என் மலர்tooltip icon

    சமையல்

    நாண், புலாவ், இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு என அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - ஒரு கிலோ
    முழு தேங்காய் ( சிறியது) - ஒன்று
    பெரிய வெங்காயம் - 2 (பெரியது)
    தக்காளி - 2 (பெரியது)
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
    மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
    கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
    எண்ணெய் - 3 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை
     
    வெங்காயம், தக்காளியை தனித்தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

    அனைத்து பொடி வகைகளுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

    தேங்காயை அரைத்து 2 கப் பால் எடுத்து வைக்கவும்.

    சிக்கனை கழுவி சுத்தம் செய்து பொடி வகைகளை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்க்கவும்.

    தக்காளி வதங்கியதும் பிசறி வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்.

    சிறிது நேரம் வேக விடவும். சிக்கனில் இருக்கும் தண்ணீரே போதும் வேண்டுமெனில் சிறிது சேர்க்கலாம்.

    சிக்கன் தண்ணீர் வற்றியதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    சுவையான சிக்கன் தேங்காய் பால் கிரேவி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    யுகாதி பண்டிகை தினமான இன்று இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அதில் வேப்பம் பூ பச்சடி முக்கிய அம்சமாகும்.
    தேவையான பொருட்கள்:

    வேப்பம்பூ - 1 கைப்பிடி அளவு
    காய்ந்த மிளகாய் - 3
    புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
    மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டீ ஸ்பூன்
    பெருங்காயத்தூள் சிறிதளவு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கடுகு - 1/2 டீ ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

    செய்முறை:

    வேப்பம்பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வேப்பம்பூ போட்டு மிதமான தீயில் கருஞ்சிவப்பாக வறுத்துக் கையால் நொறுக்கிப் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    பின் வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்துப் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்.

    உப்பு போட்டு நன்கு கொதித்ததும் வெல்லம் போட்டுக் கிளறவும்.

    இறுதியில் வெல்லம் கரைந்ததும் அதில் வேப்பம் பூவை கொட்டி கிளறவும்.

    பின்னர் பச்சடி கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கைக் கொண்டு பலவாறு குழம்புகள் செய்யலாம். அந்த வகையில் குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி சற்று வித்தியாசமாக இனிப்பு, காரம் மற்றும் புளிப்பு போன்ற சுவைகள் கலந்து இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 500 கிராம் (சிறியது மற்றும் நறுக்கியது)
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும்.

    சர்க்கரையானது கரைந்து, பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
    பின்பு அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளற வேண்டும்.

    பின் உருளைக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, தயிர் சேர்த்து மீண்டு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

    உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    இப்போது சுவையான குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீங்கள் இட்லி, தோசைக்கு ஏற்கனவே பல பொடிகளை பயன்படுத்தி வருபவர்கள் என்றால், ஒரு மாற்றத்திற்கு இந்த டேஸ்டியான சத்தான எள்ளுப் பொடியை ஒரு முறை முயற்சிக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெள்ளை எள் – 1 கப்
    உளுந்தம்  பருப்பு – 3/4 கப்
    கடலை பருப்பு – ¼ கப்
    காய்ந்த மிளகாய் – 7
    கறிவேப்பிலை – 10-12
    பெருங்காயம் – ½ தேக்கரண்டி
    உப்பு – தேவையான அளவு.

    எள்

    செய்முறை

    அடுப்பில் குறைந்த அளவு தீ வைத்து, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகிய இரண்டையும், தனித்தனியாக, அவற்றின் கலர் மாறும் வரை வறுக்கவும்.

    பின்னர் அவற்றோடு காய்ந்த மிளகாயை போட்டு, அதன் மணம் வரும் வரை வறுக்கவும்.

    தொடர்ந்து கறிவேப்பிலை அதில் இட்டு, சிறிது சுருட்டத் தொடங்கும் வரை வறுக்கவும்.

    இறுதியாக, எள்ளை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வறுக்கவும்.

    இப்போது அடுப்பை அனைத்து, பெருங்காய பொடியை சேர்க்கவும்.

    அது எள் பொடியில் உள்ள சூட்டில் நல்ல மணம் கொடுக்கும். அவற்றை கலந்த பின்னர், நன்றாக குளிவிக்கவும். பின்னர் அவற்றை எடுத்து தூளாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    பொடியை நன்றாக அரைத்த பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்த, தேங்காய் எண்ணெயுடன் தோசை, இட்லிகளுடன் பரிமாறவும்.

    பின்குறிப்பு:

    வெள்ளை எள் விதைகளுக்கு பதிலாக கருப்பு எள் விதைகளைப் நீங்கள் பயன்படுத்தலாம். கருப்பு எள் பயன்படுத்தும் போது பொடி கருப்பானதாக இருக்கும். மற்றும் சுவை மிகவும் வலுவாக இருக்கும்.

    காரம் அதிகம் சேர்ப்பவராக இருந்தால், கூடுதலாக சில சிவப்பு மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.

    நீங்கள் பொருட்களை வறுக்கும் போது குறைந்த தீயில் வைத்து வறுக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாம்பழ சீசன் முடிவதற்குள்ளே என்னென்ன வித்தியாசமான ரெசிபிகளை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து சுவைக்கலாம். இன்று சூப்பரான மாம்பழ சீஸ் கேக் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பிஸ்கட்  - 1/2 பாக்கெட்
    வெண்ணெய்  - 10 கிராம்
    சீஸ் - 50 கிராம்
    தயிர் -  2 டேபிள் ஸ்பூன்
    பொடித்த சர்க்கரை - 100 கிராம்
    மாம்பழச் சாறு - 1/2 கப்
    மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு
    ஜெலடின் - 1 ஸ்பூன்
    லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்

    செய்முறை:

    வெண்ணெயை உருக்கி அதனுடன் பிஸ்கட்டை பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.

