என் மலர்tooltip icon

    சமையல்

    மீனில் குழம்பு, வறுவல் என்று எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் இன்று வித்தியாசமான முறையில் மீன் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
    தேவையான பொருட்கள்

    சதைப்பிடிப்புள்ள மீன் - 200 கிராம்
    உருளைக்கிழங்கு - 200 கிராம்
    உலர்ந்த ரொட்டித்தூள் - 1 கப்
    நெய் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை பழச்சாறு -  1 டீஸ்பூன்
    மைதா மாவு -  1 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு
    மிளகுத்தூள் - அரை  டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை  டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    மீன் மற்றும் உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    மீனின் தோல், முள் ஆகியவற்றை நீக்கி, உருளைக்கிழங்கை தோலை அகற்றி நெய் விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    மீனை உதிர்த்து விட்டு அத்துடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சைபழச்சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

    சப்பாத்தி பலகையில் மைதா மாவை தூவி, பிசைந்த மீன் கலவையை வைத்து 2 செ.மீ கனத்துக்கு நீளமாக வெடிப்பு இல்லாமல் உருட்ட வேண்டும். பின்னர் அதை 6 அல்லது 8 துண்டுகளாக நறுக்கவும். அதன் பின் ஒவ்வொரு துண்டும் சம அளவில் இருக்குமாறு தட்ட வேண்டும்.

    ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கெட்டியான குழம்பு போல கரைத்து கொள்ள வேண்டும். அதில் மீன் துண்டுகளை நன்றாக தோய்த்து அதை ரொட்டி தூளில் அழுத்தமாக புரட்டி எல்லா பக்கமும் படியுமாறு செய்ய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மீன் துண்டுகளை போட்டு பொரித்துஎடுக்கலாம் அல்லது தோசைக்கல்லை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக வேக வைத்தும் எடுக்கலாம்.

    சுவை மிகுந்த மிருதுவான மீன் கேக் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம் - கால் கப்,
    இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
    சின்ன வெங்காயம் - 5,
    புளி - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 5,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும்.

    பின்னர் அதனை ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.

    சூப்பரான சட்னி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டிராகன் ஃப்ரூட் நார்சத்து மிகுந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மூச்சுத் திணறலுக்கு நல்லது. சுவாசத்தை சரி செய்யும்.
    தேவையான பொருட்கள்

    மில்க் மெய்ட் - 4 டேபிள் ஸ்பூன்,
    டிராகன் பழம் (துரியன்) - 1 (தோல் சீவி நறுக்கி வைத்துக்கொள்ளவும்),
    சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,
    குளிர்ந்த பால் - 1 கப்,
    ஐஸ்கட்டி - தேவையெனில்,
    டிராகன் (துரியன்) - 2 துண்டு அலங்கரிக்க.

    செய்முறை

    மிக்சியில் டிராகன் பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

    பின் அதில் மில்க்மெய்ட், சர்க்கரை, பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து ஐஸ்கட்டி போட்டு டிராகன் பழத்தைக் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
    தேவையான பொருட்கள்

    மணத்தக்காளிக் கீரை  - 2 பிடி
    மிளகு -  ¼ டீஸ்பூன்
    சீரகம்  - ¼ டீஸ்பூன்
    பச்சை மிளகாய் -1 (விரும்பினால்)
    சின்ன வெங்காயம்  - 10
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    உப்பு  - தேவையான அளவு.

    தாளிக்க

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

    செய்முறை  

    மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் எடுத்து கொள்ளவும்.

    கீரையை சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம் மாறாது அவித்து எடுங்கள்.

    மிக்சியில் வதக்கிய கீரை, மிளகு, சீரகம், தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், ப.மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான மணத்தக்காளி கீரை சட்னி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஐயங்கார் வீட்டு சாம்பார் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். சரி வாங்க இன்று ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி எப்படி திரிக்கிறதுன்னு பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தனியா - அரை கிலோ
    குண்டு மிளகாய் - கால் கிலோ
    துவரம்பருபு்பு - 200 கிராம்
    கடலைப்பருப்பு - 100 கிராம்
    மிளகு - 50 கிராம்
    வெந்தயம் - 20 கிராம்
    விரளி மஞ்சள் - 50 கிராம்

    பதப்படுத்தும் முறை

    மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். அதுவே மழைக்காலமோ பனி காலமாகவோ இருந்தால் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே உலர்த்தி, தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

    சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள்.

