ஷேக் ரெடி.

    இது உடலுக்கு ஆரோக்கியமும் தரும். அதேநேரத்தில் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் செய்யும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அருமையான சில்லி நண்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நண்டு - அரை கிலோ
    பூண்டு - 10 பல்
    உப்பு - தேவையான அளவு
    தக்காளி - 2
    சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
    சோளமாவு - 2 மேசைக்கரண்டி
    அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
    முட்டை - ஒன்று

    சில்லி நண்டு
     
    செய்முறை :

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

    நண்டை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கின பூண்டினைப் போட்டு வதக்கவும்.

    அத்துடன் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளைப் போட்டு வேகவிடவும். நீரின் அளவு, நண்டு துண்டங்கள் முழுவதும் நனையும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

    அடுத்து அதில் தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், இவையனைத்தையும் கொதிக்கும் குழம்பில் போடவும்.

    ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

    சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு, குழம்பினைக் கெட்டியாக்க அதில் சோளமாவினைச் சேர்க்கவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனையும் குழம்பில் சேர்க்கவும்.

    சற்று நேரத்தில் குழம்பு கெட்டியானவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.

    சூப்பரான சில்லி நண்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×