    இதை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.

    ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், சீஸ், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு பாத்திரத்தில் அல்லது மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.

    கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த வார ரெசிபி ரொம்பவும் சுலபமானது. பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இந்த ஃப்ரூட் கபாப்பை விரும்பி சாப்பிடுவார்கள்.
    இந்த வார ரெசிபி ரொம்பவும் சுலபமானது. அதேசமயம் வண்ணமயமானது. வீட்டில் இருக்கும் பழங்கள்தான் இந்த ரெசிபியின் முக்கிய பொருட்கள். வீட்டு பிரிட்ஜில் இருக்கும் பழங்களை எல்லாம் எடுத்து கொள்ளுங்கள்.

    ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், ஆரஞ்சு, திராட்சை, கொய்யா, பப்பாளி, கிவி இதில் எதுவாக இருப்பினும் அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கியும் அல்லது தேவைக்கு ஏற்க முழு பழங்களாக வைத்தும், இந்த ரெசிபியை தயாரிக்கலாம்.

    கபாப் குச்சியில் பழங்களை வரிசையாக அடுக்கி வைத்தால், ஃப்ரூட் கபாப் ரெடி.
    மீல்மேக்கரில் வடை செய்து மாலை வேளையில் காபி அல்லது டீயுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த மீல்மேக்கர் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 1 கப்
    கடலை மாவு - 1 கப்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    மட்டன் மசாலா - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    மீல்மேக்கர்

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பின் ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    அதற்குள் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைத் தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின் அரைத்த மீல் மேக்கரை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    இறுதியில் இந்த கலவையை வடைகளாக தட்டி, அடுப்பில் உள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீல்மேக்கர் வடை ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைக்காயில் கூட்டு, பொரியல், வறுவல் என்று செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைக்காயில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைக்காய் – 2
    தேங்காய் துருவல் – கால் கப்
    வரமிளகாய் – 5
    சாம்பார் வெங்காயம் – 10
    பூண்டு – 4 பல்
    சீரகம் – 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை – சிறிதளவு
    உப்பு – தேவைக்கேற்ப
    புளி – தேவைக்கேற்ப
    எண்ணெய் – ½ டீஸ்பூன்

    வாழைக்காய் சட்னி

    செய்முறை

    வாழைக்காயை தோல் நீக்கி நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் , பூண்டு, சாம்பார் வெங்காயம், புளி, தேங்காய் துருவல் போட்டு தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள

    மிக்சியில் வறுத்த பொருட்களை போட்டு அதனுடன் சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்றாக அரைக்கவும்.

    கடைசியாக உப்பு, வேக வைத்த வாழைக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

    இப்பொழுது வாய்க்கு சுவைமிக்க வாழைக்காய் சட்னி ரெடி…

    இதை… இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கரம் மசாலா பொடியை கடையில் வாங்கி உபயோகித்து இருப்பீங்க. இன்று வீட்டிலேயே சுலபமான முறையில் கரம் மசாலா பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம்
    பட்டை - 10 கிராம்
    கிராம்பு - 10 கிராம்
    அன்னாசிப்பூ - 10 கிராம்
    ஏலக்காய் - 10 கிராம்

    செய்முறை

    எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும்.

    அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.

    நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும்.

    பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    அவல், மோர் சேர்த்து குடித்தால் இந்த கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அவல் - ஒரு கப்
    சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2 (கீறவும்)
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு - அரை டீஸ்பூன்
    உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    புளித்த தயிர் - ஒரு கப்
    தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

    தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்).

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

    கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சுலபமான முறையில் இறால் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - கால் கிலோ
    பாசுமதி அரிசி - 4 கப்
    வெங்காயம் - 4
    முட்டை - 4
    பூண்டு - 1 டீஸ்பூன்
    கேரட் - 1
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    மீன் சாஸ் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - 1 கட்டு

    செய்முறை:


    கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறாலை கொட்டி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதனுடன் பூண்டை சேர்த்துக்கொள்ளவும்.

    அடுத்து கேரட்டையும் சேர்த்து வதக்கவும்.

    முட்டையையும் ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறி விடவும்.

    நன்கு வெந்ததும் வேக வைத்த சாதத்தை கொட்டி கிளறவும்.

    அதனுடன் சோயா சாஸ், மீன் சாஸ், மிளகுத்தூள், வெங்காயம், வெங்காய்த்தாள் போன்றவற்றை கலந்து வேகவிடவும்.

    அவை வெந்து பிரைடு ரைஸ் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

    சூப்பரான இறால் பிரைடு ரைஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இலந்தை உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடியது. முதுகு வலி, ஆஸ்துமா, கண் பிரச்சனைகள் அகல, ரத்த அழுத்தத்தை குறைக்க, தலைவலி குணமாக என பல விதங்களிலும் இலந்தை உதவுகிறது. உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    இலந்தை பழம் - 1 கப்
    வெல்லம் - கால் கப்
    பச்சை மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு - சிறிதளவு

    செய்முறை :

    முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    பிறகு இலந்தைபழம், பெருங்காயம், உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.

    சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் காய விடவும்.

    அடுத்த நாள் அற்புதான ருசியில் இலந்தை அடை தயார்.

    கைகளால் உரலில் இடித்து செய்தால் கூடுதல் ருசி கொண்ட பதார்த்தமாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×