    பொடி அரைக்கும்முன் மில்லில் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. இந்த சாம்பார் பொடி அரைப்பதற்கு முன்னால் அந்த மெஷினில் வேறு ஏதேனும் சுாம்பு கலந்து பொடி அரைக்கப்படாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

    அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்காதீர்கள். அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகை எந்த வடிவிலாவது உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு அவல் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு அவல் - அரை கப் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்)
    ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
    மாதுளை முத்துக்கள் - கால் கப்
    வெள்ளரிக்காய், கேரட் - தலா ஒன்று
    தக்காளி - ஒன்று
    பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    வெள்ளரிக்காய், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை அலசி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பிறகு தண்ணீரை ஒட்டப் பிழிந்துவிட்டு ஃப்ரெஷ் க்ரீமில் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    இதில் நறுக்கிய கேரட், வெள்ளரி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய தக்காளி, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து கூலாகப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கேழ்வரகு அவல் வெஜிடபிள் சாலட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை குழிப்பணியாரத்தை காலையில் டிபன் போன்றும் சாப்பிடலாம், மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - ஒரு கப்
    முட்டை - 2
    சின்ன வெங்காயம் - 15
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கடுகு - கால் தேக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    முட்டை குழிப்பணியாரம்

    செய்முறை


    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

    பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கவும்

    முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.

    இட்லி மாவுடன் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும்.

    பிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

    வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.

    அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.

    முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

    குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.

    பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

    முட்டைப் பணியாரம் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மங்குஸ்தான் பழத்தில் சத்து மிக அதிகம். இந்த ஜூஸ் நமது தோலை பாதுகாக்கும். நம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கற்றாழை உடம்பை மிகவும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    மங்குஸ்தான் - 1/4 கப் (சதை மட்டும்),
    கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்,  
    தேன் - தேவைக்கேற்ப,
    குளிர்ந்த நீர் - 100 மில்லி.

    செய்முறை

    மங்குஸ்தானை உரித்து உள்ளே உள்ள பழத்தை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    கற்றாழையை வெட்டி உள் இருக்கும் சதையை எடுத்து நன்கு கழுவி வைக்கவும்.

    மிக்சியில் மங்குஸ்தானையும், கற்றாழையையும், தேனையும் சேர்த்து நன்கு அரைத்து பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐஸ்கட்டி போட்டு பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    லிச்சி பழத்தில் அதிகமான நார்சத்து, விட்டமின் - `B’ நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் சீக்கிரமே வயதான தோற்றம் அடைவதை தடுக்கிறது. லிச்சி லெமனேட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    லிச்சி - 12-15 (சதையை எடுத்து வைக்கவும்),
    தண்ணீர் - 2 கப்,
    எலுமிச்சை சாறு - 1 சிறியது,
    உப்பு - 1 சிட்டிகை,
    சர்க்கரை - தேவைக்கேற்ப,
    புதினா இலை - அலங்கரிக்க,
    எலுமிச்சை - சீவியது அலங்கரிக்க.

    செய்முறை

    மிக்சியில் முதலில் லிச்சியை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

    இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர், சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஊற்றி நன்கு கலந்து ஐஸ்கட்டி போட்டு புதினா, எலுமிச்சை பழத்தைக்கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    லிச்சி பழத்தில் அதிகமான நார்சத்து, விட்டமின் - `B’ நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் சீக்கிரமே வயதான தோற்றம் அடைவதை தடுக்கிறது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. கொத்தமல்லி இலை நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். வாயு பிரச்சனையை குணமாக்கும்.
    தேவையான பொருட்கள்:

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    பூண்டு - 6 பற்கள்
    கொத்தமல்லி - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு…

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பின் கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.

    பின் மிக்ஸியில் அந்த வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சின்ன வெங்காய கொத்தமல்லி சட்னி ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே பலாப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பலாப்பழம் (கொட்டை நீக்கியது) - 100 கிராம்,
    தேங்காய்ப்பால் - 50 மில்லி,
    வெல்லம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன் அல்லது கரும்பு - 1/4 கப்,
    முந்திரி பொடியாக நறுக்கியது - மேலே அலங்கரிக்க.

    செய்முறை

    பலாப்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் பலாப்பழம் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

    பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும்.

    பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    தேவையெனில் பொடியாக நறுக்கிய பலாப்பழ துண்டுகளைத் தூவியும் பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த டீயை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும்.
    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லி விதை - 100 கிராம்,
    ஏலக்காய் - 2,
    பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்,
    பால் - அரை டம்ளர்.

    செய்முறை :

    தனியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் பொடித்து கொள்ளவும்.

    பாலை கொதிக்க வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு டீஸ்பூன் தனியா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    நன்றாக கொதித்து வரும் போது ஏலக்காய் தட்டிச் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி பால், பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துப் பருகவும்.

    இந்த டீயை பால் ஊற்றாமல் குடித்தால் மிகவும் நல்லது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×